Khub.info Learn TNPSC exam and online pratice

வாய்க்கால்கள் -- CANALS

Q1. வாய்க்கால் (கால்வாய்) என்பது என்ன?
ஒரு குறுகிய அகலம் கொண்ட நீரோட்டம், நீர்ப்போக்கை பிரித்து விடவோ அல்லது பயண தூரம் மற்றும் நேரத்தைக் குறைப்பதற்காக ஏற்படுத்தப்படும் ஒரு நீர்ப்போக்கு.

Q2. உலகில் பயணத்திற்காக ஏற்படுத்தப்பட்ட புகழ் பெற்ற வாய்க்கால் எது?
சூயஸ் கால்வாய் -- எகிப்து நாட்டில் சினாய் தீபகற்பத்தில் அமைந்துள்ளது.
Q3. சூயஸ் கால்வாய் எந்த நீர்நிலைகள இணைக்கிறது?
மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலையும் இணைக்கிறது.
Q4. சூயஸ் கால்வாய் திட்டத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை அமைக்கத் தூண்டிய நவீன கால ராணுவ தளபதி யார்?
1799ல் எகிப்து பகுதியை கைப்பற்றிய பிறகு, நெப்போலியன் இத்திட்டத்தை முன்வைத்தார். ஆனால் பொருளாதார காரணங்களுக்காக தள்ளி வைத்தார்.
Q5. சூயஸ் கால்வாயை வடிவமைத்து உருவாக்கியவர் யார்?
ஃப்ரான்ஸ் நாட்டு பொறியாளர் ஃபெர்டினாண்ட் டி லெஸாப்ஸ் என்பவர் -- 1869ல்.
Q6. சூயஸ் கால்வாயின் நீளம் அகலம் என்ன?
நீளம் 193.3 கி.மீ; அகலம் 380 அடி ; ஆழம் 35 அடி.
Q7. எந்த உடன்படிக்கைப்படி, சூயஸ் கால்வாய் அனைத்து காரணங்களுக்காகவும் பயன்படுத்தப் படுகிறது?
கான்ஸ்டாண்டிநோபிள் உடன்படிக்கை -- மார்ச் 1888. இந்த உடன்படிக்கைப்படி, பயணம் மற்றும் போர்க் காலங்களில் இந்த கால்வாய் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
Q8. சூயஸ் கால்வாய் மீது, எகிப்து நாட்டின் எந்த தலைவரின் நடவடிக்கையால், 1956ல் எகிப்துக்கும் இங்கிலாந்துக்குமிடையே போர் ஏற்படும் ஒரு தருணம் ஏற்பட்டது?
சூயஸ் கால்வாய் மீது யாருக்கு உடைமை உண்டு என்ற ஒரு சர்ச்சையில், எகிப்தின் அப்போதைய தலைவர் அப்துல் நாஸர் சூயஸ் கால்வாயை தேசிய மயமாக்கியதால் இந்த நிலைமை ஏற்பட்டது.
Q9. சூயஸ் கால்வாயினால் எகிப்து இங்கிலாந்துக்கிடையில் போர் மூளும் நிலை 1956ல் ஏற்பட்டபோது, சமரசப் பேச்சு வார்த்தை நடத்தியவர் யார்? அவர் எவ்வாறு கௌரவிக்கப்பட்டார்?
லெஸ்டர் பி. பியர்சன் -- Lester B. Pearson – கேனடா நாட்டு உள்துறை அமைச்சர். முதலில் ஐ.நா. சபையின் சர்வதேசப்படை அங்கு வரவழைக்க ஏற்பாடு செய்தார். பேச்சு வார்த்தை நடத்தி சமரசத்தை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு 1957ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Q10. சூயஸ் கால்வாய் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மூடப்பட்டது. காரணம் என்ன?
1967 முதல் ஜூன் 1975 -- அரபு நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக.
Q11. சூயஸ் கால்வாயினால், கடல் வழியில், மும்பைக்கும், இங்கிலாந்து நாட்டின் சௌதாம்ப்டன் துறைமுகத்துக்கும் உள்ள தூரம் எவ்வளவு குறைந்தது?
சுமார் 6500 கி.மீ.
Q12. பனாமா கால்வாய் எங்குள்ளது?
மத்திய அமெரிக்கா -- அட்லாண்டிக் கடலையும், அமெரிக்காவின் கிழக்கு மேற்கு கடற்கரைகளையும் இணைக்கும் விதமாக அமைந்துள்ளது.
Q13. பனாமா கால்வாய் இணைக்கும் இரு கடல் பகுதிகள் யாவை?
அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடல்கள்.
Q14. பனாமா கால்வாய் எந்த வருடம் திறக்கப்பட்டது?
1914 ல் பயணத்திற்கு திறக்கப்பட்டது.
Q15. பனாமா கால்வாய் உருவாக்குவதில், சுமார் எத்தனை உயிர் மாண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
சுமார் 28000.
Q16. பனாமா கால்வாயின் நீள அகலம் என்ன?
77 கி.மீ நீளம்; 500 அடி அகலம்; 45 அடி ஆழம்.
Q17. பனாமா கால்வாய் வழியாக பயணிக்கக்கூடிய கப்பல் வகை எது?
பானாமாக்ஸ் -- Panamax.
Q18. பனாமா கால்வாய் மூலம் பயணித்த முதல் கப்பல் எது?
Ancon – அமெரிக்க கப்பல்.
Q19. கீல் கால்வாய் எங்குள்ளது?
லண்டனுக்கும் பால்டிக் துறைமுகங்களுக்குமிடையில்.
Q20. கீல் கால்வாயின் நீள அகலம் என்ன?
90 கி.மீ நீளம், 40 அடி ஆழம்.
Q21. கீல் கால்வாய் எந்த நீர் நிலைகளை இணைக்கிறது?
வட கடல் மற்றும் பால்டிக் கடல். North Sea with Baltic Seas.
Q22. கீல் கால்வாய் எப்போது உருவாக்கி பயணத்துக்கு திறக்கப்பட்டது?
1895ல் உருவாக்கப்பட்டது.
Q23. பயணத்திற்காக, கீல் கால்வாயை அதிகமாக சார்ந்திருக்கும் நாடு?
ஜெர்மனி. இந்த கால்வாய் இல்லையென்றால், டென்மார்க் நாட்டின் ஜட்லேண்ட் தீபகற்பத்தைச் சுற்றி செல்லவேண்டும்.
Q24. செயற்கையாக உருவாக்கப்பட்ட எந்த கால்வாய் உலகத்திலேயே அதிக பயன்பாட்டிலுள்ளது?
கீல் வாய்க்கால் -- Kiel Canal.
Q25. எந்த உடன்படிக்கை மூலம் கீல் கால்வாய் சர்வதேச பயன்பாட்டுக்கு வந்தது?
வெர்சைல்ஸ் உடன்படிக்கை -- 1919. இந்த உடன்படிக்கை முதல் உலகப்போருக்குப் பிறகு ஏற்பட்டது.
Q26. கீல் கால்வாய் யாரால் சிறிது காலத்திற்கு சர்வதேச பயணத்திற்கு மூடப்பட்டது?
1936ல் ஜெர்மனியின் அதிபர் அடால்ஃப் ஹிட்லரால் மூடப்பட்டது.
Q27. உலகில் மிக பழமையான, நீளமான, மனிதனால் உருவாக்கப்பட்ட கால்வாய் எது? Which is the world’s oldest, longest and an artificial canal/river?
க்ராண்ட் கால்வாய், சீனா. கி.பி. 581-618 காலத்தில், சன் வம்சத்தால் உருவாக்கப்பட்டது.
Q28. சல்ஃபர் கால்வாய் எங்குள்ளது?
க்ரீன்லாந்து மற்றும் ஹாங்காங் தீவின் வட மேற்கு முனைக்குமிடையில் உள்ளது.
Q29. இந்தியாவில் சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட புகழ் பெற்ற கால்வாய் எது?
இந்திரா காந்தி கால்வாய் -- INDIRA GANDHI CANAL - 1958ல் தொடங்கி 1984ல் முடிவடைந்தது. இந்த கால்வாய், பஞ்சாபில் சட்லஜ் மற்றும் பியாஸ் நதிகள் சந்திக்குமிடத்தில் உள்ள ஹரிக்கே தடுப்பணையிலிருந்து, பஞ்சாப், ஹர்யானா வழியாக ராஜஸ்தானில் உள்ள பாலைவனங்கள் வரை சுமார் 650 கி.மீக்கு பயணிக்கிறது. இதில் அதிகம் பயனடைவது ராஜஸ்தான் மாநிலம் -- சுமார் 450 கி.மீ.
Q30. புகழ் பெற்ற ஆங்கில கால்வாய் -- English Channel எங்குள்ளது?
ஐரோப்பாவில், இங்கிலாந்தையும் வட ஃப்ரான்ஸ் பகுதியையும் பிரிக்கிறது. இது வடக்கு கடல் மற்றும் அட்லாண்டிக் கடலையும் இணைக்கிறது. இது சுமார் 264 கி.மீ நீளம், சுமார் 240 கி.மீ அகலம் (குறைவான அகலம் 34 கி.மீ) மற்றும் 174 மீ ஆழமும் கொண்டது. இதன் குறைவான அகலப்பகுதியில், இங்கிலாந்தின் டோவர் Dover மற்றும் ஃப்ரான்ஸ் நாட்டின் கலெய்ஸ் Calais பகுதியையும் இணைக்கிறது.