Khub.info Learn TNPSC exam and online pratice

உயிர்க்கோளம், காடுகள் -- BIOSPHERE, FOREST

Q1. உயிர்க்கோளம் -- Biosphere என்பது என்ன?
பூமியின் எந்த பகுதிகளில் ஜீவராசிகள் வாழும் இயற்கை சாத்தியக்கூறுகள், மற்றும் தேவையான பிராணவாயு oxygen உள்ளதோ அதுவே உயிர்க்கோளம் எனப்படும்.

Q2. வனம், காடு எனப்படுவது என்ன?
பூமியின் தரப்பகுதியில் தாவர வளர்ச்சி மிக அதிகமாகவும், விலங்குகள் உள்ள இடமும்.
Q3. ஆங்கிலத்தில் Biome என்ற சொல் எதைக் குறிக்கிறது?
மண் மற்றும் தாவர/விலங்குகளின் அடிப்படையில் வனங்களை வகைப்படுத்துவதைக் குறிப்பது.
Q4. வனங்களை வகைப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியான ஆங்கிலப்பெயர் என்ன?
Physiognomy.
Q5. மரங்கள் இல்லாத சமவெளிப்பகுதியை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?
Steppe -- A plain without trees.
Q6. சமவெளியில் உயரமான புற்கள் உள்ள பகுதியை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?
Prairie -- Plains with tall grasses.
Q7. எங்கு குளிர் காலத்தில் அதிகமான பனியும், கோடைகாலம் குறைவாகவும் உள்ள பகுதி ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Boreal -- The area in a climatic zone, where winters are snowy and summers are short.
Q8. பனிப்பிரதேசங்களில் மரங்கள் இல்லாத சமவெளி ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Tundra -- Tunturi என்ற ஃபின்லாந்து மொழியில் இருந்து எடுக்கப்பட்டது. இதன் பொருள் மரங்களில்லாத சமவெளி. குளிர் பிரதேசங்களில், குறைவான தட்ப நிலையின் காரணமாக மரங்கள் வளருவதில்லை. உதாரணம் -- ஆர்க்டிக் சமவெளி.
Q9. ஆங்கிலத்தில், சமீப காலங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்கள் ‘afforestation’ மற்றும் ‘deforestation’ என்பதன் பொருள் என்ன?
afforestation -- மரங்கள், தாவரங்கள் இல்லாத பகுதிகளில் மரங்களை வளர்ப்பது.
Deforestation -- மரங்கள், தாவரங்களை அழிப்பது.
Q10. ஆங்கிலத்தில் Campos என அழைக்கப்படுவது எந்த பகுதி?
ப்ரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகருக்கருகில் இருக்கும் ஒரு பகுதி. இது ஒரு வெப்பக்கால புற்கள் அடர்ந்த பகுதி -- இதை ஆங்கிலத்தில் --Savanna of Brazil என்பர். அமேசான் தாழ்நிலப்பகுதியில் பூமத்திய ரேகைக் காடுகளின் வட பகுதியில் இது அமைந்துள்ளது.
Q11. ஆங்கிலத்தில் Savannas என்பது எதைக் குறிக்கிறது?
புற்கள் அடர்ந்த சமவெளியில் ஆங்காங்கே மரங்களும் காணப்படும் வெப்ப மண்டல பகுதிகள்.
Q12. ஆங்கிலத்தில் Canopy என்பது எதைக் குறிக்கிறது?
வனப்பகுதியில் உள்ள உயரமான இடங்கள், எங்கு உயிரினங்கள் வாழும் பகுதி.
Q13. காடுகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
யுனெஸ்கோ -- UNESCO காடுகளை 26 வகைகளாகப் பிரித்து, அவற்றை 6 முக்கிய வகையாக உள்ளடக்கியுள்ளது. அவை:
1. Temperate Needle Leaf -- மிதவெப்ப ஊசியிலைக் காடுகள்.
2. Temperate Broad Leaf and Mixed -- மிதவெப்ப அகண்ட இலைக்காடுகள் மற்றும் இதர தாவரங்கள்.
3. Tropical Moist -- வெப்பமண்டல ஈரப்பதக் காடுகள்.
4. Tropical Dry -- வெப்பமண்டல வறண்ட காடுகள்
5. Sparse Trees and Parkland. -- ஆங்காங்கே மரங்களும் வாழ்நிலங்களும்.
6. Forest Plantations -- வனப்பயிர் தோட்டங்கள் -- உதாரணம். தேயிலை, காபி தோட்டங்கள்.
Q14. ஒரு காட்டின் மேல் உச்சப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Canopy – உயரமான நன்கு முதிர்ந்த மரங்கள்.
Q15. ஒரு காட்டின் மேலிருந்து இரண்டாம் அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Sub canopy -- சற்றே உயரம் குறைவான முதிர்ந்த மரங்கள் அடங்கிய பகுதி.
Q16. ஒரு காட்டின் மேலிருந்து மூன்றாம் அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Shrub -- புதர் – உயரம் மிகக் குறைவான செடி கொடிகள் அடர்ந்தப் பகுதி.
Q17. ஒரு காட்டின் மேலிருந்து நான்காம் மற்றும் கடைசி அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தரைப்பகுதி -- சிறு செடி கொடிகள் உள்ள பகுதி.
Q18. "ஊசியிலை" ‘coniferous’ -- காட்டுடன் சம்பந்தப்பட்ட இச்சொல்லின் பொருள் என்ன?
கூம்பு வடிவில் conical உயர்நோக்கி நீளமான சிறிய அளவில் இலைகள் கொண்ட மரங்கள். உதாரணம் -- பைன், தேவதாரு (ஃபிர்) போன்றவை.
Q19. மித வெப்ப அகண்ட இலைக்காடுகள் எங்கு உருவாகின்றன?
எங்கு வெப்பமும் பனிக்காலமும், மழையும் சேர்ந்து சமமாக நிலவும் பகுதிகள்.
Q20. மித வெப்ப அகண்ட இலைக்காடுகளின் சிறப்பு அம்சங்கள் என்ன?
இவ்வகைக் காடுகளில் அகண்ட இலைகள் கொண்ட ஓக், பீச், மேப்பிள்ஸ், டீக் போன்ற மரங்கள் அடர்ந்து காணப்படும்.
Q21. மித வெப்ப ஊசியிலைக்காடுகள் என்பது எப்பகுதிகளில் காணப்படும்?
மித வெப்பமான கோடைக் காலமும், குளிர் காலமும், தேவையான மழையும் உள்ள பகுதிகளில் காணப்படும்.
Q22. மித வெப்ப ஊசியிலைக்காடுகள் அதிகமாக எந்த நாடுகளில் காணப்படும்?
1. வடமேற்கு பசிபிக் பகுதிகள் 2. தென் அமெரிக்கா 3. நியூசிலாந்து 4. ஆஸ்திரேலியா 5. வடமேற்கு ஐரோப்பா 6. தென் ஜப்பான் 7. கேஸ்பியன் கடற் பகுதி, துருக்கி 8. ஜியார்ஜியா மற்றும் 9. வடக்கு இரான்.
Q23. மித வெப்ப மழைக்காடுகள் -- Temperate Rain Forests என்பது என்ன?
ஊசியிலை மற்றும் அகண்ட இலைக் காடுகள். மிதமான வெப்பமும் அதிகமான மழையும் பெய்யக் கூடிய காடுகள். இவை கடற்கரையோரம் வரை பரவியிருக்கும்.
Q24. மித வெப்ப மழைக்காடுகள் எங்கு காணப்படும்?
வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா, நியூசிலாந்து.
Q25. வெப்ப மற்றும் மித வெப்ப ஈரப்பத அகண்ட இலைக்காடுகள் எங்கு ஏற்படும்?
எங்கு மிதமான மழையும், ஈரப்பதம் கொண்ட வெப்ப பகுதிகளில் காணப்படும்.
Q26. வெப்ப மற்றும் மித வெப்ப ஈரப்பத அகண்ட இலைக்காடுகள் துணை வகைகள் யாவை?
1. வெப்ப மழைக்காடுகள் -- Tropical Rain forests
2. ஈரப்பத இலையுதிர்க் காடுகள் -- Moist Deciduous forests
3. Montane Rain forests -- மலைப்பகுதி மழைக் காடுகள் -- மேற்கு தொடர்ச்சி மலை.
4. வெள்ளப்பெருக்குக் காடுகள் -- Flooded forests.
Q27. வெப்ப மற்றும் மிதவெப்ப ஈரப்பத அகண்ட இலைக்காடுகள் எங்கு காணப்படும்?
1. இந்திய துணைக் கண்டம் -- Indian Sub-continent
2. தென் கிழக்கு ஆப்பிரிக்கா -- South East Africa
3. தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா -- South and Central America
4. புதி கினி -- New Guinea
5. கிழக்கு இந்தோனேசியா -- Eastern Indonesia
6. வடக்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியா -- North and East Australia
7. பசிபிக் கடல் வெப்ப தீவுகள். -- Tropical islands of Pacific Ocean.
Q28. உலகின் எந்த இரண்டு தென் அமெரிக்க நாடுகள், உலகின் வெப்ப மற்றும் மித வெப்ப ஈரப்பத அகண்ட இலைக் காடுகளில், பாதிக்கு மேல் கொண்டுள்ளது?
ப்ரேசில் மற்றும் பெரு.
Q29. வெப்ப மற்றும் மித வெப்ப அகண்ட இலை வறண்ட காடுகள் எங்கு ஏற்படும்?
வெப்ப வறண்ட காடுகள் எனவும் அழைக்கப்படும். நில நேர்க்கோட்டு வெப்ப் மற்றும் மித வெப்ப பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இப்பகுதிகள், வருடம் பூராவும் வெப்பமாகவும், அதிகமான மழை பெய்தும், பல மாதங்கள் வறண்ட பகுதிகளாகவே இருக்கும். இலையுதிர் காடுகள் -- உதாரணம் தேக்கு, எபோனி போன்ற மரங்களால் அடர்ந்திருக்கும்.
Q30. வெப்ப மற்றும் மித வெப்ப அகண்ட இலை வறண்ட காடுகள் எங்கு காணப்படும்?
வங்காள விரிகுடாவின் கிழக்குக் கடற்கரையோரம், கிழக்குத் தொடர்ச்சி மலை, மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படும்.
Q31. இந்தியாவில் காணப்படும் காடுகள் யாவை?
வெப்ப மற்றும் மித வெப்ப வறண்ட அகண்ட இலைக் காடுகள். வெப்ப வறண்ட இலைக்காடுகள் எனவும் அழைக்கப்படும்.
Q32. பனிப்பகுதிக் காடுகள் -- Boreal forests எங்கு அதிகமாகக் காணப்படும்?
எப்போதும் பசுமையான மற்றும் ஊசியிலைக் காடுகள் அதிகாமா அலாஸ்கா, கேனடா, ஸ்வீடன், ஃபின்லாந்து, கஸகிஸ்தான், வட ஐரோப்பா, ரஷ்யா மற்றும் வட அமெரிக்க கண்டப் பகுதிகளில் காணப்படும்.
Q33. குளிர் அதிகமான பிரதேசங்களில் மரங்கள் வளர்வதில்லை. காரணம்?
மிகக் குறைவான வெப்பம் இருப்பதால்.
Q34. காடுகள் திடீரென தீப்பிடிக்கக் காரணங்கள் யாவை?
மின்னல், எரிமலை வெடிப்பு, வெப்ப அலை, வறட்சி, மற்றும் எல் நிநோ பாதிப்புகள்.
Q35. உலகின் மிகப்பெரிய அடர்த்தியான காடுகள் எங்குள்ளன?
அமேசான், ப்ரேசில்.
Q36. ஒரு நகருக்குள் அமைந்துள்ள மிகப்பெரிய காடு எது?
திஜூகா காடு -- ரியோ டி ஜெனீரோ நகரின் மையத்தில் சுமார் 32 ச.கி.மீ பரப்பளவுக்கு உள்ளது. (ரியோ டி ஜெனீரோ முன்னாள் தலைநகர்).