Khub.info Learn TNPSC exam and online pratice

மேகங்கள், கால நிலை, பருவ காலங்கள், மழை, புயல் CLOUDS, CLIMATE, MONSOON, RAIN, CYCLONE

Q1. மேகங்கள் என்பது என்ன?
வளிமண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும் குளிரப்பட்ட ஈரப்பதமும், உறைந்த பனி படிகங்கள், பூமி மற்றும் இதர கிரகங்களிலும் காணப்படும்.

Q2. மேகங்களைப் பற்றி ஆய்வு மற்றும் படிப்புக்கு என்ன பெயர்?
நெஃபாலஜி -- Nephology.
Q3. மேகங்களின் முக்கிய உள்ளடக்கம் என்ன?
நீராவி -- Water vapour.
Q4. Bergeron Findeisen process என்ற கோட்பாடு எதைப்பற்றியது?
வளி மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும் குளிர் மேகங்களில் மழைப்பொழிவு ஏற்பட தூண்டும் நடவடிக்கை.
Q5. மேகங்களின் சில முக்கிய வகைகள் யாவை?
1. Stratus 2. Cumulus 3. High 4. Cirrus 5. Cirrus Uncinus, 6. Cirro Cumulus, 7. Middle 8. Alto Cumulus and 9. Altostratus மற்றும் சில.
Q6. எவ்வகை மேகங்கள், இடியுடன் கூடிய மழையை உருவாக்கக்கூடியது?
திரள் கார் முகில் CUMULONIMBUS - இவ்வகை மேகங்கள் தனியாகாவோ அல்லது குழுக்களாகவோ சேர்ந்து இவ்வகை மழை மேகங்களை உருவாக்குகிறது.
Q7. மேகங்களின் நிறங்கள் எதைக் குறிக்கிறது?
மேகங்களின் உள்ளே நடக்கும் மாற்றங்களை தெரிவிக்கின்றன.
Q8. மேகங்களில் பல நிறங்கள் ஏற்படக் காரணம் என்ன?
சூரிய வெளிச்சத்தை மேகங்கள் கிரகிக்கும் நிலையில், வெள்ளை, சாம்பல், கருமை போன்ற நிறங்கள் ஏற்படுகின்றன.
Q9. எந்த நிற மேகங்களால் நிச்சயமாக காற்றுடன், சூறாவளியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புண்டு என கூறப்பட்டுள்ளது?
மேகங்களில் ஒரு பச்சை இழையோடிக் கொண்டிருக்கும் மேகங்கள். இவை திரள் கார் முகில் மேகங்கள். இந்த நிறம் ஏற்படக் காரணம், சூரிய ஒளி, மேகங்களின் உள்ளிருக்கும் பனிக்கட்டிகளால் சிதறப்படுவதால்.
Q10. மேகங்களில், சிகப்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு போன்ற நிறங்கள் எப்போது ஏற்படும்?
சூரிய உதயம் மற்றும் மறைவு நேரங்களில் ஏற்படும், காரணம் சூரிய ஒளி முழுவதுமாக வளி மண்டலத்தால் கிரகிக்கப்படுகிறது.
Q11. ஆங்கிலத்தில் -- Contrail என அழைக்கப்படுவது என்ன?
செயற்கையாக உருவாக்கப்பட்ட நீராவி கோடுகள் வானத்தில் அவ்வப்போது காணப்படுவை. இது மிக உயரத்தில் பறக்கும் அதி வேக விமானங்கள் வெளியிடும் புகை போன்ற பனி படிகங்கள், உறையும் குளிர் கொண்ட அப்பகுதியில் உறைந்து சில நேரம் நிலைத்து நிற்கும். பிறகு வெப்பத்தினால் தானாகவே கரைந்து விடும்.
Q12. வேறு கிரகங்களுக்கு வளி மண்டலமும் மேகங்களும் உண்டா?
உண்டு. அவை:
வீனஸ் -- Venus: இதன் மேகங்களில் அதிகமான சல்ஃப்யூரிக் அமிலத் துளிகள் காணப்படும்.
செவ்வாய் -- Mars: இதன் மேகங்களில் மெல்லிய பனிக்கட்டிகள் அடங்கியதாக இருக்கும்.
ஜூபிடர் & சனி -- Jupiter and Saturn: மூன்றடுக்கு மேகங்கள் கொண்டவை. வெளி அடுக்கில் அம்மோனியா, நடு அடுக்கில் அம்மோனியம் ஹைட்ரோசல்ஃபைட், உள் அடுக்கில் நீர் மேகங்கள்.
யுரேனஸ் & நெப்ட்யூன் -- Uranus and Neptune: மீதேன் அதிகமாகவுள்ள மேகங்கள் காணப்படும். சனி கிரகத்தின் நிலவான டைட்டனுக்கும், திரவ மீதேன் கலந்த மேகங்கள் உண்டு.
Q13. மேகங்களைப் போற்றும் சங்கம் -- Cloud Appreciation Society என்பது என்ன?
இந்த அமைப்பை 2005 ல் இங்கிலாந்தின் க்ரவீன் ப்ரெக்டர் பென்னி Gravin Pretor Penny என்பவர் நிறுவினார். இதன் மூலம் மேகங்கள் பற்றிய முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி வருகின்றனர்.
Q14. மேகத்தின் அடித்தளம் என்பது என்ன?
குறைவான உயரத்தில் கண்ணுக்கு புலப்படக் கூடிய மேகத்தின் அடிப்பகுதி.
Q15. மேகம் விதைத்தல் -- Cloud Seeding என்பது என்ன?
வானிலையை மாற்றும் ஒரு முயற்சி. மழை ஏற்படுத்தக்கூடிய மேகங்களை செயற்கை முறையாக ஏற்படுத்துவது. வானில் உள்ள மேகங்களில் பனித்துளிகளை ஏற்படுத்தி மழை பொழிய வைக்கும் ஒரு முயற்சி. இதற்கு சில்வர் அயோடைட், பொட்டாசியம் அயோடைட், திட கார்பன் டை ஆக்ஸைடு, திரவ ப்ரோபேன் போன்ற வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.
Q16. பனித் துளிகள் -- Dew என்பது என்ன?
வளி மண்டலத்தில் குளிர் காற்றால் நீராவி, ஆவி சுருங்கல் Condensation முறை. இரவு நேரங்களில் பூமி, அதற்கு மேல் உள்ள காற்றை விட வேகமாக குளிரடைகிறது. பனித்துளிகள் அதிகாலை நேரங்களில் தரையில், குறிப்பாக புல் வெளிகளில் காணலாம்.
Q17. மூடு பனி Fog என்பது என்ன?
தரையை, மலை உச்சியைத், மலையின் பள்ளங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு மேகம். ஒரு கி.மீ க்குள் பார்வை பாதிக்கப்பட்டால் அது மேகம் எனவும், அதற்கு மேலிருந்தால், 2 கி.மீ க்குள் அது மூடுபனி எனப்படும்.
Q18. முகிற்பேழ் மழை Cloud Burst என்பது என்ன?
ஒரு மழை மேகம், திடீரென குளிரப்பட்டு, அதனால் ஏற்படும் அதிகமான மழை.
Q19. காளாண் மேகம் -- Mushroom Cloud என்பது என்ன?
இதற்கும் மழைக்கும் தொடர்பு இல்லை. இது, ஒரு பெருத்த வெடிப்பினால் ( எரிமலை வெடிப்பு, அணுகுண்டு போன்ற போர் ஆயுதங்களால்) ஏற்படும் காளாண் போன்ற புகை மூட்டம் மேலெழும்புவது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q20. பருவநிலை Climate என்பது என்ன?
வெவ்வேறு காலங்களில்/இடங்களில் நிலவும் தட்ப வெப்ப நிலை. ஒவ்வொரு இடமும், அது தீர்க்க ரேகைக்கும், நில நேர்க்கோட்டுக்கும், பூமத்திய ரேகைக்கும், துருவங்களுக்கும் ஒத்து எவ்வாறு அமைந்துள்ளதோ அதை பொறுத்து அந்த இடத்தின் தட்ப வெப்ப நிலை மாறுபடும்.
Q21. பருவ நிலை மண்டலங்கள் யாவை?
1. வறண்ட Torrid 2. உறைபனி Frigid மற்றும் 3. மிதவெப்ப Temperate என மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Q22. வறண்ட மண்டல தட்ப வெப்ப நிலை -- Torrid Zones Climate என்பது என்ன?
பூமத்தியி ரேகையிலிருந்து வடக்கு மற்றும் தெற்காக, 23.5° க்குள் அடங்கியுள்ள பகுதி. இப்பகுதி கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையில் அமைந்திருக்கும். சூரிய கதிர்கள் செங்குத்தாக நேரடியாக இந்த பகுதியில் விழுவதால், மிகவும் வெப்பம் அதிகமான பகுதியாக இருக்கும்.
Q23. உறைபனி மண்டல தட்ப நிலை என்பது என்ன? Frigid Zones of Climate?
இதில் இரண்டு துணைப்பகுதிகள் உள்ளன.
1. வட உறைபனிப்பகுதி -- North Frigid: ஆர்க்டிக் வட்டத்திலிருந்து 66.5° முதல் 90° வரையில் வடதுருவத்தினருகில் உள்ள பகுதி. குளிர் உள்ள பகுதி.
2. தெற்கு உறைபனி பகுதி -- South Frigid: தென் துருவத்துக்கும் அண்டார்டிக் வட்டத்துக்குமிடையில் 66.5° -- 90° க்குள் அமைந்துள்ள பகுதி. அதிகமான குளிருள்ள பகுதி. இரண்டு பகுதிகளிலும் வருடத்தில் ஒரு நாள் முழுவதுமாக சூரிய கதிர்கள் படுவதில்லை.
Q24. மித வெப்ப மண்டல பகுதி -- Temperate Zones என்பது என்ன?
இதில் இரண்டு துணை மண்டலங்கள் உள்ளன:
1. வட மித வெப்ப மண்டலம் -- North Temperate: Regions -- 23.5° கடக ரேகைக்கும் 66.5° வட ஆர்க்டிக் வட்டத்துக்குமிடையில் அமைந்துள்ள பகுதி.
2. தென் மித வெப்ப மண்டலம் -- South Temperate: Regions -- 23.5° மகர ரேகைக்கும் 66.5° தென் அண்டார்டிக் வட்டத்துக்குமிடையில் அமைந்துள்ள பகுதி. இந்த இரண்டு பகுதிகளும் மேலும் பல பகுதிகளாக தாவர உயிர்களுக்கேற்றவாறு பிரிக்கப்பட்டுள்ளன.
Q25. புவியியல் ரீதியான பருவங்கள் என்பது என்ன, முக்கியமான சில பருவங்களை கூறுக?
ஒவ்வொரு இட தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு ஆங்காங்கே அவ்வப்போது நிலவும் பருவநிலை. இவை கீழ்க்கண்டவாறு பொதுவாக பிரிக்கப்பட்டுள்ளது.
வசந்த காலம் Spring : மார்ச், ஏப்ரல்.
கோடைக் காலம் Summer: மே, ஜூன், ஜூலை.
இலையுதிர்க் காலம் Autumn: செப்டம்பர், அக்டோபர்
குளிர் காலம் Winter: டிசம்பர், ஜனவரி.
Q26. காற்று நகர்வதற்கான காரணம் என்ன?
பூமியின் பரப்பில் நிலவும் வெவ்வேறு காற்றழுத்தமே காற்றின் நகர்வுக்குக் காரணம்.
Q27. காற்றின் திசை மாற்றத்துக்கு முக்கிய காரணம் எது?
பூமியின் சுழற்சி.
Q28. காற்றின் வகைகள் யாவை?
1. தடக்காற்று மற்றும் 2. மேற்கத்திய காற்று.
Q29. காற்று, மேலும் அவற்றின் காலத்துக்கேற்ப எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
பொதுவானது: தடம் மற்றும் மேற்கு காற்று.
பருவக்காற்று: Periodical – அந்தந்த பருவங்களில் வீசும் காற்று -- பருவ மழை.
மாறி வரும் காற்று -- Variable – புயல் மற்றும் உள்ளூர்களில் நிலவும் காற்று.
Q30. இவ்வாறு, பருவம் மற்றும் பல புவியியல் காரணங்களுக்காக வீசும் காற்றுக்கு அந்தந்த இடத்துக்கேற்றவாறு பல பெயர்கள் நிலவுகின்றது. அவை யாவை?
1. சினூக் -- Chinook - ராக்கி மலைத் தொடர், அமெரிக்கா.
2. ஃபாஹென் -- Fohen - வட ஆல்ப் மலைத் தொடர்.
3. ஸிராக்க்கோ --Scirocco - சஹாரா முதல் மத்திய தரைக்கடல் பகுதிகளில்.
4. சொலேனோ -- Solano - ஐபீரிய தீபகற்பம்.
5. ஹர்மாட்டான் -- Harmattan - மேற்கு ஆப்பிரிக்கா.
6. போரா -- Bora - வட இத்தாலி.
7. மிஸ்த்ரால் -- Mistral - ஃப்ரான்ஸ்
8. புனாஸ் -- Punas - மேற்கு ஆண்டிஸ் மலை.
9. லெவாண்டர் -- Levanter - ஜிப்ரால்டர்.
10. வெண்டாவெல் -- Vendavel - ஜிப்ரால்டர்
11. மரீன் -- Marin - மத்தியத் தரைப்பகுதி.
12. க்ரெகேல் -- Gregale - க்ரீஸ்
13. வில்லி வில்லி --Willy Willy - ஆஸ்திரேலியா
Q31. அமைதி மண்டலம் Doldrum என்பது என்ன?
இதை நடுவரைக்கோடு அமைதிப் பகுதி -- Equatorial Belt of Calms – எனவும் அழைப்பார்கள். நடுவரைக் கோட்டு குறைந்த காற்றழுத்தம் கொண்ட பகுதி. இங்கு தான் கிழக்கு மற்றும் தெற்கு வர்த்தக காற்றுகள் சந்திக்குமிடம். இப்பகுதியில் காற்றின் மாற்றம் அதிகமாகவும், புயல் காற்றும் மற்றும் அதிகமான மழையும் கொண்ட பகுதி.
Q32. கடுங்காற்று -- Gale?
காற்றின் வேகம் 62 முதல் 101 கி.மீ வரை உள்ளது, இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q33. ப்யூஃபோர்ட் அளவு மானி -- Beaufort Scale என்பது என்ன?
1805ல், அட்மிரல் ஃப்ரான்சிஸ் ப்யூஃபோர்ட் என்ற கப்பற்படை அதிகாரியால், கண்டுபிடிக்கப்பட்ட இந்த இந்த காற்று அளவு மானியில் எண்கள் பொருத்தப்பட்டு, காற்று வேகத்தை கணக்கிட உதவுகிறது.
Q34. பை பேலட்ஸ் விதி Buy Ballots Law என்பது என்ன?
இதன் படி, வட துருவத்தில், காற்று இடஞ்சுழியில் குறைந்த அழுத்தத்தின் மையத்தைச் சுற்றியும், உயர் அழுத்தத்தின் மையத்தை கடிகார சுற்றிலும் சுற்றி வரும். தென் துருவத்தில், இந்நிலை அப்படியே மாறுபட்டிருக்கும்.
Q35. ஃபெர்ரெல் விதி -- Ferrel’s law என்பது என்ன?
இந்த விதியின் படி, காற்று வட துருவத்தில் வலக்கைத் திசையிலும், தென் துருவத்தில் இடக்கை திசையிலும், பூமியின் சுழற்சியினால் திருப்பப்படுகிறது என கூறுகிறது.
Q36. கிரக காற்றுத் தொடர் பட்டை -- Planetary Wind Belts என்பது என்ன?
பூமியின் மேற்பரப்பில் நிலவும் நிரந்தர குறைவு மற்றும் உயர் அழுத்த பகுதிகளில் காற்று மற்றும் காற்று போக்கின் ஒருங்கிணைந்த சுழற்சி ஏற்படுகிறது. அவை:
1. பூமத்திய மத்திய அமைதிக் கோட்டுப் பகுது Equatorial Calms (Doldrums)
2. வணிகக் காற்று Trade Winds
3. நிலவும் மேற்கு காற்றுகள் Prevailing Westerlies
4. துருவ உச்ச காற்று Polar High
5. துருவ மேற்கத்திய காற்று. Polar Westerlies.
Q37. பனிப்புயல் -- Blizzard என்பது என்ன?
அதிவேக அதிக குளிர்காற்று பனித்துகள்களுடன் கூறிய காற்று.
Q38. கடக ரேகை அமைதி -- Calms of Cancer என்பது என்ன?
கடக ரேகையின் அருகில் நிலவும் உயர் அழுத்தப்பகுதியில், நிலவும் அமைதியான மித காற்று வேகம்.
Q39. மகர ரேகை அமைதி -- Calms of Capricorn என்பது என்ன?
மகர ரேகையின் அருகின் நிலவும் உயர் அழுத்தப்பகுதியில் நிலவும் அமைதியான மித காற்று வேகம்.
Q40. வெப்பச்சலனம் -- Convection என்பது என்ன? ?
பூமியின் மேற்பரப்பில் நிலவும் வெப்பத்தினால் சூடேறும் காற்று மேல் நோக்கி எழுவது. வெப்பமடைவதினால், இக்காற்று விரிவடைந்து மேல் நோக்கி எழுகிறது. இந்த காற்று மேல் நோக்கி எழும் போது, குளிர் காற்று, மீண்டும் பூமியின் மேற்பரப்புக்கு வந்து, வெப்பத்தினால் சூடேறி, மேல் நோக்கி எழும். இது ஒரு தொடர் நிகழ்ச்சி, வெப்பச்சலனம் எனப்படும்.
Q41. காற்றெதிர் பக்கம் -- Leeward side என்பது என்ன?
ஒரு உயர்வான பகுதியில் காற்றின் போக்கு கிடைக்காத பகுதி. உயர்வான பகுதி வரும் காற்றை தடுப்பதினால், மறு பகுதி பொதுவாக காற்றைப் பெறுவதில்லை, அதனால் மழை பெறுவதில்லை.
Q42. காற்றுப் போக்கு பக்கம் -- Windward side என்பது என்ன?
ஒரு உயர்வான பகுதியில் காற்றைப் பெறும் பகுதி. உயர்வான பகுதி, வருகின்ற காற்றை தடுத்து பின்னோக்கி திருப்பி விடுவதால் அப்பகுதி மழை பெறும்.
Q43. வளிச்சலன வெப்ப மாற்றம் -- Advection?
வெப்பக் காற்று, அதி வெப்பப்பகுதியிலிருந்து, மித வெப்பப்பகுதி (நில நேர்க்கோட்டுப் பகுதிக்கு) செல்வது - சுருக்கமாக சொன்னால் கடற்பகுதியிலிருந்து தரைப்பகுதிக்கு மாறுவது.
Q44. கோள் பட்டைப் பகுதி -- Planetary belts என்பது என்ன?
பூமியின் மேற்பரப்பில் உள்ள அழுத்தப் பகுதிகளின் காரணமாக - pressure belts, கோள் காற்று முறை ஏற்படுகிறது planetarywind system. அவை :
1. அதிக வெப்பத்தினால் பூமத்திய குறைவு தாழ்வு பகுதி - Equatorial low pressure belt due to excessive heat.
2. பூமத்திய ரேகையின் இரு பக்கங்களிலும், 30° வட மற்றும் தென் பகுதிகளில், மித வெப்பப் பகுதிகளில் நிலவும் உயர் அழுத்தப் பகுதிகள். Sub tropical high pressure belt on both sides the Equator at about 30 degree north and 30 degree south.
3. பூமத்திய ரேகைக்கு 60° வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் நிலவும் மித வெப்ப குறைவு தாழ்வு பகுதிகள். High pressure belt around 60 degree north and south, are temperate low pressure belts.
4. துருவ பகுதிகள் நிரந்தரமான உயர் அழுத்தப் பகுதிகள். Polar regions are regions of permanent high pressure belts.
Q45. பருவ காலம் - Monsoon என்பது என்ன?
காலத்துக்கேற்றவாறு காற்று ஒரு குறிப்பிட்ட முறையில் வீசுவது. இந்த முறை பொதுவாக இந்திய பெருங்கடல் பகுதியில், குறிப்பாக இந்தியா, ஸ்ரீலங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் பகுதியில் நிலவுகிறது.
Q46. உலகின் எந்த நாடுகளில் மட்டும் ஒரு முறையான பருவ காலம் Monsoon நடவடிக்கைகள் நிலவுகிறது?
இந்தியா, ஸ்ரீலங்கா, இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகள் மற்றும் தீவு நாடுகள், அமெரிக்கா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா.
Q47. இந்தியாவில் பருவகால நடவடிக்கைக்கு monsoonic activity முக்கிய காரணமாக அமைந்திருக்கும் இயற்கை அமைப்பு எது?
மேற்கு தொடர்ச்சி மலையும், இமாலயமும்.
Q48. இந்தியாவின் இரண்டு முக்கிய பருவ காலங்கள் Monsoons யாவை? அதனால் பயன்படும் பகுதிகள் யாவை?
1. தென் மேற்கு பருவ காலம் -- SOUTH WEST: மே மாத முடிவில், இந்திய பெருங்கடலில் தொடங்கும் இந்த பருவம் ஜூலை மாத நடுப்பகுதி வரை நீடிக்கிறது. இது, அந்தமான் நிக்கோபார் கடற்பகுதியில் உருவாகி, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய இந்தியாவின் சில பகுதிகளுக்கு இந்த காலங்களில் மழை ஏற்படுத்துகிறது.
2. வட கிழக்குப் பருவ காலம் -- NORTH EAST: இதை ""பின் வாங்கும் பருவம்"" Retreating Monsoon எனவும் அழைப்பார்கள். இவ்வாறு பின்வாங்குவதற்கு இமாலய மலைத் தொடர்கள் முக்கிய காரணம். செப்டம்பர் மாதத்தில் தொடங்கி, நவம்பர்/டிசம்பர் மாதங்களில் இந்திய பெருங்கடலில் முடிவடையும். இதனால், வடக்கு, வடகிழக்கு மாகாணங்கள், குறிப்பாக, பீஹார், சத்தீஸ்கர், மேற்குவங்காளம், ஒடிசா, ஆந்திரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு மழை பெறுகிறது.
Q49. "என் நினோ" El Nino நிகழ்வு phenomenon என்பது என்ன?
இது உலகளவிலான, கடல் மற்றும் வளிமண்டலம் ocean and atmosphere இணைந்த ஒரு நிகழ்வு. கடல் நீர் மட்டத்தின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப மாற்றங்கள் - குறிப்பாக வெப்ப கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதி - காரணமாக ஏற்படும் ஒரு நிலை. சுருக்கமாக சொன்னால், மத்திய கடல் பகுதி (பசிபிக் பெருங்கடல்) நீர் அதிக வெப்பமடைவதால் ஏற்படும் நிகழ்வு.
Q50. "எல் நினோ" El Nino நிகழ்வை முதலில் எடுத்துக் கூறியவர் யார்?
சர் கில்பெர்ட் தாமஸ் வாக்கர் -- ஐக்கிய ராஜ்யம் UK -- 1923.
Q51. "எல் நினோ" El Nino என்ற சொல் விளக்குவது என்ன?
இது ஒரு ஸ்பானிய சொல். இதன் பொருள் ""சிறுவன்"". இந்த நிகழ்வு, பசிபிக் பெருங்கடலில், கிறிஸ்துமஸ் காலத்தில் ஏற்படுகிறது.
Q52. மழை என்பது என்ன?
மழைப்பொழிவின் மூலக்கரு உருவாகி, மேகங்களிலிருந்து மழை சொட்டுகளாக பூமியின் தரைப் பகுதியின் மீது விழுவது.
Q53. மழை எவ்வாறு உருவாகிறது?
கடலின் மேற்பரப்பில் உருவாகும் ஈரப்பதம், மற்றும் இதர நீர் நிலைகளிலிருந்து ஆவியாகி வெளியாகி வெப்பத்தின் காரணமாக மேல் நோக்கி செல்லும் ஈரப்பதம் ஒன்று கூடி மேகக்கூட்டங்களாக உருவாகி, குளிர் காற்று தாக்கலால் நீராகி, மழைச் சொட்டுகளாக, பூமியை நோக்கி விழுவது. இது ஒரு தொடர் நிகழ்ச்சி.
Q54. மழை உருவாவதைப் பற்றி கூறும் விளக்கம் எது?
Bergeron Process
Q55. மழை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
1. மழையின் அளவு
2. மழையின் காரணம். இதன் அடிப்படையில் பெய்வது, தூறல், மழை, மிதமான மழை, கனமான மழை, மிக கனமான மழை, கொட்டும் மழை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Q56. ஆங்கிலத்தில் “Orographic Rain” என அழைக்கப்படுவது என்ன?
ஈரப்பதம் நிறைந்த காற்று, தரையை நோக்கி வீசும் போது, இயற்கைத் தடைகளினால் (மலை) தடுக்கப்பட்டு ஏற்படும் மழை. இந்தியாவின் 80% மழை இவ்வகையைச் சாரும்.
Q57. வெப்பச்சலன மழை -- Convective rain என்பது என்ன?
ஈரப்பதத்துடன் கூடிய தரைப்பகுதியிலிருந்து உயர் நோக்கிச் செல்லும் காற்று. வளி மண்டலத்தின் உயர் பகுதிகளில், வெவ்வேறு வளி மண்டல அழுத்தத்தின் காரணமாக மழை மேகங்களாக மாறி மழை பெய்கிறது.
Q58. வெப்பச்சலன மழை பொதுவாக எப்பகுதிகளில் ஏற்படுகிறது?
பொதுவாக, பூமத்திய ரேகை மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில், எங்கு வெப்பம் அதிகமாக உள்ளதோ அப்பகுதிகளில் ஏற்படுகிறது. இதன் காரணமாக மின்னல் அதிகமாகவும், இடியுடன் கூடிய மழையும் ஏற்படுகிறது.
Q59. இந்தியாவில் வெப்பச்சலன மழைக்கு ஒரு நல்ல உதாரணம்
கால் பைஷாகி KAL BAISAKHI வகை மழை. இது வங்காளப்பகுதியில் அதிகமாக ஏற்படுகிறது.
Q60. மழையின் அளவை அளக்க உதவும் கருவி யாது?
மழை அளவு மானி -- Rain Gauge: ஒரு சம பரப்பளவில் பெய்யும் மழை பெய்து தேங்கும் நீரின் ஆழத்தைத் துல்லியமாக, .01 mm வரை அளந்து கூறும் கருவி. இதில் பலவகைகள் உண்டு. அவை: 1. Graduated Cylinders 2. Weighing Gauges 3. Tipping Bucket Gauge 4. Buried Pit Collectors and 5. Standard Rain Gauge.
Q61. மழைத்துளியின் வடிவம் என்ன?
நீள் வட்டம்/கோள் வடிவம். பெரிய துளிகளின் அடிப்பகுதி மட்டமாக இருக்கும்.
Q62. மழைத்துளியின் வடிவத்தை ஆய்வு செய்தவர் யார்?
பிலிப் லெனார்ட் -- ஹங்கேரிய ஜெர்மன் -- 1892. இவருடைய ஆய்வு ""லெனார்ட் விளைவு"" “Lenard Effect”என அழைக்கப்படுகிறது.
Q63. ஒரு மழைத்துளியின் விட்டம் சராசரியாக/பொதுவாக என்னவாக இருக்கும்?
2 மில்லி மீட்டர்
Q64. அதிக விட்டம் கொண்ட மழைத்துளி எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது?
10 மி.மீ -- ப்ரேசில் மற்றும் மார்ஷல் தீவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Q65. இந்தியாவின் எந்த இடத்தில் அதிகமான மழை பெய்கிறது?
மேகாலயாவின் மாவ்சின்ராம் என்ற இடத்தில் 11,873 மி.மீ வருடாந்திர மழை பெய்கிறது. இதற்கு அடுத்ததாக அஸ்ஸாமின் செர்ரா புஞ்சி என்ற இடம்.
Q66. "Rain shadow -- மழை நிழல்" -- அதாவது மழையில்லா பகுதி என்பது?
ஒரு உயரமான பகுதியில், காற்று எந்த பக்கம் தடைபட்டு மழை பொழிகிறதோ, அதே சமயம் அந்த உயரமான பகுதியின் மறு பக்கம் மழை மேகங்கள் இல்லாததால் மழை பொழிவதில்லை. இவ்வாறு மழை பெறாத பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q67. குறைந்த தாழ்வு அழுத்தம் Low Pressure என்பது என்ன?
எந்த ஒரு இடத்தில், அதை சுற்றியுள்ள பகுதியை விட, வளிமண்டல அழுத்தம் குறைவாக உள்ளதோ அந்த இடம் குறைந்த தாழ்வு அழுத்த மண்டலமாக கருதப்படுகிறது.
Q68. வெப்ப மண்டல சூறாவளி Tropical Cyclone (Tornado) என்பது என்ன?
குறைந்த தாழ்வு அழுத்த மையத்தைக் கொண்ட ஒரு புயல், இதனுடன் அதி வேக காற்று, மழை மற்றும் இடியுடன் கூடிய மழை சேர்ந்தது. இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.
Q69. சூறாவளியின் பொதுவான காற்று வேகம் என்ன?
சுமர் 110 முதல் 175 கி.மீ வேகம். இது சிறிது தூரம் இந்த வேகத்தில் அடித்து பிறகு படிப்படியாக குறையத் தொடங்கும். சில நேரங்களில், இது 400+ கி.மீ வேகத்திலும் அடிக்கக்கூடும். தரைப்பகுதியில் நிலைத்து நின்று பெருத்த சேதத்தை விளைவிக்கும். அமெரிக்காவில் அடிக்கடி ஏற்படக்கூடிய நிகழ்வு.இவ்வகை சூறாவளி 1. Multiple Vortex Tornado 2. Satellite Tornado and 3. Water Sprouts –a tornado over water என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் hurricane என்ற வகையும் சேரும். இது பொதுவாக, அட்லாண்டிக் கடல், கரீபியக் கடல், மெக்ஸிகோ வளைகுடா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளை பாதிக்கும் வகையில் ஏற்படக்கூடியவை.
Q70. சூறாவளிகளுக்கு பெயர் வைக்கும் பழக்கம் என்ன?
சூறாவளிகளுக்கு பெயர் வைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படக் காரணம், ஒன்றுக்கு மேற்பட்ட சூறாவளிகள் ஏற்படும் போது, அவைகளை அடையாளம் கண்டு அவற்றின் போக்கு பற்றிய எச்சரிக்கைகள் அறிவிப்பு வெளியிட உதவியாக இருக்கும் என்பது தான். இதற்காக சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையங்களின் ஒரு கூட்டமைப்பு உள்ளது. இந்த அமைப்பு, ஒரு ஆறு அட்டவணைப் பெயர்களை -- ஆண் மற்றும் பெண் -- கோர்த்து வைத்துள்ளனர். இந்த அட்டவணையில் உள்ள ஆண் பெண் பெயர்களை ஒவ்வொன்றாக மாற்றி சூறாவளிகளுக்கு பெயர் வைத்து வருகின்றனர்.
Q71. தூசு புயல் -- Dust Devil என்பது என்ன?
பூமியின் பரப்பில் வெப்பம் அதிகரிக்கும் போது ஏற்படக்கூடிய தூசு சுழல்.
Q72. உலகின் எந்த பகுதியில் மிக வேகமான தரை பரப்புக் காற்று பதிவு செய்யப் பட்டுள்ளது?
வாஷிங்டன் மலை, நியூ ஹேம்ப்ஷையர், ஐக்கிய ராஜ்யம்.