Khub.info Learn TNPSC exam and online pratice

சகாப்தங்களும், உயிரினங்கள் தோன்றுதலும் -- ERAS AND EVOLUTION OF LIFE

Q1. சகாப்தம் - Era என்பது என்ன?
ஒரு நிகழ்வின் தொடக்க மற்றும் முடிவின் கால நேரம். ஒரு முடிவுக்குப் பிறகு தோன்றுவது புதிய சகாப்தம்.

Q2. புவியியல் ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள நான்கு முக்கிய சகாப்தங்கள் யாவை?
1. ப்ரி கேம்ப்ரியன் Pre Cambrian
2. பேலஸாயிக் Palezoic
3. மெஸோஸாயிக் Mesozoic
4. சென்ஸாயிக் Cenozoic.
இவற்றுள் ப்ரி கேம்ப்ரியன் Pre Cambrian சகாப்தம் மிகவும் நீளமானது.
Q3. பூமி உருவானது எந்த சகாப்தத்துடன் தொடர்பு கொண்டது?
ப்ரி கேம்ப்ரியன் சகாப்தம் -- Pre Cambrian Era – சுமார் 4600 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக பூமியின் மேற் பரப்பும் கண்டங்களும் உருவானதாகத் தெரிகிறது.
Q4. வளிமண்டலம் atmosphere உருவானது எந்த சகாப்தத்தில்?
ப்ரி கேம்ப்ரியன் சகாப்தம் -- Pre Cambrian Era.
Q5. உயிரினங்கள் எப்போது எந்த சகாப்தத்தில் உருவானதாகத் தெரிகிறது?
3300 மில்லியன் வருங்களூக்கு முன்பாக, ப்ரி கேம்ப்ரியன்--Pre Cambrian Era சகாப்தத்தில்.
Q6. ப்ரி கேம்ப்ரியன் சகாப்தம் எந்த காலம் வரை நீடித்தது?
570 மில்லியன் ஆண்டுகள் முன்பு வரை.
Q7. இரண்டாவது சகாப்தம் எது?
பேலஸாயிக் சகாப்தம். Palezoic Era.
Q8. பேலஸாயிக் சகாப்தம் எத்தனை காலக்கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
ஆறு – 1. கேம்ப்ரியன் Cambrian 2. ஆர்டோவிசியன் Ordovician 3. சிலூரியன் Silurian 4. தேவோனியன் Devonian 5. கார்போனிஃபெரஸ் Carboniferous மற்றும் 6. பெர்மியன் Permian.
Q9. பேலஸாயிக் சகாப்தம் நிலவிய காலம் என்ன?
570 முதல் 225 மில்லியன் வருடம் முன்பு வரை.
Q10. பேலஸாயிக் சகாப்தத்தில் நடந்த நிகழ்வுகள் யாவை என நம்பப்படுகிறது?
1. உயிரினம் தரைப்பகுதிக்கு வந்தது Life comes ashore
2. காலேடோனியன் மலைகள் உருவானது Caledonian Mountains rise
3. மத்திய ஐரோப்பிய மலைகள் உருவானது. Central European mountains comes up.
Q11. மூன்றாவது சகாப்தம் என்ன?
மெஸோஸாயிக் சகாப்தம் Mesozoic Era.
Q12. மெஸோஸாயிக் சகாப்தத்தின் நிலவிய காலக்கட்டம் என்ன?
225 மில்லியன் வருடங்கள் முன்பு தொடங்கி, 65 மில்லியன் வருடங்கள் முன்பு முடிவடைந்தது.
Q13. மெஸோஸாயிக் சகாப்தம் எத்தனை துணைக்காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
1. ட்ரைய்யாஸிக் Triassic 2. ஜூராஸிக் Jurrasic மற்றும் 3. க்ரிடேசியஸ் -- Cretaceous.
Q14. மெஸோஸாயிக் சகாப்தத்தில் நடந்தவைகளாக நம்பப்படும் நிகழ்வுகள் எவை?
1. உரால் மலைகள் உருவானது Ural Mountains rising
2. கண்டப்பிளவு ஏற்பட்டது -- Panagea breaking up
3. வடக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் கடல்கள் பிரிவு North and South Atlantic opening up
4. அண்டார்டிகாவிலிருந்து இந்திய பகுதி 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரிதல் -- India splitting from Antarctica some 100 million years ago.
Q15. சகாப்தங்களின் கடைசி சகாப்தம் எது?
சென்ஸாயிக் சகாப்தம் -- Cenozoic Era -- 65 மில்லியன் ஆண்டுகள் முன்பாக தொடங்கியது.
Q16. சென்ஸாயிக் சகாப்தம் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
1. டெர்ஷியரி Tertiary & 2. க்வாட்டெனரி Quatenary.
Q17. சென்ஸாயிக் சகாப்தத்தில் உள்ள இரண்டு துணைப்பிரிவுகள் மேலும் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
"இவைகள் ஆங்கிலத்தில் Epoch: சகாப்தங்கள் எனவே வழங்கப்படுகிறது. சென்ஸாயிக் சகாப்தத்தில் உள்ள இரண்டு துணை சகாப்தங்கள் மேலும் சில பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
1. டெர்ஷியரி துணை சகாப்தம் Tertiary Period: 1. பேலோசீன் Palocene
2. இவோசீன் Eocene
3. ஓலிகோசீன் Oligocene
4. மைக்கோசீன் Micocene மற்றும்
5. ப்ளையோசீன் Pliocene.
2. க்வாடெனரி துணை சகாப்தம் Quatenary Period: 1. ப்ளீஸ்டோசீன் Pleistocene மற்றும்
2. ஹாலோசீன் Holocene."
Q18. சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன் ஹாலோசீன் துணை சகாப்தம் தொடங்கியதாக நம்பப்படுகிறது?
சுமார் 15000 ஆண்டுகளுக்கு முன்.
Q19. இப்போதுள்ள புவியியல் சகாப்த காலம் என்ன?
சென்ஸாயிக் சகாப்தம் -- க்வாடெனரி காலம் -- ஹாலோசீன் துணை சகாப்தம். Cenozoic Era, Quatenary Period and Holocene Epoch.
Q20. மனித உயிரினம் தோன்றிய நிலைவரிசை என்ன?
1. ஹோமோ ஹேப்ளிஸ் Homo Habilis என்ற நிலையிலிருந்து இரண்டு மாற்ற நிலைகள் –
2. ஹோமோ எரெக்டஸ் Homo Erectus மற்றும்
3. ஹோமோ சேப்பியன்ஸ் Homo Sapiens - என்ற தற்போதைய மனித நிலை.
Q21. எந்த கண்டத்தில் ஹோமினிட் என்ற இனத்திலிருந்து மனித இனம் தோன்றியதாக நம்பப்படுகிறது?
ஆப்பிரிக்கா
Q22. இன்றைய மனித இனம், எந்த ஹோமினிட் பரிணாம வளர்ச்சியை சார்ந்தது?
ஹோமோ சேப்பியன் -- Homo Sapiens.
Q23. நாடோடிகள் Nomads எனப்படுபவர்கள் யாவர்?
மனிதர்கள் ஒரு நிலையான இடத்தில் வாழ்க்கை நடத்தாமல் இடப்பெயர்ச்சி செய்து கொண்டே இருப்பவர்கள்.
Q24. பழங்குடியினர் -- Aborigines எனப்படுபவர்கள் யாவர்?
பொதுவாக, காலம் காலமாக ஒரே இடத்தில், குறிப்பாக காடுகளில் வாழ்ந்து கொண்டு, வெளி உலக நகர மக்களுடன் கலக்காமல் வாழும் இனத்தவர் -- குறிப்பாக ஆஸ்திரேலிய காடுகளில் வாழும் மக்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.
Q25. ஆங்கிலத்தில் “Azoic” எனப்படுவது என்ன?
ப்ரிகேம்ப்ரியன் சகாப்தம் காலத்துக்கு முன்பாக உயிரினங்கள் இல்லாத காலத்தை இவ்வாறு அழைப்பர்.
Q26. தாவரம், விலங்கு, கண்டங்கள், சூரிய குடும்பம், மற்றும் இதர புவியியல் நிகழ்வுகள் ஏற்பட்ட காலமாக இருந்த காலம் எது?
ப்ரி கேம்ப்ரியன் சகாப்தம் -- Pre Cambrian Era.
Q27. "பரிணாம வளர்ச்சி கோட்பாடு" முதலில் எடுத்துரைத்தவர் யார்?
சார்லஸ் டார்வின் -- Charles Darwin – “The Beagle” என்ற கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இந்த ஆய்வுகளை மேற்கொண்டு, பிறகு கலபேகோஸ் தீவு என்ற இடத்தில் தங்கி மேலும் ஆய்வுகளை மேற்கொண்டார்.
Q28. கற்காலத்தையும், இரும்புக் காலத்தையும் தொடர்ந்த காலம் எது?
வெண்கல காலம்
Q29. இப்போதுள்ள புவியியல் காலத்தின் பெயர் என்ன?
ஹாலோசீன் -- Holocene.
Q30. ஆங்கிலத்தில் Panagea என்பது என்ன?
கண்ட நகர்வு ஏற்படுவதற்கு முன் இருந்த பிளவுபடாத ஒரே தரைப்பகுதியாக இருந்த நிலப்பகுதி.
Q31. ஆங்கிலத்தில் Pantalassa என்பது என்ன?
கண்ட நகர்வு ஏற்படுவதற்கு முன் இருந்த பிளவுபடாத ஒரே நீர்ப்பகுதி.