Khub.info Learn TNPSC exam and online pratice

காந்தேஷ் பகுதி KHANDESH REGION 1389-1601

Q1. காந்தேஷ் பகுதி என்பது …...Khandesh region lies in?
"தபதி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு பகுதி. இந்த பகுதிக்கு இந்த பெயர் வரக்காரணம், இந்த பகுதியை 14/15 வது நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னர்கள் ""கான்"" என்ற அடைமொழியை தங்கள பெயருடன் இணைத்திருந்ததால் எனத் தெரிகிறது. (கான் - தேஷ் = (நாடு)"

Q2. காந்தேஷ் குறுநாட்டு மன்னராட்சியை நிறுவியவர் யார்?
மாலிக் ராஜா ஃபரூக்கி MALIK RAJAH FARUQI – 1389-1399 - ஃபிருஸ்ஷா துக்ளக்கின் ஆளுநர். டெல்லி சுல்தானியம் சரிய தொடங்கிய போது, இவர் தனது தனி ராஜ்யத்தை 1389ல் அறிவித்துக் கொண்டு 1399 வரை ஆட்சி புரிந்தார். குஜராத் சுல்தானிடமிருந்து அச்சுறுத்தல்கள் வந்த போது, மாளவ பகுதி சுல்தான் குடும்பத்துடன் சமூக உறவு ஏற்படுத்திக் கொண்டு ஆட்சி புரிந்தார்.
Q3. காந்தேஷ் பகுதியின் இதர மன்னர்கள் யாவர்?
நாசிர் கான் NASIR KHAN – 1399-1437 – மாலிக் ராஜா வின் மைந்தன். குஜராத் சுல்தான் அஹமத் ஷாவிடம் தோல்வி கண்டு அவருடைய அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு ஆட்சி தொடர்ந்தார்.
மீரான் அடில் கான் MIRAN ADIL KHAN I – 1437-1441;
மீரான் முபாரக் MIRAN MUBARAK – 1447-1457;
அயில் கான் AIL KHAN II – 1457 and 1503.
இதற்கு பிறகு மூன்று பலவீனமான மன்னர்கள் ஆட்சியைத் தொடர்ந்து 1601ல் முகலாய மன்னர் அக்பர் வசம் ஆட்சி மாறியது.