Khub.info Learn TNPSC exam and online pratice

மாளவா பகுதி MALWA REGION – 1390 – 1561

Q1. மாளவப்பகுதி என்பது என்ன?
"இன்றைய ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தின், திவாஸ், தார், இந்தூர், ஜபூரா, மண்ட்சார், நீமக், ராஜ்கார், ரத்லாம், ஷாஜாபூர், உஜ்ஜெயின், குணா வின் சில பகுதிகள், செஷோர், ஜலாவர், பன்ஸ்வாரா, மற்றும் சித்தோர்கர் மாவட்டங்கள் கொண்ட பகுதி. ஆங்கிலேயர்களால் இந்த பகுதி ""Malwa Agency"" என அழைக்கப்பட்டு, சுதந்திரத்திற்கு பிறகு, சில எல்லை மாற்றங்களுடன் மத்திய பிரதேசம் ஆனது. "

Q2. மாளவா பகுதியை ஆண்டவர்கள் யாவர்?
"டெல்லி சுல்தானியம் சரிவை நெருங்கும் போது உருவான ஒரு முக்கியமான ராஜ்யம். இந்த பகுதியை ஆண்ட மன்னர்களுள் முக்கியமானவர்கள்:
திலாவர் கான் கூரி -- DILAWAR KHAN GHURI – 1390-1406 – துக்ளக் வம்சத்தினரால் ஆளுநராக நியமிக்கப்பட்டவர். 1401/2 ல் இந்த பகுதியை தனி ராஜ்யமாக அறிவித்துக்கொண்டு 1406 வரை ஆண்டார்.
ஆல்ப் கான் ALP KHAN - 1406-1435 – ஹூசங் ஷா என அழைக்கப்பட்டார். ஹோஷங்காபாத் நகரை நிறுவியவர்.
முகமது ஷா MUHAMMAD SHAH – 1435-36 – திறமையற்றவராக இருந்ததால், கில்ஜி வம்ச பிரதிநிதி ஆட்சிக்கு வந்தார்.
மஹ்மூத் கில்ஜி MAHMUD KHILJI – 1436-1439 – இது இந்த வம்ச ஆட்சியாகவே 1531 வரை நீடித்தது. இந்த வம்சத்தின் (கில்ஜி) கடைசி மன்னரான மஹ்மூத் கில்ஜி 2, குஜராத்தின் பகதூர் ஷா வால் தோற்கடிக்கப்பட்டு, பிறகு ஹூமாயூன், மல்லு கான், கில்ஜி வம்சத்தின் ஒரு அதிகாரி, ஷேர் ஷா ஆளுநர் பேஸ் பகதூர் என சில ஆட்சிகளை சந்தித்து 1561ல் அக்பரால் கைப்பற்றப்பட்டது.