Khub.info Learn TNPSC exam and online pratice

ஜார்க்கண்ட்

Q1. ஜார்க்கண்ட் : JHARKHAND
தொடக்கம் : 15.11.2000.
தலை நகர் : ராஞ்சி.
பரப்பளவு : 79714 ச.கி.மீ. (16வது நிலை)
ஜனத்தொகை : 3,29,88,134 (13வது)
மொழிகள் : 24
முக்கிய நகரங்கள் : தன்பாத், பொக்காரோ, ராஞ்சி, ஜம்ஷெட்பூர்
மாநில எல்லைகள் : மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், உத்திர பிரதேசம், பீஹார்.
மக்களவை தொகுதிகள் : 14
மாநிலங்களவை தொகுதிகள் : 6
சட்டமன்ற தொகுதிகள் : 81
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : கோயல், தாமோதர், சுபர்ணரேகா.
மாநில மலர் : காட்டுத் தீ மர பூக்கள்.
மாநில மரம் : சால்.
மாநில பறவை : குயில்
மாநில மிருகம் : யானை
மாநில ஆளுநர் : திரௌபதி முர்மு.
மாநில முதன் மந்திரி : ரகுபர் தாஸ்.


Q2. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் முக்கிய மந்திரி யார்?
பாபுலால் மராண்டி . 2000 - 2003.

Q3. ஜார்க்கண்ட் மாநிலம் அமையக் காரணமாய் இருந்த அமைப்பு / கட்சி எது?
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. பிர்ஸா முண்டா என்ற பழங்குடி சுதந்திர போராட்ட வீரர் நினைவாக 1972ல் ஷிபு சொரேன் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம், தற்போது ஒரு மாநில அரசியல் கட்சியாக இயங்கி வருகிறது.
Q4. ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிறப்புப்பெயர் என்ன?
1. கனிமங்கள் மாநிலம் - State of Minerals.
2. வனம் நிறைந்த பகுதி - Land of Forests.
Q5. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முக்கிய பெரு நகரங்கள் யாவை?
ராஞ்சி, பிலாய், தன்பாத், பொக்காரோ, ஜம்ஷெட்பூர், ஹசாரிபாக்.
Q6. ஜார்க்கண்ட் மாநிலத்தின் மக்களவை தொகுதிகள் யாவை?
1. ராஜ்மகால் (ST) 2. தும்கா (ST) 3. கொட்டா 4. கோதர்மா 5. கிரிதிஹ் 6. தன்பாத் 7. சத்ரா 8. ராஞ்சி 9. ஜம்ஷெட்பூர் 10. சிங்பூம் (ST) 11. குந்த்தி (ST) 12. லோஹர் தாகா (ST) 13. பலமாவ் (SC) 14. ஹசாரி பாக்.
Q7. ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநகராட்சிகள் யாவை?
1. தன்பாத் 2. ராஞ்சி 3. பொக்காரோ 4. தேவகர் 5. டால்டன் கஞ்ஜ்.
Q8. ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாவட்டங்கள் யாவை?

1. பொக்காரோ : மேற்கு வங்காளம் மற்றும் ராம்கர், ஹசாரி பாக், கிரிதிஹ், தன்பாத் மாவட்டங்கள் இதன் எல்லை. ""எஃகு நகரம்"" என பெயர் பெற்றது. மிக அழகான சுத்தமாக இருக்கும் மாவட்டம்.
2. சத்ரா : பீஹார் மற்றும் ஹசாரிபாக், ராஞ்சி, லத்தேஹர், டால்டங்கஞ்ச் மாவட்டங்கள் இதன் எல்லை. நக்ஸல்களின் ஊடுருவல் உள்ள மாவட்டம், பின் தங்கிய மாவட்டம்.
3. தேவ்கர் : பீஹார் மற்றும் கிரிதிஹ், ஜம்தாரா, தும்கா மாவட்டங்கள் இதன் எல்லை. பின் தங்கிய மாவட்டம்.
4. தன்பாத் : மேற்கு வங்காளம் மற்றும் ஜம்தாரா, கிரிதிஹ், பொக்காரோ மாவட்டங்கள் இதன் எல்லை. நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில், இந்திய சுரங்க கல்வி மையம் (Indian Institute of Mines) இங்குள்ளது. தென் கிழக்கு ரயில்வேயின் ஒரு மண்டலம். மாசு அதிகமுள்ள மாவட்டம்.
5. தும்கா : மேற்கு வங்காளம் மற்றும் ஜம்தாரா, தேவ்கர், கோட்டா மற்றும் பக்காவ்ர் மாவட்டங்கள் இதன் எல்லை.
6. கிழக்கு ஜிங்பும் : மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் செராய்கேலா மாவட்டம் இதன் எல்லை.
7. கார்வா : பீஹார், உத்திரபிரதேசம், சத்தீஸ்கர் மா நிலங்கள், பலமாவ், லத்தேஹார் மாவட்டங்கள் இதன் எல்லை.
8. கிரிதிஹ் : பீஹார் மற்றும் கோதர்மா, ஹசாரிபாக், பொக்காரோ, தன்பாத், ஜம்தாரா, தேவ்கர் மாவட்டங்கள் இதன் எல்லை. மைக்கா மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் நிறைந்தது.
9. கோட்டா : பீஹார் மா நிலம் மற்றும் சாஹிப்கஞ்ச், பக்காவ்ர், தும்கா மாவட்டங்கள் இதன் எல்லை. பழங்குடி மக்கள் அதிகமுள்ள மாவட்டம்.
10. கும்லா : சத்தீஸ்கர் மாநிலம், லத்தேஹர், லோஹர் தாகா, ராஞ்சி, குன்ட்டி, சிம்தேகா மாவட்டங்கள் இதன் எல்லை.
11. ஹசாரிபாக் : பீஹார் மாநிலம், சத்ரா, ராம்கர், பொக்காரோ, கிரிதிஹ், கோதர்மா மாவட்டங்கள் இதன் எல்லை. ஹசாரி பாக் என்றால் ஆயிரம் தோட்டங்கள் என்று பொருள். பெயருக்கேற்றவாறு நிறைய தோட்டங்கள் நிறைந்த நகரம். அழகான சூழ்நிலை கொண்ட மாவட்டம்.
12. ஜம்தாரா : மேற்கு வங்காள மாநிலம், தன்பாத், கிரிதிஹ், தேவ்கர், தும்கா மாவட்டங்கள் இதன் எல்லை.
13. குன்ட்டி : சிம்தேகா, கும்லா, ராஞ்சி, சேராய்கேலா கரஸ்வான், மேற்கு சிங்பும் மாவட்டங்கள் இதன் எல்லை.
14. கோதர்மா : பீஹார் மாநிலம் மற்றும் கிரிதிஹ், ஹசாரி பாக் மாவட்டங்கள் இதன் எல்லை.
15. லத்தேஹர் : சத்தீஸ்கர் மாநிலம், கார்வா, பலமாவ், சத்ரா, ராஞ்சி, லோஹர்தாகா மாவட்டங்கள் இதன் எல்லை.
16. லோஹர் தாகா : கும்லா, லத்தேஹர், ராஞ்சி மாவட்டங்கள் இதன் எல்லை.
17. பக்காவ்ர் : மேற்கு வங்காளம் மாநிலம் மற்றும் சாஹிப் கஞ்ச், கோட்டா, தும்கா மாவ்ட்டங்கள் இதன் எல்லை.
18. பலமாவ் : பீஹார் மாநிலம், கார்வா, லத்தேஹர், சத்ரா மாவட்டங்கள் இதன் எல்லை. சால் மற்றும் மூங்கில் மற்றும் இதர காடுகள் அதிகம். தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் உள்ளது. புலிகள் கணக்கெடுப்பு 1932ல் இங்குதான் முதன்முதலில் நடத்தப்பட்டது.
19. ராஞ்சி : குன்ட்டி, கும்லா, லோஹர் தாகா, லத்தேஹர், சத்ரா, ராம்கர், பொக்காரோ, செராய்கேலா கரஸ்வான் மாவட்டங்கள் இதன் எல்லை. ஆங்கிலேயர்கள் காலத்தில் ராஞ்சி நகரம், பீஹார் மாகாணத்தின் கோடைகால தலைநகராக விளங்கியது. எஃகு மற்றும் சம்பந்தப்பட்ட தொழில், காய்கறி விளைச்சல் ஆகியவை புகழ்பெற்றது. இந்த நகரும் மாவட்டமும் மகேந்திர சிங் தோனியின் வரவால் மேலும் புகழ் பெற்றது.
20. ராம்கர் : ராஞ்சி, ஹசாரிபாக், பொக்காரோ மாவட்டங்கள் இதன் எல்லை.
21. சாஹேப் கஞ்ச் : மேற்கு வங்க மாநிலம், பீஹார் மாநிலம், கோட்டா மற்றும் பக்காவ்ர் மாவட்டங்கள் இதன் எல்லை.
22. சேராய் கேலா கரஸ்வான் : ராஞ்சி, குன்ட்டி, மேற்கு சிங்பூம், கிழக்கு சிங்பூம் மாவட்டங்கள் இதன் எல்லை.
23. சிம்தேகா : ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்கள், கும்லா, குன்ட்டி, மேற்கு சிங்பூம் மாவட்டங்கள் இதன் எல்லை.
24. மேற்கு சிங்பூம் : ஒடிசா மாநிலம், சிம்தேகா, குன்ட்டி, சேராய்கேலா கரஸ்வான், மாவட்டங்கள் இதன் எல்லை.
24 மாநிலங்களில், 22 மாவட்டங்கள், பீஹார், சத்தீஸ்கர், உத்திரபிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. (குன்ட்டி மற்றும் லோஹர்தாகா மாவட்டங்கள் தவிர்த்து). 
Q9. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பிரபலங்கள் யாவர்?
1. பிர்சா முண்டா : சுதந்திர போராட்ட வீரர்.
2. கார்த்திக் ஆரோன் : பழங்குடி மக்களில் இருந்து கல்வியில் சிறந்து விளங்கி, கும்லா தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்து, 1981ல் மறைந்தவர்.
3. சிபு சோரேன் : ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர், மக்களவை உறுப்பினர், மத்திய அமைச்சர்.
4. யஷ்வந்த் சின்ஹா: I A S அதிகாரியாக இருந்து BJP கட்சியின் மூத்த தலைவர், மத்திய அமைச்சர் சிறந்த பேச்சாளர்.
5. மகேந்திர சிங் தோனி : ராஞ்சி நகரை சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்.
6. தனுஸ்ரீ தத்தா : இந்தி சினிமா நடிகை."