Khub.info Learn TNPSC exam and online pratice

கர்நாடகா:

Q1. கர்நாடகா:
தொடக்கம் : 01.11.1956.
தலை நகர் : பெங்களூரு.
பரப்பளவு : 1,91, 791 ச.கி.மீ. (7வது நிலை)
ஜனத்தொகை : 6,11,30,704 (8வது)
மொழி : கன்னடம், ஆங்கிலம்.
கல்வியறிவு : 75.60%
மாவட்டங்கள் : 30
முக்கிய நகரங்கள் : பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஹாசன், பீஜாப்பூர், தார்வாட், குல்பர்கா, ரெய்ச்சூர், உடுப்பி, ஷிமோகா.
மாநில எல்லைகள் : அரபிக்கடல், கோவா, மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ் நாடு, கேரளா.
மக்களவை தொகுதிகள் : 28
மா நிலங்களவை தொகுதிகள் : 12
சட்டமன்ற தொகுதிகள் : 224 + 75
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : காவேரி, துங்கா, பத்ரா, கபினி, கிருஷ்ணா, ஷ்ராவதி.
மாநில மலர் : தாமரை.
மாநில மரம் : சந்தனம்.
மாநில பறவை : இந்தியன் ரோலர் - மரங்கொத்தி.
மாநில மிருகம் : யானை
மாநில ஆளுநர் : வஜூபாய் வாலா.
மாநில முதன் மந்திரி : ஹெச்.டி.குமாரசாமி


 

Q2. வரலாற்று சுருக்கம்:
இந்தப் பகுதி, சதவாஹனா, கடம்பா, கங்கா, விஜயநகர, பஹமானி சுல்தான், அடில் ஷாஹி சுல்தான், ஹைதர் மற்றும் திப்பு சுல்தான், உடையார் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்தனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் குறு நில மன்னர் பகுதியாக இருந்து, சுதந்திரத்திற்கு பிறகு சில எல்லை மாற்றங்களுடன் மைசூர் மாகாணம் என இயங்கி வந்தது.
Q3. மைசூர் மாநிலம் எப்போது முதல் கர்நாடகா மாநிலம் ஆனது?
1973
Q4. கர்நாடக மாநிலத்தின் முதல் முதலமைச்சர் யார்?
கே.செங்கல்வராய ரெட்டி 1947-1952
Q5. கர்நாடக மாநிலத்தின் மக்களவை தொகுதிகள் யாவை?
1.சிக்கோடி, 2. பெல்காம், 3.பகல்கோட், 4. பீஜாப்பூர் (ST), 5. குல்பர்கா (SC), 6. ராய்ச்சூர் (ST), 7. பிதார், 8. கொப்பல், 9. பெல்லாரி (ST), 10. ஹவேரி, 11. தார்வாட், 12. கிழக்கு கன்னடா, 13.தாவங்கரோ, 14. ஷிமோகா, 15. உடுப்பி சிக்மகளூர் 16. ஹாசன், 17. தக் ஷின கன்னடா 18. சித்ர துர்கா (SC), 19. தும்கூர், 20. மாண்ட்யா, 21. மைசூரு, 22. சாமராஜ் நகர் (SC), 23. பெங்களூரு புற நகர், 24. பெங்களூரு வடக்கு, 25. மத்திய பெங்களூரு, 26. தெற்கு பெங்களூரு, 27. சிக்பல்லாபூர், 28. கோலார் (SC).
Q6. கர்நாடக மாநிலத்தின் மாநகராட்சிகள் யாவை?
1. பெங்களூரு, 2. ஹூப்ளி - தார்வாட், 3. மைசூர், 4. குல்பர்கா, 5. மங்களூரு, 6. பெல்காம், 7. தவங்கேரே, 8. பெல்லாரி, 9. தும்கூர், 10. ஷிமோகா, 11. பீஜாப்பூர், 12. கார்வார்.
Q7. கர்நாடக மாநிலத்தின் மாவட்டங்கள் யாவை?

1. பகல்கோட் : பீஜாப்பூர், ரெய்ச்சூர், கொப்பல், கடக், பெல்காம் மாவட்டங்கள் இதன் எல்லை. சாளுக்கிய வம்சத்தின் (புலிகேசி I ன்) தலை நகர். UNESCO வால் அங்கீகரிக்கப்பட்ட உலகப்புராதன சின்னங்கள் பட்டக்கல் என்ற இடத்தில் உள்ளது. கைத்தறி நெசவு முக்கிய தொழில்.
2. பெங்களூரு புற நகர் : பெங்களூரு நகரம், ராம நகரா, தும்கூரு, சிக்பல்லாபூர்,கோலார் மாவட்டங்கள் இதன் எல்லை.
3. பெங்களூரு நகரம் : கண்டோன்மெண்ட், பெங்களூரு சிட்டியுடன் கூடிய இரட்டை நகரம். ராம் நகரா, பெங்களூரு புறநகர், கோலார் மாவட்டங்கள் இதன் எல்லை.
4. பெல்காம் : மகாராஷ்டிரா, கோவா மாநிலங்கள், பீஜாப்பூர், பகல்கோட், கடக், தார்வாட், உத்தர கன்னட மாவட்டங்கள் இதன் எல்லை.
5. பெல்லாரி : ஆந்திர பிரதேச மா நிலம், ரெய்ச்சூர், கொப்பல்,கடக்,ஹவேரி, தவங்கேரே, சித்ர துர்கா மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம், (சிறாப்பாக வெங்காயம்) முக்கிய தொழில். சந்தூர், ஹோஸ்பேட் ஆகிய இடங்களில் கனிம சுரங்கங்கள் அதிகமுள்ளது.
6. பிதார் : தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களும், குல்பர்கா மாவட்டமும் இதன் எல்லை. தானியங்கள் விளைச்சலில் முக்கிய இடம்.
7. பீஜாப்பூர் : மகாராஷ்டிரா மாநிலம், பெல்காம், பகல்கோட், ரெய்ச்சூர், யாத்கிர், குல்பர்கா மாவட்டங்கள் இதன் எல்லை. அடில்ஷாஜி வம்சத்தின் தலை நகர். கோல் கும்பாஸ் மற்றும் இதர கட்டிடக்கலை நிறைந்த இடங்கள் உள்ளன. ராணுவப்பள்ளி இங்குள்ளது. நரசாப்பூர் என்ற இட்த்தில் நடைபெறும் திருவிழா புகழ்பெற்றது.
8. சாம்ராஜ் நகர் : தமிழ் நாடு மாநிலம், மைசூர், மாண்ட்யா, ராம் நகரா மாவட்டங்கள் இதன் எல்லை. வனப்பகுதி அதிகமுள்ள மாவட்டம். பந்திப்பூர் தேசிய பூங்கா இங்குள்ளது.
9. சிக்பல்லாபூர் : ஆந்திர பிரதேச மாநிலம், தும்கூர், பெங்களூரு புற நகர், கோலார் மாவட்டங்கள் இதன் எல்லை.
10. சிக்மகளூர் : தக் ஷின கன்னடா, உடுப்பி, ஷிமோகா, சித்ர துர்கா, ஹசான் மாவட்டங்கள் இதன் எல்லை. இரும்பு, மேக்னசைட், க்ரேனைட் கனிமங்கள் நிறைந்த மாவட்டம். வளம், நீர்வீழ்ச்சிகள், காபி தோட்டங்கள் நிறைந்த மாவட்டம். குத்ரேமுக் இரும்பு சுரங்கம், தேசிய பூங்கா இங்குள்ளது. ஆதி சங்கரரின் பீடம் இங்குள்ளது.
11. சித்ர துர்கா : ஆந்திர மாநிலம், பெல்லாரி, தேவங்கேரே, சிக்மகளூர், தும்கூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
12. தக் ஷின் கன்னடா : அரபிக்கடல், கேரள மாநிலம், கொடகு, ஹாசன், சிக்மகளூர், உடுப்பி மாவட்டங்கள் இதன் எல்லை. சிகப்பு சுடுமண் ஓடுகளுக்கு புகழ் பெற்றது. மங்களூர் துறைமுகம், கப்பல் கட்டுதல், மீன்பிடி தொழில் நிறைந்தது.
13. தவங்கேரே : ஷிமோகா, ஹவேரி, பெல்லாரி, சித்ர துர்கா, சிக்மகளூர் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை.பருத்தி ஆலைகள் நிறைந்த இடம்.
14. தார்வாத் : உத்தர் கன்னடா, பெல்காம், கடக், ஹவேரி மாவட்டங்கள் இதன் எல்லை. பருத்தி ஆலைகள் நிறைய உள்ளது. ஹூப்ளி ரயில்வே சந்திப்பு மற்றும் மண்டலம் முக்கியமானது.
15. கடக் : பெல்காம், பகல்கோட், கொப்பல், பெல்லாரி, ஹவேரி, தார்வாத் மாவட்டங்கள் இதன் எல்லை.
16. குல்பர்கா : மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களும், பிதார், பீஜாப்பூர், யாத்கிர் மாவட்டங்கள் இதன் எல்லை.
17. ஹாசன் : கொடகு, தக் ஷிண கன்னடா, சிக்மகளூர், தும்கூர், மாண்ட்யா, மைசூரு மாவட்டங்கள் இதன் எல்லை. முக்கியமான சுற்றுலா தலம். மேலூர் மற்றும் ஹாளேபீடு முக்கிய சுற்றுலா மையங்கள்.
18. ஹவேரி : ஷிமோகா, உத்தர கன்னடா, தார்வாத், கடக், பெல்லாரி, தேவங்கேரே மாவட்டங்கள் இதன் எல்லை.
19. கொடகு : மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு மலைப்பிரதேச மாவட்டம். கேரளா மாநிலம், தக் ஷின கன்னடா, ஹாசன், மைசூரு மாவட்டங்கள் இதன் எல்லை. காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி இங்குள்ளது. பழங்குடி மக்கள் அதிகமுள்ள மாவட்டம்.
20. கொப்பல் : பெல்லாரி, கடக், பகல் கோட், ரெய்ச்சூர் மாவட்டங்கள் இதன் எல்லை. ஹம்பி உலக புராதனச் சின்னம் இங்கு அமைந்துள்ளது.
21. கோலார் : ஆந்திரா மற்றும் தமிழ் நாடு மாநிலங்களில் சிக்பல்லாபூர், பெங்களூரு புற நகர், மாவட்டங்கள் இதன் எல்லை. தங்கச் சுரங்கம் இங்கு இயங்கி வந்தது. இப்போது மூடப்பட்டு விட்டது.
22. மாண்ட்யா : மைசூரு, ஹாசன், தும்கூர், ராம நகரா, சாமராஜ் மாவட்டங்கள் இதன் எல்லை. கோவில்கள் - பிருந்தாவன் தோட்டம், கிருஷ்ண சாகர் அணை, சிவன சமுத்ரம் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளன. ஸ்ரீரங்கப்பட்டினம் இம்மாவட்டத்திலுள்ளது.
23. மைசூரு : கேரளா, கொடகு, ஹாசன், மாண்ட்யா, சாமராஜ் மாவட்டங்கள் இதன் எல்லை. உடையார் வம்சத்தினரின் தலை நகர். தசரா திருவிழா புகழ் பெற்றது. மிகச்சிறந்த சுற்றுலா நகரம். நகர்ஹோல் மற்றும் பண்டிபூர் தேசிய பூங்கா, அரண்மனை, சாமுண்டீஸ்வரி கோவில் மற்றும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. பட்டு மற்றும் சந்தனப் பொருட்களுக்கு புகழ் பெற்றது. மத்திய உணவு ஆராய்ச்சி மையம், பேச்சு மற்றும் கேள்வித்திறன் கல்வி ஆராய்ச்சி மையம் இங்குள்ளது.
24. ரெய்ச்சூர் : தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள், யாத்கிர், பீஜாப்பூர், பகல்கோட், கொப்பல் மாவட்டங்கள் இதன் எல்லை. படுக்கை விரிப்புகள், போர்வைகளுக்கு புகழ் பெற்ற மாவட்டம்.
25. ராம் நகரா : தமிழ் நாடு மாநிலம், சாமராஜ் நகர், மாண்ட்யா, தும்கூர், பெங்களூரு மாவட்டங்கள் இதன் எல்லை.
26. ஷிமோகா : உடுப்பி, உத்தர கன்னடா, ஹவேரி, தேவங்கேரே, சிக்மகளூர் மாவட்டங்கள் இதன் எல்லை. தொழில் மற்றும் வர்த்தக மாவட்டம். துங்கா மற்றும் பத்ரா நதிகள் கலக்குமிடம். ஜோக் நீர்வீழ்ச்சி, லிங்கன மக்கி அணை, ஷிமோகா கோட்டை மற்றும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன.
27. தும்கூர் : ஆந்திர மா நிலம், சிக்பல்லாபூர், பெங்களூர் புற நகர், பெங்களூர் நகரம், மாண்ட்யா, ஹாசன், சிக்மகளூர், சித்ர துர்கா மாவட்டங்கள் இதன் எல்லை. புளி தயாரிப்புக்கு புகழ் பெற்றது. வான்வெளி விஞ்ஞானி ராஜா ராமண்ணாவின் மாவட்டம்.
28. உடுப்பி : அரபிக்கடல், உத்தர கன்னடா, ஷிமோகா, சிக்மகளூரு, தக் ஷிண கன்னடா மாவட்டங்கள் இதன் எல்லை.
29. உத்தர கன்னடா : அரபிக்கடல், கோவா மாநிலம், பெல்காம், தார்வாட், ஹவேரி, ஷிமோகா, உடுப்பி மாவட்டங்கள் இதன் எல்லை. மலைப் பிரதேசம், விவசாயம், குறிப்பாக காய்கறிகள், முக்கிய தொழில்.
30. யாத்கிர் : தெலங்கானா மா நிலம், குல்பர்கா, பீஜாப்பூர், ரெய்ச்சூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
Q8. பெங்களூரு நகரை உருவாக்கியவர் யார்?
முதலாம் கெம்பே கௌடா மன்னர்.
Q9. பெங்களூரு நகரம் எந்த சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது?
"தோட்ட நகரம்" மற்றும் "சிலிகான் பள்ளத்தாக்கு".
Q10. கர்நாடக தலை நகரம் பெங்களூரைப் பற்றிய தகவல்கள் ....
1. 1.11.2006 க்கு முன் பெங்களூர் என அழைக்கப்பட்டது. இப்போது பெங்களூரு.
2. தொழிற் துறையில் மிகவும் முன்னேறிய நகரம். குறிப்பாக தகவல் தொடர்பு துறையில் கீழ்க்கண்ட சில முக்கியமான தொழில் நிறுவனங்கள் உள்ளன.
அ) ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ்,
ஆ) பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்,
இ) ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்,
ஈ) பாரத் எர்த் மூவர்ஸ்,
உ) வீல் அண்டு ஆக்ஸில் ப்ளாண்ட்,
ஊ) விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற கணினி மென்பொருள் நிறுவன்ங்கள்,
எ) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்,
ஏ) இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன்,
ஐ) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்,
ஒ) டிஃபென்ஸ் ரிசர்ச் அன்டு டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன்.
ஓ) இந்திய விண்வெளிக்கழகம் ---மற்றும் பல நிறுவனங்கள்.
3. கெம்பெ கௌடா சர்க்கிள், லால் பாக், விதான் சௌதா, இஸ்கான் கோவில் என பல சுற்றுலா மையங்கள்."
Q11. கர்நாடக மாநிலத்தின் முக்கியமான இயற்கை வள சொத்து எது?
எஃகு கனிமம் - குத்ரேமுக் சுரங்கம்.
Q12. கர்நாடகத்தின் முக்கியமான திருவிழா எது?
தசரா.
Q13. பெங்களூரு நகரின் முக்கியத்துவம் என்ன?
இங்குள்ள சிட்டி மார்க்கெட் பகுதியில் தான் இந்தியாவில் முதன் முதலில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.
Q14. கர்நாடகாவின் பிரச்சனைகள் யாவை?
1. அரசியல் குழப்பங்கள்,
2. கிராமப்புற அறிவின்மை,
3. காவிரி நீர் பிரச்சனை - தமிழ் நாட்டுடன்.
Q15. கர்நாடகாவின் சட்டசபை "விதான் சௌதா" எனப்படுகிறது. இதே போல் மற்றொரு கட்டிடமும் கட்டப்படுகிறது. அதன் பெயர் என்ன?
விகாஸ் சௌதா.
Q16. கர்நாடகத்தின் பிரபலங்கள் யாவர்?
சரித்திரம் / அரசியல் : திப்பு சுல்தான், உடையார் வம்சம், தேவராஜ் உர்ஸ், பி.டி. ஜட்டி, தேவே கௌடா, ராமகிருஷ்ண ஹெக்டே, ஹனுமந்தைய்யா, எஸ். எம். கிருஷ்ணா.
தொழிலதிபர்கள் : விஜய் மல்லய்யா, நாராயணமூர்த்தி, அஸிம் ப்ரெம்ஜி, கிரண் மஜும்தார், விஸ்வேஸ்வரய்யா.
விஞ்ஞானிகள் / கல்வியாளர்கள் : சர். சிவி. ராமன், ராஜா ராமண்ணா, U.R. ராவ், T.A. பாய்.
சினிமா / இசை : டாக்டர். ராஜ்குமார், கிரிஷ் கர்ணாட், பி.வி. கரந்த், ஐஸ்வர்யாராய், ஷ்யாம் பெனகல், சௌந்தர்யா, லக்கி அலி, டினோ மொரியா, சௌடைய்யா, ரமணி அம்மாள் மற்றும் பலர்.
விளையாட்டு : EAS ப்ரசன்னா, GR விஸ்வ நாத், ஜவகல் ஸ்ரீ நாத், ராகுல் ட்ராவிட், ரோஜர் பின்னி, சையத் கிர்மானி, சந்திரசேகர், ராபின் உத்தப்பா - கிரிக்கெட் வீர ர்கள். B.P. கோவிந்தா, M.P. கணேஷ், M.M. சோமைய்யா,அர்ஜுன் ஹாலப்பா, லென் ஐயப்பா, கிருஷ்ணமூர்த்தி, - ஹாக்கி வீர ர்கள். மகேஷ் பூபதி (டென்னிஸ்), நிஷா மில்லெட் ( நீச்சல்), ப்ரகாஷ் படுகோனே, விமல்குமார் (பேட்மிண்டன்), பஞ்கஜ் அத்வானி (மேசைப்பந்து), சேட்டன் ப ப்பூர் (டேபிள் டென்னிஸ்).
பொது : R.K. லக்ஷ்மண் (கேலி சித்திரம்),ஃபீல்டு மார்ஷல் கரியப்பா, ஜெனரல் திம்மைய்யா (ராணுவம்), H.T. சங்கிலியானா IPS, BKS ஐயங்கார் (யோகா),Dr. உல்லாஸ் கரந்த் - விலங்கின நிபுணர், M.C. மோடி - கண் மருத்துவர், R.K. நாராயண் - எழுத்தாளர்.