கேரளா
Q1. கேரளா
தொடக்கம் : 01.07.1949/01.11.1956.
தலை நகர் : திருவன ந்தபுரம்.
பரப்பளவு : 38,863 ச.கி.மீ. (22வது நிலை)
ஜனத்தொகை : 3,33,87,677 (13வது)
மொழி : மலையாளம், ஆங்கிலம்.
கல்வியறிவு : 93.91%
மாவட்டங்கள் : 14
முக்கிய நகரங்கள் : திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம், ஆலப்புழை, கோழிக்கோடு, திருச்சூர், பாலக்காடு.
மாநில எல்லைகள் : அரபிக்கடல், தமிழ் நாடு, கர்நாடகம், மாஹே (புதுச்சேரியின் ஒரு மாவட்டம்).
மக்களவை தொகுதிகள் : 20
மாநிலங்களவை தொகுதிகள் : 9
சட்டமன்ற தொகுதிகள் : 141
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : பெரியார், பரதப்புழா, பம்பா, சாலியார், சாலக்குடி
மாநில மலர் : கனிகொன்னா.
மாநில மரம் : தென்னை.
மாநில பறவை : Great Horn Bill.
மாநில மிருகம் : யானை
மாநில ஆளுநர் : P. சதாசிவம்.
மாநில முதன் மந்திரி : பினராயி ராஜன்
Q2. வரலாற்று சுருக்கம் :
சேரர்களாலும், அவர்கள் வழிவந்த வர்மா மற்றும் சிறு மன்னர்களாலும் ஆண்டு வந்த பகுதி. சுதந்திரத்திற்கு முன்பாக திருவாங்கூர் மற்றும் கொச்சி - மலபார் குறுநில மன்னர் பகுதிகளாக இருந்தன. மா நில சீரமைப்பின்போது, மெட்ராஸ் மாகாணத்திலிருந்த மலபார் பகுதி இதனுடன் சேர்க்கப்பட்டு, கேரள மாநிலமாக 1.11.1956 முதல் இயங்கி வருகிறது.
Q3. கேரளாவின் முதல் முதலமைச்சர் யார்?
பட்டோம் தாணு பிள்ளை - 1948.
Q4. கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்கள் யாவை?
திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம், கோழிக்கோடு, ஆலப்புழை, திருச்சூர், பாலக்காடு, குருவாயூர்.
Q5. கேரள மாநிலத்தின் மக்களவை தொகுதிகள் யாவை?
1. காசர கோடு, 2. கன்னூர், 3. வடக்காரா, 4. வய நாடு, 5. கோழிக்கோடு, 6. மலப்புரம், 7. பொன்னானி, 8. பாலக்காடு, 9. ஆலத்தூர் (SC), 10. திருச்சூர், 11. சாலக்காடு, 12. எர்ணாகுளம், 13. இடுக்கி, 14. கோட்டயம், 15. ஆலப்புழை, 16. மாவேளிக்கரா (SC), 17. பத்தனம் திட்டா, 18. கொல்லம், 19. அட்டிங்கால், 20. திருவனந்தபுரம்.
Q6. கேரள மாநிலத்தின் மா நகராட்சிகள் யாவை?
1. திருவனந்தபுரம், 2. கொச்சி, 3. கோழிக்கோடு, 4. கொல்லம், 5. திருச்சூர், 6. கன்னூர்.
Q7. கேரள மாநில மாவட்டங்கள் யாவை?
1. ஆலப்புழை : அரபிக்கடல், கோட்டயம், பத்தனம் திட்டா, கொல்லம் மாவட்டங்கள் இதன் எல்லை. உப்பங்கழிகள் (கடல் நீர் நிலப்பகுதிக்குள் புகுந்திருப்பது - Backwaters). நிறைந்த அழகான சூழ் நிலை கொண்ட மாவட்டம். அதனால், ""கிழக்கு வெனிஸ்"" என அழைக்கப்படுகிறது. இந்த நீர்ப்பகுதியில், வருடந்தோறும் நட்த்தப்படும் ""நேரு படகுப்போட்டி"" உலகப்புகழ் பெற்றது. இதற்கு ""வள்ளம் களி"" என்ற பெயர் உண்டு. இந்த போட்டி ஆகஸ்ட் மாத த்தின் இரண்டாவது சனிக்கிழமை நட்த்தப்படுகிறது. கயிறு தயாரிப்பதும் விவசாயமும் முக்கிய தொழில்.
2. எர்ணாகுளம் : அரபிக்கடல், திருச்சூர், இடுக்கி, கோட்டயம் மாவட்டங்கள் இதன் எல்லை. கொச்சி துறைமுகம், மற்றும் தொழில் வர்த்தக ரீதியாக வளர்ந்த மாவட்டம். வர்த்தக ரீதியாக போர்ச்சுகீசியர்கள் 1503ல் இந்த மாவட்டத்தில் நுழைந்தனர். துறைமுகம், கப்பற்படைத்தளம், தேங்காய் நார் ஆணையம், கடற்சார் பொருட்கள் ஏற்றுமதி மையம், கடற்சார் கல்வி மையம், மத்திய மீன் வளர்ச்சி மையம் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் உள்ளன.
3. இடுக்கி : தமிழ் நாடு மா நிலம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம் திட்டா மாவட்டங்கள் இதன் எல்லை. வனம் நிறைந்த மலைப்பகுதி. இடுக்கி அணை, தேக்கடி மற்றும் முன்னார் போன்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதி. தேயிலை தோட்டங்கள் அதிகம்.
4. கன்னூர் : அரபிக்கடல், கர்நாடக மாநிலம் மற்றும் காசர கோட், வய நாடு, கோழிக்கோடு மாவட்டங்கள், மாஹே (புதுச்சேரி மாவட்டம்) இதன் எல்லை. இதற்கு முன்னால் கண்ணனூர் என அழைக்கப்பட்ட கடற்பகுதி மாவட்டம்.
5. காசர கோடு : அரபிக்கடல், கர்நாடக மாநிலம், கன்னூர் மாவட்டம் இதன் எல்லை. கடற்பகுதி மாவட்டம். இஸ்லாமியர்கள் நிறைந்த மாவட்டம். வனப்பகுதியும் அதிகம் உள்ளது.
6. கொல்லம் : அரபிக்கடல், தமிழ் நாடு மாநிலம், ஆலப்புழை, பத்தனம் திட்டா, திருவன ந்தபுரம் மாவட்டங்கள் இதன் எல்லை. கடற்பகுதி மாவட்டம். உப்பங்கழிகள், வனப்பகுதிகள் நிறைந்த சுற்றுலா மையம்.
7. கோட்டயம் : அரபிக்கடல் உப்பங்கழிகள், எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம் திட்டா, ஆலப்புழை மாவட்டங்கள் இதன் எல்லை. ரப்பர் தோட்டங்களும் தொழிற்சாலைகளும் நிறைந்த மாவட்டம். சிரியன் கிறித்துவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம்.
8. கோழிக்கோடு : அரபிக்கடல், கன்னூர், வய நாடு, மலப்புரம் மாவட்டங்கள் இதன் எல்லை. காலிகட் என அழைக்கப்படும், கடற்கரைப்பகுதி, இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி. 1498ல் இங்கு தான் வாஸ்கோடகாமா முதன் முதலில் வந்திறங்கினார். உயர்கல்வி நிலையங்கள் - IIM, NIT, மருத்துவக் கல்லூரி உள்ளது.
9. மலப்புரம் : அரபிக்கடல், தமிழ் நாடு மாவட்டம், கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்கள் இதன் எல்லை. இஸ்லாமியர்கள் நிறைந்த மாவட்டம்.
10. பாலக்காடு : தமிழ் நாடு, மலப்புரம், திருச்சூர் மாவட்டங்கள் இதன் எல்லை. சென்னை மாகாணத்திலிருந்து கேரளாவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி. கர்நாடக இசை மற்றும் பரத நாட்டியம் பயிற்சிக்கு புகழ்பெற்ற மாவட்டம். இந்திய நிர்வாகத்துறைக்கு அதிகமாக நபர்களை அனுப்பும் மாவட்டம். வன்ங்கள், விவசாயம் முக்கியத் தொழில். நாயர் சேவை சங்கம் பிரபலமான இயக்கம். தேசிய பூங்காக்கள் மற்றும் மலம்புழா அணை சுற்றுலா தலம்.
11. பத்தனம் திட்டா : தமிழ் நாடு மாநிலம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழை, கொல்லம் மாவட்டங்கள் இதன் எல்லை. சுவாமி ஐயப்பன் பிறந்த இடமான பந்தளமும், சபரி மலை கோவிலும் அமைந்துள்ளது. ஐயப்பனின் ஆபரணங்கள் பந்தள மகாராஜாவின் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது.
12. திருவனந்தபுரம் : அரபிக்கடல், தமிழ் நாடு மாநிலம், கொல்லம் மாவட்டம் இதன் எல்லை. தலை நகர் மாவட்டம். இந்த பகுதியை கடைசியாக வர்மா வம்சத்தினர் ஆண்டனர். ஸ்வாதி திரு நாள் மிகவும் புகழ்பெற்றது. மன்னர் ராஜா ரவிவர்மா கடைசி மன்னர். பத்ம நாபசுவாமி கோவில் மிகவும் புகழ் பெற்றது. சுற்றுலா தலம். விண்வெளி ஆராய்ச்சியின் சில முக்கிய அலுவலகங்கள் இங்கு இயங்குகின்றன. பல உயர்கல்வி மையங்களும் உள்ளன.
13. திருச்சூர் : அரபிக்கடல், மலப்புரம், பாலக்காடு, இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்கள் இதன் எல்லை. கலாச்சார தலை நகரம் என அழைக்கப்படுகிறது. குருவாயூர் கிருஷ்ணன் கோவில் மற்றும் பூரம் திருவிழாவும் மிகவும் புகழ் பெற்றது. விவசாயம் முக்கியத் தொழில்.
14. வய நாடு : கர் நாடகம் மற்றும் தமிழ் நாடு மாநிலம், கன்னூர், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்கள் இதன் எல்லை. மலைப்பிரதேசம். வாசனை திரவிய விளைச்சல் அதிகமுள்ள மாவட்டம்.
Q8. கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகை எது?
ஓணம் மற்றும் விஷூ, பூரம், மகர ஜோதி.
Q9. கேரள மாநிலத்தின் பிரபலமான நடனம் எது?
கதக்களி. இதைத் தவிர்த்து மோகினி ஆட்டம், பரத நாட்டியம் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை.
Q10. கேரள மாநிலத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீக தலம் எது?
சபரி மலை அய்யப்பன் கோவில்.
Q11. கேரள மாநிலத்தின் முக்கிய தொழில்கள் யாவை?
கயிறு, ரப்பர், மரம், மீன்பிடித்தல், வாசனை திரவிய பயிர், தேயிலை, கடல்சார் பொருட்கள்.
Q12. கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற தற்காப்புக்கலை என்ன?
களறி பயட்டு.
Q13. கேரளாவின் புகழ்பெற்ற மருத்துவ முறை என்ன?
ஆயுர் வேதம்.
Q14. ஆலப்புழையில் நடத்தப்படும் படகுப்போட்டியில் பயன்படுத்தப்படும் படகுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சுண்டன்.
Q15. கேரளாவின் இசை மற்றும் நடன கலைகள் சிலவற்றைக் கூறுக.
யக் ஷ கானம், சொப்ன சங்கீதம், தாயம்பகா, பஞ்ச வாத்யம்.
Q16. கேரளாவின் உப்பங்கழிகளில் பயன்படும் படகு வீடுகளுக்கு என்ன பெயர்?
கெட்டு வள்ளோம்.
Q17. "குடை தலை நகரம்" (Umbrella Capital) என அழைக்கப்படும் கேரள நகரம்....
ஆலப்புழை.
Q18. கேரளாவின் அடைப்பெயர் என்ன?
கடவுளின் சொந்த நாடு - God's Own Country.
Q19. கேரள மாநிலத்தின் பிரபலங்கள் யாவர்?
1. ஆதி சங்கரர்: காலடி என்ற ஊரில் பிறந்தவர்.
2. அம்ருதானந்தமாயி : ஆன்மீக ஆர்வலர் மர்றும் பொதுத்தொண்டு.
3. ஸ்வாமி சின்மயானந்தா : சின்மயானந்தா அறக்கட்டளை நிறுவனர்.
4. அருந்ததி ராய் : எழுத்தாளர்.
5. செம்பை வைத்தியநாத பாகவதர், ஜேசுதாஸ், சித்ரா, ஸ்ரீகுமார், உன்னி மேன்ன், உன்னி கிருஷ்ணன், பாலக்காடு மணி ஐயர், ஸ்வாதி திருநாள் ராஜா - புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள்.
6. M.T. வாசுதேவன் நாயர், செங்கம்புழா கிருஷ்ண பிள்ளை, செருஸ்ஸேரி நம்பூதிரி, குமரன் ஆசான், K.K. நம்பியார், M. முகுந்தன், T.R. எழுத்தாச்சான், கமலா தாஸ் - பிரபல எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள்.
7. கே. எம். பணிக்கர் : சீனாவின் முதல் இந்திய தூதர்.
8. K.N. ராஜ் : டெல்லி பொருளாதார பள்ளி நிறுவனர்.
9. K.R. நாராயணன் : முன்னாள் குடியரசு தலைவர்.
10. லக்ஷ்மி மேனன் : முதல் இந்திய பெண் வெளியுறவுத் துறை அமைச்சர்.
11. மன்னாத்து பத்ம நாபன் : நாயர் சேவை சங்க நிறுவனர்.
12. M.G.K. மேனன், G. மாதவன் நாயர், ராதாகிருஷ்ணன் - விண்வெளி விஞ்ஞானிகள்.
13. M.G. ராமச்சந்திரன் - தமிழ் சினிமா கலைஞர்.
14. ராஜா ரவிவர்மா : கேரள மன்னர், உலகப்புகழ் பெற்ற ஓவியர்.
15. ராஜ ராஜ வர்மா : இலக்கண நிபுணர்.
16. டாக்டர் லக்ஷ்மி சேகல் : சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய படையின் பெண்கள் பகுதி தலைவர்.
17. ஸ்ரீ நாராயண குரு : சமூக சீர்திருத்த ஆர்வலர்.
18. சஷி தரூர் : எழுத்தாளர், ஐ.நா. சபை உதவி செயலர், மத்திய அமைச்சர்.
19. தகழி சிவசங்கரன் பிள்ளை : எழுத்தாளர் - ""செம்மீன்"" புகழ்பெற்ற நாவல்.
20. வர்கீஸ் குரியன் : இந்திய ""வெள்ளைப் புரட்சி""க்கு (பால்வளம்) காரணமானவர். ""அமுல்"" வகை பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனர்.
21. V.K. கிருஷ்ண மேனன் : மத்திய பாதுகாப்பு அமைச்சர் - ஐ. நா சபையில் காஷ்மீர் பற்றிய இவருடைய 8 மணி நேர பேச்சு, இன்றும் ஒரு சாதனை.
22. தேவன் நாயர் : சிங்கப்பூர் அதிபர்.
23. டாக்டர் P.C. அலெக்ஸாண்டர் : I A S அதிகாரி, ஆளுனர், தூதர்.
24. டாக்டர் ஜான் மத்தாய் : இந்தியாவின் முதல் மந்திரி சபையில் இடம் பெற்றவர். இரு முறை நிதி அமைச்சராக பணியாற்றியவர்.
25. டாக்டர் தாமஸ் : இந்தியாவின் முதல் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்.
26. E. ஸ்ரீதரன் : தொழிற்கலை வல்லுனர் - கொங்கன் ரயில்வே, டெல்லி மெட்ரோ ரெயில்கள் இயங்கக் காரணமானவர்.
27. ஜெனரல் S. பத்மநாபன் : ராணுவ தளபதி.
28. V.R. கிருஷ்ண ஐயர் : உச்ச நீதிமன்ற நீதிபதி.
29. T.N. சேஷன் : I.A.S. அதிகாரி, தேர்தல் ஆணையர்.
30. சங்கர் : புகழ்பெற்ற கேலி சித்திர ஓவியர்.
31. அமுர் கோபால கிருஷ்ணன் : புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர்.
32. ஜான் ஆபிரஹாம் : விளம்பரம் மற்றும் இந்தி திரைப்பட நடிகர்.
33. P.T. உஷா, ஷைனி வில்சன், அஞ்சு பாபி ஜார்ஜ், வில்சன் செரியன் - இந்திய தடகள வீர ர்கள்.
34. I.M. விஜயன் : இந்திய கால்பந்து வீரர்.
35. ஜிம்மி ஜார்ஜ் : இந்திய கைப்பந்து (வாலிபால்) வீரர்.
36. G. அரவிந்தன் : திரைப்பட இயக்குனர்.
37. ரசூல் குட்டி : ஆஸ்கார் விருது பெற்ற புகைப்படக் கலைஞர்.
38. M. நைட் ஷ்யாமளன் : புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்.
39. மம்மூட்டி, மோகன்லால், ப்ரேம் நசீர் - திரைப்பட நடிகர்கள்.
40. எம்.டி. வலசம்மா, ஷைனி வில்சன் - இந்திய விளையாட்டு வீராங்கனைகள்.
41. ஸ்ரீசாந்த் : இந்திய கிரிக்கெட் வீரர்."
Q20. கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் மற்றும் பஞ்சாயத்தின் நிர்வாக சாதனை என்ன?
1. மலப்புரம் பஞ்சாயத்து இந்தியாவிலேயே முதல் ISO சான்றிதழ் பெற்றது.
2. மலப்புரம் மாவட்டத்தில் WIFI தொடர்வசதி இலவசமாக அளிக்கப்படுகிறது.
Q21. எந்த கேரள மாவட்டம் இந்தியாவிலேயே முதலில் 100 சதவீத எழுத்தறிவு பெற்றது?
எர்ணாகுளம்.