Khub.info Learn TNPSC exam and online pratice

மத்திய பிரதேசம்

Q1. மத்திய பிரதேசம்:
தொடக்கம் : 15.08.1947/01.11.1956.
தலை நகர் : போபால்.
பரப்பளவு : 3,08,252 ச.கி.மீ. (2 வது நிலை)
ஜனத்தொகை : 7,25,97,565 (5 வது)
மொழி : இந்தி, ஆங்கிலம்.
கல்வியறிவு : 70.60%
மாவட்டங்கள் : 51
முக்கிய நகரங்கள் : போபால், இந்தூர், குவாலியர், திவாஸ், உஜ்ஜைன், நீமக், ஜபல்பூர்.
மாநில எல்லைகள் : மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உ.பி. சத்தீஸ்கர்.
மக்களவை தொகுதிகள் : 29
மாநிலங்களவை தொகுதிகள் : 11
சட்டமன்ற தொகுதிகள் : 230
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : நர்மதா, சோன், பேட்வா, ஷிப்ரா, மகா நதி, தப்தி.
மாநில மலர் : பலாஷ் (காட்டுத்தீ)
மாநில மரம் : ஆலமரம்.
மாநில பறவை தூத்ராஜ்
மாநில மிருகம் : பராசிங்கா - மான்வகை.
மாநில ஆளுநர் : ஆனந்தி பெஹன்.
மாநில முதன் மந்திரி : ஷிவ்ராஜ் சிங் சௌஹான்.


 

Q2. வரலாற்று சுருக்கம் :
இந்தப் பகுதி சிந்தியா, ஹோல்கர், நவாப் மற்றும் பேகம் மன்னர்களால் ஆளப்பட்டு வந்து, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சுதந்திர மன்னராட்சி பகுதிகளாகவும், மத்திய மாகாணம் என்ற பெயரில் இயங்கியது. சுதந்திரத்திற்கு பிறகு 1.11.1956 முதல் மத்திய பிரதேசமாகவும் இயங்கி வந்தது. நவம்பர் 2000ல் இதன் ஒரு பகுதி சத்தீஸ்கர் மாகாணமாக பிரிக்கப்பட்டது.
Q3. மத்திய பிரதேசத்தின் முக்கிய நகரங்கள் யாவை?
போப்பால், திவாஸ், குணா,குவாலியர், ஹோஷங்காபாத், இந்தூர், நீமக், உஜ்ஜைன், ஜபல்பூர்.
Q4. மத்திய பிரதேசத்தின் முக்கிய ஆறுகள் யாவை?
நர்மதா, சோன், பேட்வா, மகா நதி, ஷிப்ரா, தப்தி.
Q5. மத்திய பிரதேசத்தின் முக்கிய விளை பயிர் எது?
சோயாபீன்.
Q6. மத்திய பிரதேசத்தின் 29 மக்களவை தொகுதிகள் யாவை?
1. மொரேனா, 2. பீந்த் (SC) 3. குவாலியர், 4. குணா, 5. சாகர், 6. திகம்கர் (SC), 7. தாமோ, 8. கஜூரா ஹோ, 9. சத்னா, 10. ரேவா, 11. சிதி, 12. ஷாடோல் (ST) 13. ஜபல்பூர், 14. மண்ட்லா, 15. பாலாகாட், 16. சிந்த்வாரா, 17. ஹோஷங்காபாத், 18. விதிஷா, 19. போபால், 20. ராஜ்கர், 21. திவாஸ் (SC), 22. உஜ்ஜைன் (SC), 23. மண்ட்சார், 24. ரத்லாம் (ST), 25. தார் (ST), 26. இந்தூர், 27. கார்கோன் (ST), 28. காண்ட்வா, 29. பேதூல் (ST).
Q7. மத்திய பிரதேச மா நிலத்தின் மா நகராட்சிகள் யாவை?
1. இந்தூர், 2. போப்பால், 3. ஜபல்பூர், 4. குவாலியர், 5.உஜ்ஜைன், 6. சாகர், 7. திவாஸ், 8. சத்னா, 9. ரத்லாம், 10. பர்ஹான்பூர், 11. முர்வாரா (கட்னி), 12. ரேவா, 13. காண்ட்வா, 14. சிங்ரௌலி, 15. சிந்த்வாரா, 16. மொரேனா.
Q8. மத்திய பிரதேசத்தின் முதல் முதலமைச்சர் யார்?
ரவி சங்கர் சுக்லா - 1947 - 1956.
Q9. மத்திய பிரதேசத்தின் மாவட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும் யாவை?

1. போப்பால் : செஹோர், ராஜ்கர், விதிஷா, ரெய்சன், குணா மாவட்டங்கள் இதன் எல்லை. மத்திய பிரதேசத்தின் தலை நகர் மாவட்டம். போப்பால் நகரம் ""ஏரிகளின் நகரம்"" எனப்படுகிறது. தலைசிறந்த கல்வி நிலையங்கள், மத்திய அரசு நிறுவன்ங்கள், பொதுத்துறை நிறுவனம் - BHEL போன்றவை, அமைந்துள்ள நகரம். 1984ல் விஷவாயு (மெதில் ஐசோசயனைட்) கசிவால் ஆயிரக்கணக்கான மக்களின் இறப்பும், உடற்பாதிப்பும் ஏற்பட்ட நகரம். போப்பால் நகரில், பிம் பேட்கா குகை சிற்பங்கள், தாஜ் உல் மசூதி, பிர்லோ கோவில், சாஞ்சி அசோகர் தூண் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. விவசாயமும் தொழிற்தலங்களும் இணைந்து பொருளாதார ஆதாரமாக செயல்படுகிறது.
2. ரெய்சன் : செஹோர், போப்பால், விதிஷா, சாகர், நரசிம்மாபூர், ஹோஷங்காபாத் மாவட்டங்கள் இதன் எல்லை. சாஞ்சி தூண், பிம்பேத்கா குகை சிற்பங்கள் அமைந்துள்ள மாவட்டம். போஜ்பூரில் இந்தியாவின் மிக உயர்ந்த - 18 அடி - சிவலிங்கம் அமைந்துள்ள கோவில் உள்ளது.
3. ராஜ்கர் : ராஜஸ்தான் மாநிலம், அகர் மால்வா, ஷாஜாபூர், போப்பால், குணா மாவட்டங்கள் இதன் எல்லை.
4. செஹோர் : போப்பால், ரெய்சன், ஹோஷங்காபாத், ஹர்தா தேவாஸ், ஷாஜாப்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
5. விதிஷா : ரெய்சென், போப்பால், குணா, அசோக் நகர், சாகர் மாவட்டங்கள் இதன் எல்லை.
6. மொரேனா : ராஜஸ்தான் மாநிலம், உத்திர பிரதேசம், பிந்த், குவாலியர், ஷேவ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டம்.
7. ஷேவ்பூர் : ராஜஸ்தான் மாநிலம், ஷிவ்புரி, மொரேனா மாவட்டங்கள் இதன் எல்லை.
8. பிந்த் : தத்தியா, குவாலியர், மொரேனா மாவட்டங்களும், உத்திர பிரதேசமும் இதன் எல்லை. சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டம்.
9. அசோக் நகர் : உத்திர பிரதேசம், சாகர், விதிஷா, குணா, ஷிவ்புரி மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலம். விவசாயம்.
10. ஷிவ்புரி : ராஜஸ்தான், ஷேவ்பூர், குவாலியர், தத்தியா, அசோக் நகர், குணா மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலம்.
11. தத்தியா : உத்திர பிரதேசம், ஷிவ்புரி, குவாலியர், பிந்த் மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலம்.
12. குணா : ராஜஸ்தான், ஷிவ்புரி, அசோக் நகர், விதிஷா, ராஜ்கர் மாவட்டங்கள் இதன் எல்லை.
13. குவாலியர் : தத்தியா, ஷிவ்புரி, ஷேவ்பூர், மொரேனா, பிந்த் மாவட்டங்கள் இதன் எல்லை. சிந்தியா அரசு வம்ச ஆட்சிப்பகுதி. குவாலியர் நகரில் உள்ல கோட்டை மற்றும் சில சுற்றுலா தலங்களும், உயர்கல்வி நிலையங்களும் உள்ளன.
14. அலிராஜ்பூர் : குஜராத் மாநிலம், பர்வானி, தார், ஜபுவா மாவட்டங்கள் இதன் எல்லை.
15. பர்வானி :மகாராஷ்டிரா, குஜராத், தார், கார்கோன் மாவட்டங்கள் இதன் எல்லை.
16. பர்கான்பூர் : மகாராஷ்டிரியா, கார்கோன், காண்ட்வா மாவட்டங்கள் இதன் எல்லை.
17. தார் : அலிராஜ்பூர், ஜபுவா, ரத்லாம், உஜ்ஜைன், இந்தூர், கார்கோன், பர்வானி மாவட்டங்கள் இதன் எல்லை.
18. இந்தூர் : தார், உஜ்ஜைன், திவாஸ், கார்கோன் மாவட்டங்கள் இதன் எல்லை.
19. ஜபுவா : குஜராத், ரத்லாம், தார், அலிராஜ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
20. காண்ட்வா : மகாராஷ்டிரா, பர்கன்பூர், கார்கோன், திவாஸ், ஹர்தா, பேதுல் மாவட்டங்கள் இதன் எல்லை.
21. கார்கோன் : மகாராஷ்டிரா, பர்வானி, தார், இந்தூர், திவாஸ், காண்ட்வா, பர்கான்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
22. பாலகாட் : மகாராஷ்டிரா சத்தீஸ்கர் மாநிலங்கள், சேவ்னி, மாண்ட்லா மாவட்டங்கள் இதன் எல்லை. 80% மங்கனீசு இந்த மாவட்டத்தில் கிடைக்கிறது. மற்றும் சில கனிமங்களும் கிடைக்கிறது.
23. சிந்த் வாரா : மகாராஷ்டிரா மாநிலம், பேதூல், ஹோஷங்காபாத், நரசிம்மாபூர், சேவ்னி ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. தொழில் வளர்ச்சியும் சுற்றுலா தலங்களும் அமைந்துள்ள மாவட்டம்.
24. ஜபல்பூர் : கத்னி, உமாரியா, திண்டோரி, மாண்ட்லா, சேவ்னி, நரசிம்மபூர், தாமோ ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை.
25. கத்னி : உமாரியா, ஜபல்பூர், தாமோ, பன்னா, சத்னா மாவட்டங்கள் இதன் எல்லை.
26. மாண்ட்லா : சத்தீஸ்கர் மாநிலம், பாலகாட், சேவ்னி, ஜபல்பூர், திண்டோரி மாவட்டங்கள் இதன் எல்லை. 27. திண்டோரி : சத்தீஸ்கர் மாநிலம், மாண்ட்லா, ஜபல்பூர், உமாரியா, அனுப்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
28. நரசிங்பூர் : சேவ்னி, சிந்த்வாரா, ஹோஷங்காபாத், ரெய்சன், சாகர், தாமோ, ஜபல்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
29. சேவ்னி : மகாராஷ்டிரா மாநிலம், சிந்த்வாரா, நரசிங்பூர், ஜபல்பூர், மாண்ட்லா, பாலகாட் மாவட்டங்கள் இதன் எல்லை.
30. பேதூல் : மகாராஷ்டிரா மாநிலம், காண்ட்வா, ஹர்தா, ஹோஷங்காபாத், சிந்த்வாரா மாவட்டங்கள் இதன் எல்லை.
31. ஹர்தா : பேதூல், காண்ட்வா, திவாஸ், செஹார், ஹோஷங்காபாத் மாவட்டங்கள் இதன் எல்லை.
32. ஹோஷங்காபாத் : பேதூல், ஹர்தா, செஹோர், ரெய்சன், நரசிம்மாபூர், சிந்த்வாரா மாவட்டங்கள் இதன் எல்லை.
33. ரேவா : உத்திரபிரதேச மாநிலம், சத்னா, சிதி, மாவட்டங்கள் இதன் எல்லை. நீர்வீழ்ச்சிகள் நிறைந்த மாவட்டம், சுற்றுலா தலம்.
34. சத்னா : உத்திரபிரதேச மாநிலம், பன்னா, கத்னி, உமாரியா, ஷாதோல், சிதி, ரேவா மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலம்.
35. சிதி : சிங்ரவ்லி, ரேவா, சத்னா, ஷாதோல் மாவட்டங்களும், சத்தீஸ்கர் மாநிலமும் இதன் எல்லை.
36. சத்தர்பூர் : உத்திரபிரதேச மாநிலம், பன்னா, தாமோ, சாகர், திகம்கர் மாவட்டங்கள் இதன் எல்லை. கஜூராஹோ கோவில் மற்றும் சில சுற்றுலா தலங்களும் உள்ளன.
37. சிங்ரௌலி : உத்திரபிரதேச மாநிலம், சத்தீஸ்கர் மாநிலம், சிதி மாவட்டமும் இதன் எல்லை. நிலக்கரி சுரங்கம் மற்றும் இதர தொழிற்சாலைகளும் உள்ளன. மின்சாரம் தயாரிப்பு.
38. தாமோ : சாகர், சத்தார்பூர், பன்னா, கத்னி, ஜபல்பூர், நரசிங்கபூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
39. பன்னா : உத்திரபிரதேச மாநிலம், சத்னா, கத்னி, தாமோ, சத்தார்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. வைரச்சுரங்கம் இங்குள்ளது.
40. சாகர் : உத்திர பிரதேச மாநிலம், நரசிம்மாபூர், ரெய்சென், விதிஷா, அசோக் நகர், சத்ராபூர், தாமோ மாவட்டங்கள் இதன் எல்லை.
41. திகம்கர் : உத்திரபிரதேச மாநிலம், சத்தார்பூர் மாவட்டம் இதன் எல்லை. சுற்றுலா தலம்.
42. அனுப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம். திண்டோரி, உமாரியா, ஷாதோல் மாவட்டங்கள் இதன் எல்லை.
43. ஷாதோல் : அனுப்பூர், உமாரியா, சத்னா, சித்தி மாவட்டங்களும் சத்தீஸ்கர் மாநிலமும் இதன் எல்லை.
44. உமாரியா : அனுப்பூர், திண்டோரி, கத்னி, சத்னா, ஷாதோல் மாவட்டங்கள் இதன் எல்லை.
45. அகர் மால்வா : ராஜஸ்தான் மாநிலம் ரத்லாம், உஜ்ஜைன், ஷாஜாபூர், ராஜ்கர் மாவட்டங்கள் இதன் எல்லை.
46. திவாஸ் : ஹர்தா, காண்ட்வா, கார்கோன், இந்தூர், உஜ்ஜைன், ஷாஜாபூர், செஹோர் மாவட்டங்கள் இதன் எல்லை.
47. மண்ட்சார் : ராஜஸ்தான் மாநிலம் நீமக் மற்றும் ரத்லம் மாவட்டங்கள் இதன் எல்லை.
48. நீமக் : ராஜஸ்தான் மாநிலம், மண்ட்சார் மாவட்டம் இதன் எல்லை. ஓபியம் தயாரிப்பில் முதன்மை மாவட்டம்.
49. ரத்லம் : ராஜஸ்தான் மாநிலம், ஜபுவா, தார், உஜ்ஜைன், மண்ட்சார் மாவட்டங்கள் இதன் எல்லை.
50. ஷாஜாபூர் : செஹோர், திவாஸ், உஜ்ஜைன், அக்ர மஸ்வா, ராஜ்கர் மாவட்டங்கள் இதன் எல்லை.
51. உஜ்ஜைன் : திவாஸ், இந்தூர், தார், ரத்லாம், அக்ர மால்வா, ஷாஜாபூர் மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலம்.
Q10. மத்திய பிரதேசத்தின் முக்கியமான சுற்றுலா மையங்கள் யாவை?
"போப்பால் : நவாப் மன்னர்களால் ஆளப்பட்ட பகுதி கோட்டைகள், மசூதிகள், பூங்காக்கள், பிம்பேட்கா உலக புராதன சின்னம் மையம், பிர்லா லக்ஷ்மி நாராயண் கோவில் போன்ற மையங்கள் உள்ளன. தலை நகர். பசுமை நிறைந்த நகர்.
குவாலியர் : சிந்தியா மன்னர்களின் தலைமையிடம். கோட்டைகள், மாளிகைகள் மற்றும் இதர சுற்றுலா மையங்கள் உள்ளன. உயர்கல்வி நிலையங்கள், மத்திய அரசாங்கத்தின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன. இந்தூர் : ஹோல்கர் மன்னர்களின் தலைமையிடம் உலகிலேயே மிக உயரமான - 40 அடி - விநாயகர் சிலை (Bada Ganapathi), பங்கிங்ஹாம் அரண்மனையைப் போன்ற ""லால் பாக் பேலஸ்"" - மற்றும் சில சுற்றுலா மையங்களும் உள்ளன.
பச் மார்ஹி : ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள கோடை வாசஸ்தலம்.
கஜுராஹோ : சத்தார்பூர் மாவட்ட த்தில் அமைந்திருக்கும் இந்து மற்றும் ஜைன மதக் கோவில்கள்."
Q11. மத்திய பிரதேசத்தின் சில முக்கிய பிரபலங்கள் யார்?
1. அர்ஜுன் சிங், ஜோதிர் ஆதித்யா சிந்தியா (அவரது தந்தை மாதவ்ராவ் சிந்தியா), உமா பாரதி - அரசியல்வாதிகள்.
2. ரஜ்னீஷ் - இந்த மாநிலத்தில் பிறந்தவர்.
3. மகரிஷி மகேஷ் யோகி.
4. ஜெயா பச்சன் - நடிகை, MP
5. Dr. S.D. ஷர்மா - மறைந்த குடியரசுத் தலைவர்.
6. ஜாவேத் அக்தர் - இந்தி திரைப்பட எழுத்தாளர்."