Khub.info Learn TNPSC exam and online pratice

மகாராஷ்டிரா

Q1. மகாராஷ்டிரா:
தொடக்கம் : 1.5.1960.
தலை நகர் : மும்பை.
பரப்பளவு : 3,07,713 ச.கி.மீ. (3 வது நிலை)
ஜனத்தொகை : 1,23,72,972 (2 வது)
மொழி : மராத்தி, இந்தி, ஆங்கிலம்.
கல்வியறிவு : 82.9%
மாவட்டங்கள் : 36.
முக்கிய நகரங்கள் : மும்பை, பூனே, அவுரங்காபாத், நாசிக், நாக்பூர், சோலாப்பூர், கோலாப்பூர், புசாவல்.
மாநில எல்லைகள் : அரபிக்கடல், தாத்ரா நகர் ஹவேலி, மத்திய பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, சத்தீஸ்கர், குஜராத்.
மக்களவை தொகுதிகள் : 48
மாநிலங்களவை தொகுதிகள் : 19
சட்டமன்ற தொகுதிகள் : 288 + 78
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : கிருஷ்ணா, பீமா, கோதாவரி.
மாநில மலர் : Lagerstroemia Speciosa.
மாநில மரம் : மா
மாநில பறவை : மஞ்சள் கால் பச்சை புறா.
மாநில மிருகம் : இந்திய பெரிய அணில்.
மாநில ஆளுநர் : வித்யா சாகர் ராவ்.
மாநில முதன் மந்திரி : தேவேந்திர ஃபட்னாவிஸ்.


Q2. வரலாற்று சுருக்கம் :
இந்தப் பகுதி மராத்திய மன்னர்களான சிவாஜி மற்றும் பேஷ்வாக்களால் ஆளப்பட்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் பாம்பே மாகாணம் (குஜராத் மற்றும் மகாராஷ்டிர பகுதியை சேர்த்து) என இயங்கியது. சுதந்திரத்திற்கு பிறகு அதே நிலையில் பாம்பே மாநிலமாக இயங்கி, 1.5.1960 முதல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களாக தனியே இயங்கத்தொடங்கின.
Q3. மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்கள் யாவை?
மும்பை, பூனே, அவுரங்காபாத், நாசிக், நாக்பூர், சோலாப்பூர், கோலாப்பூர், புசாவல்.
Q4. மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய ஆறுகள் யாவை?
கிருஷ்ணா, கோதாவரி, பீமா.
Q5. மகாராஷ்டிரா மாநிலத்தின் மக்களவை தொகுதிகள் யாவை?
1. நந்தூர்பார் (ST), 2. தூல், 3. ஜல்காவ்ன், 4. ரவேர், 5. புல்தானா, 6. அகோலா, 7. அம்ராவதி, 8. வார்தா 9. ராம்டெக், 10. நாக்பூர், 11. பண்டாரா கோண்டியா, 12. காட்சிரோலி சிமூர், 13. சந்த்ராபூர், 14. யவத்மல் வாஷிம், 15. ஹிங்கோலி, 16. நான்தெட், 17. பர்பானி, 18. ஜல்னா, 19. அவுரங்காபாத், 20. திண்டோரி, 21. நாசிக், 22. பல்கார், 23. பிவான்தி, 24. கல்யாண், 25. தானே, 26. மும்பை வடமேற்கு, 27. மும்பை வடக்கு, 28. மும்பை வடகிழக்கு, 29. மும்பை மத்திய வடக்கு, 30. மும்பை தென் மத்திய, 31. மும்பை தெற்கு, 32. ராய்கட், 33. மாவல், 34. பூனே, 35. பராமதி, 36. ஷிரூர், 37. அஹமத் நகர், 38. ஷிர்டி, 39. பீட், 40. உஸ்மானாபாத், 41. லத்தூர், 42. சோலாப்பூர், 43. மதா, 44. சங்லி, 45. சத்தாரா, 46. ரத்னகிரி-சிந்து துர்க், 47. கோலாப்பூர், 48. ஹத்கனங்களே.
Q6. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள் யாவை?
1. மும்பை, 2. மீரா பயாந்தர், 3. தானே, 4. நவி மும்பை, 5. கல்யாண் டோம்பி வாலி, 6. உல்ஹாஸ் நகர், 7. பிவாண்டி-நிஸாம்பூர், 8. வஸாய்-விரார், 9. பூனே, 10. பிம்ப்ரி-சின்ஸ்வாட் 11. நாக்பூர், 12. அமராவதி, 13. சங்லி-மிராஜ் குப்வாட் 14. சோலாப்பூர், 15. அஹமத் நகர், 16. நாசிக், 17. மலேகாவ்ன், 18. ஜல்காவ்ன், 19. தூல், 20. அவுரங்காபாத், 21. நாந்தேட்-வாகேலா, 22. லத்தூர், 23. பர்பானி, 24. கோலாப்பூர், 25. அகோலா, 26. சந்த்ராபூர்.
Q7. மகாராஷ்டிரா மாநிலத்தின் மாவட்டங்கள் யாவை?

1. அகோலா : புல்தானா, அம்ராவதி, வாஷிம் மாவட்டங்கள் இதன் எல்லை. தானியங்கள் மற்றும் எண்ணெய் ஆலைகள்.
2. அம்ராவதி : மத்திய பிரதேச மாநிலம், புல்தான, அகோலா, வாஷிம், யவத்மல், வார்தா, நாக்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. தொழிற்சாலைகள், பருத்தி நெசவாலைகள் நிறைந்த மாவட்டம்.
3. புல்தானா : மத்திய பிரதேச மாநிலம், ஜல்காவ்ன், அவுரங்காபாத், ஜல்னா, வாஷிம், அகோலா மாவட்டங்கள் இதன் எல்லை. மிக சக்தி வாய்ந்த விண்கல் வீழ்ச்சியால் ஏற்பட்ட உலகின் மிகப்பெரிய பள்ளம் - KIBAR CRATER - உலகின் மிகப்பெரிய அனுமார் சிலை மற்றும் சில விலங்குகள் சரணாலயங்களும் உள்ளன.
4. யவத்மால் : தெலங்கானா மாநிலம், நாந்தேட், ஹிங்கோலி, வாஷிம், அமராவதி, வார்தா, சந்த்ராபூர் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில்.
5. வாஷிம் : யவத்மால், ஹிங்கோலி, புல்தானா, அகோலா, அம்ராவதி மாவட்டங்கள் இதன் எல்லை.
6. அவுரங்காபாத் : அஹமத் நகர், நாசிக், ஜல்காவ்ன், ஜல்னா மாவட்டங்கள் இதன் எல்லை. நெசவாலைகள் நிறைந்த மாவட்டம். அஜந்தா, எல்லோரா குகைக் கோயில் சிற்பங்கள், அவுரங்கசீப் மகன் ஆஸாம் ஷா கட்டிய ""பீபி கா மக்பாரா"" நினைவுச் சின்னம் ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன.
7. பீட் : லத்தூர், உஸ்மனாபாத், அஹமத் நகர், ஜல்னா, பர்பானி மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில்.
8. ஹிங்கோலி : நாந்தேட், பர்பானி, ஜல்னா, புல்தானா, வாஷிம், யவத்மல் மாவட்டங்கள் இதன் எல்லை. ""அவுந்த் ஜகன்னாத்"" - ஜோதிர்லிங்க சிவன் கோவில் இந்த மாவட்டத்தில் உள்ளது.
9. ஜல்னா :பர்பானி, பீட், அவுரங்காபாத், புல்தானா மவட்டங்கள் இதன் எல்லை. தொழில், வியாபாரம், கலாச்சாரம் ஆகியவைகளில் முக்கியமான மாவட்டம் ஆகும்.
10. லத்தூர் : கர்நாடக மாநிலம், உஸ்மானாபாத், பீட், பர்பானி, நாந்தேட் மாவட்டங்கள் இதன் எல்லை. பள்ளிக் கல்வியில் முதன்மையான மாவட்டம் 30.9.1993ல் மிக சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட மாவட்டம்.
11. நாந்தேட் : தெலங்கானா கர்நாடக மாநிலங்கள், லத்தூர், பர்பானி, ஹிங்கோலி, யவத்மால் மாவட்டங்கள் இதன் எல்லை. 10வது சீக்கிய குரு வாழ்ந்த இடம் (1708). இங்குள்ள சீக்கிய மக்களின் வழிபாடு கோவில் மிகவும் புகழ் பெற்றது.
12. உஸ்மானாபாத் : கர்நாடக மாநிலம், சோலாப்பூர், அஹமத் நகர், பீத், லத்தூர் மாவட்டங்கள் இதன் எல்லை. துல்ஜாபூரில் உள்ள பவானி கோவில் மிகவும் புகழ் பெற்றது.
13. பர்பானி : நாந்தேட், லத்தூர், பீட், ஜால்னா, ஹிங்கோலி மாவட்டங்கள் இதன் எல்லை.
14. மும்பை : அரபிக்கடல், தானே, பூனே, ராய்கர் மாவட்டங்கள் இதன் எல்லை. மகாராஷ்டிராவின் தலை நகர் மாவட்டம். மேலும் விவரங்கள் மும்பை பற்றிய தனிக் கேள்வியில் கொடுக்கப்பட்டுள்ளது.
15. மும்பை புற நகர் : மும்பை மெட்ரோ நகருக்குள் (மாபெரும் நகருக்குள்) அமைந்துள்ள மாவட்டம்.
16. தானே : பால்கர், மும்பை புற நகர், நாசிக், அஹமத் நகர், பூனே, ராய்கர் மாவட்டங்கள் இதன் எல்லை. ஏரிகள் நிறைந்த மாவட்டம்.
17. பால்கர் : அரபிக்கடல், குஜராத், நாசிக், தானே, மும்பை புற நகர் மாவட்டங்கள் இதன் எல்லை. சப்போட்டா பழ விளைச்சலுக்கு புகழ் பெற்ற மாவட்டம்.
18.ராய்கட் : ரத்னகிரி, சத்தாரா, பூனே, தானே, மும்பை மாவட்டங்கள் இதன் எல்லை. சிவாஜி மகாராஜாவின் தலை நகரமாக விளங்கியது. எலிஃபெண்டா தீவுகள், நேரால்-மாத்தேரான் மலை ரயில் இந்த மாவட்ட்த்தில் அமைந்துள்ளது.
19. ரத்தினகிரி : அரபிக்கடல், சிந்து துர்க், கோலாப்பூர், சங்லி, சத்தாரா, ராய்கர் மாவட்டங்கள் இதன் எல்லை. கொங்கன் என்றழைக்கப்படும் பகுதியின் தொடக்கம். மேற்கு தொடர்ச்சி மலைகளின் உயர் பகுதிகளின் தொடக்கம். சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டம். ""அல்ஃபோன்ஸோ"" - உலகப்புகழ் பெற்ற மாம்பழங்கள் விளையும் மாவட்டம்.
20. சிந்து துர்க் : அரபிக்கடல், கோவா மா நிலம், கோலாப்பூர், ரத்னகிரி மாவட்டங்கள் இதன் எல்லை. கடலுக்குள் ஒரு பெரிய பாறையின் மீது அமைந்துள்ள கோட்டையும், மற்றும் பல சுற்றுலா தலங்களும் அமைந்துள்ள மாவட்டம்.
21. பண்டாரா : மத்திய பிரதேச மாநிலம், நாக்பூர், சந்திராபூர், கோண்டியா மாவட்டங்கள் இதன் எல்லை. பித்தளைப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி மாவட்டம். சுற்றுலா மையங்களும் உண்டு.
22. சந்திராபூர் : தெலங்கானா மாநிலம், யவத்மால், வார்தா, நாக்பூர், பண்டாரா, கோண்டியா, காட்சிரோலி மாவட்டங்கள் இதன் எல்லை. சிமெண்ட் ஆலைகள், அனல் மின் நிலையம், ததோபா தேசிய பூங்கா ஆகியவை இந்த மாவட்டத்தில் உள்ளது.
23. காட்சிரோலி : சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்கள், சந்திராபூர், பண்டாரா, கோண்டியா மாவட்டங்கள் இதன் எல்லை. நக்சல் தீவிரவாதிகளின் நடவடிக்கை அதிகமுள்ள மாவட்டம்.
24. கோண்டியா : மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்கள், பண்டாரா, சந்திராபூர், காட்சிரோலி மாவட்டங்கள் இதன் எல்லை.
25. நாக்பூர் : மத்திய பிரதேச மாநிலம், அமராவதி, வார்தா, சந்திராபூர், பண்டாரா மாவட்டங்கள் இதன் எல்லை. தொழில், விவசாயம், கலச்சாரம் ஆகியவற்றில் முன்னேற்றமும் முக்கியத்துவமும் பெற்ற மாவட்டம். ரயில்வே மண்டலம், விவசாய ஆராய்ச்சி மையங்கள், மத்திய அரசு நிறுவனங்கள், ராணுவ அலுவலகங்கள் நிறைந்த மாவட்டம். டாக்டர் அம்பேத்கர் புத்த மத த்தை தழுவிய ""தீக் ஷ பூமி"" அமைந்துள்ள இடம். ஆரஞ்சு விளைச்சலுக்கும், ராம நவமி கொண்டாட்டங்களுக்கும் புகழ்பெற்ற மாவட்டம்.
26. வார்தா : நாக்பூர், சந்த்ராபூர், யவத்மல், அமராவதி மாவட்டங்கள் இதன் எல்லை. இந்திய சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்ற நகரம். காந்திஜியின் ஆஸ்ரமம், சுதந்திர போராட்ட தியாகிகள் அடைக்கப்பட்ட சிறைச்சாலையும் இங்குள்ளது.
27. அஹமத் நகர் : பூனே, தானே, நாசிக், அவுரங்காபாத், பீட், உஸ்மாணாபாத், சோலாப்பூர் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. நெசவாலைகள் அதிகம் நிறைந்த ஊர். தாமிரம் மற்றும் பித்தளை தொழில், மற்றும் சில சுற்றுலா தலங்களும் நிறைந்த ஊர்.
28. தூல் : நாசிக், நந்தூர்பார், ஜல்காவ்ன் மாவட்டங்களும் மத்திய பிரதேச மாநிலமும் இதன் எல்லை. பருத்தி விளைச்சல் மற்றும் நெசவாலைகள் உள்ள மாவட்டம்.
29. ஜல்காவ்ன் : மத்திய பிரதேச மாநிலம், புல்தானா, அவுரங்காபாத், நாசிக், தூல் மாவட்டங்கள் இதன் எல்லை. வாழை விளைச்சல் அதிகம். விவசாயத்துடன் சில தொழிற்சாலைகளும் உண்டு. சில சுற்றுலா தலங்களும் உள்ளது.
30. நந்தூர்பார் : குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களும், தூல் மாவட்டமும் இதன் எல்லை. நம் நாட்டின் ""ஆதார் அட்டை"" இந்த மாவட்டத்தின் தெம்பில் கிராமத்தின் ரஞ்சனா சோனாவானே என்ற பெண்ணுக்கு முதன் முறையாக வழங்கப்பட்டு (29.9.2012) துவங்கப்பட்டது.
31. நாசிக் : குஜராத் மாநிலமும், பால்கர், தானே, அஹமத் நகர், அவுரங்காபாத், ஜல்காவ்ன், தூல் மாவட்டங்கள் இதன் எல்லை. மிகவும் அழகான இயற்கை சூழல் அமைந்த மாவட்டம். கோதாவரி நதி இந்த மாவட்டத்தின் த்ரையம்பகேஷ்வர் என்ற மலைப்பகுதியிலிருந்து உருவாகிறது. த்ரையம்பகேஷ்வர் ஜோதிர்லிங்க சிவன் கோயில் புகழ்பெற்றது. விவசாயம் முக்கியமாக திராட்சை மற்றும் தொழிற்துறையிலும் வளர்ந்த மாவட்டம். ஆன்மீக சுற்றுலாவுக்கு சிறந்த மாவட்டம்.
32. கோலாப்பூர் : கர்நாடக மாநிலமும், சிந்துதுர்க், ரத்னகிரி, சங்லி மாவட்டங்கள் இதன் எல்லை. மஹாலஷ்மி கோவிலுக்கும், கோலாப்பூரி தோல் செருப்புகளுக்கும் புகழ் பெற்றது.
33. பூனே : சோலாப்பூர், சத்தாரா, ராய்கட், தானே, அஹமது நகர் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. பீமா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரம், தொழில், விவசாயம், வணிகம், கல்வி, பாதுகாப்பு, விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் மிகவும் முன்னேற்றம் கண்டுள்ள மாவட்டம். கோட்டைகளும் மற்றும் பல சுற்றுலா தலங்களும் நிறைந்துள்ள மாவட்டம்.
34. சங்லி : கர்நாடக மாநிலம், கோலாப்பூர், ரத்தினகிரி, சத்தாரா, சோலாப்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. இது ஒரு குறு நில மன்னர் பகுதி. விவசாயத்தில் முக்கியமான மாவட்டம். உலகின் மிகப்பெரிய மஞ்சள் கிழங்கு சந்தை இங்குள்ளது.
35. சத்தாரா : சங்லி, ரத்தினகிரி, ராய்கர், பூனே, சோலாப்பூர் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. மராத்திய மன்னர்களின் தலைமையகமாக விளங்கியது. மகாபலேஷ்வர் கோடை வாசஸ்தலம் மற்றும் சில சுற்றுலா தலங்களும் உள்ள மாவட்டம்.
36. சோலாப்பூர் : கர்நாடக மாநிலம், சங்லி, சத்தாரா, பூனே, அஹமது நகர், உஸ்மானா பாத் மாவட்டங்கள் இதன் எல்லை. நெசவாலைகள் நிறைந்த மாவட்டம். படுக்கை விரிப்புகள், போர்வைகள் போன்றவை தயாரிப்பில் முன்னணி மாவட்டம். பீடி சுற்றும் தொழிலும் அதிகம். பந்தார்பூர் விட்டலா கோவில், சித்தேஷ்வர் கோவில் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன."
Q8. தலை நகர் மும்பையைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் கூறுக.
1.   1995 வரை பாம்பே என அழைக்கப்பட்டது.
2.   அரபிக்கடற்கரையில் அமைந்துள்ள ஒரு இயற்கைத் துறைமுகம்.
3.   வரலாற்றின்படி, இந்த பகுதி மௌர்யர்களாலும், சில் ஹாரா, குஜராத்தி மன்னர்களாலும், போர்ச்சுகீசியர்களாலும் ஆளப்பட்ட பகுதி. 11.5.1661 அன்று இந்த பகுதியை , சார்லஸ் II மற்றும்      (போர்ச்சுகல் அரசர் ஜான் IV ன் மகள்) கேத்தரின் - ன் திருமணப்பரிசாக, போர்ச்சுகீசியர் ஆங்கிலேயர்களுக்கு  அளித்தனர்.
4.   பாம்பே பகுதி பல தீவுகளை உள்ளடக்கியதாக இருந்தாலும், கீழ்க்கண்ட ஏழு முக்கிய தீவுகளில் பரவியிருக்கிறது. 1. சஷ்டி 2. கொலாபா, 3. சிறிய கொலாபா, 4. மாஹிம், 5. மஸகாவ்ன், 6. பரேல், 7. ஓர்லி. இதற்கும் மேலாக, ட்ராம்பே மற்றும் சால்செட்டி தீவுகள் இணைக்கப்பட்டு, மும்பை பெரு நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.
5.  மும்பை நகரைச் சுற்றியுள்ள இதர தீவுகள் : 1. எலிஃபெண்டா, 2. புச்சர், 3. மிடில் க்ரௌண்ட் கோஸ்டல் பேட்டரி, 4. ஆயிஸ்டர் ராக், 5. ஈஸ்ட் க்ரௌண்ட்.
6.   நம் நாட்டின் வர்த்தக தலை நகரம் எனப்படுகிறது.
7.   பல முன்னணி நிறுவனங்களின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது.
8.   ரிசர்வ் வங்கி மற்றும் நிதி, பங்குச்சந்தை நிறுவனங்களின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது.
9.   இந்தி சினிமாவின் ""பாலிவுட்"" பல ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இங்கு அமைந்துள்ளது.
10. இந்தியாவின் நுழைவு வாயில் (Gate Way of India) எலிஃபெண்டா குகைகள், சித்தி வி நாயகர் கோவில், மகாலஷ்மி கோவில், ISKCON - கிருஷ்ணா கோவில் மற்றும் கடற்கரைகளும் சுற்றுலா தலங்கள் ஆகும்.
11. இந்திய கிரிக்கெட் வாரியம் இங்கு அமைந்துள்ளது.
12. பல பிரிவுகளில் உயர் கல்விக்கு தேவையான அனைத்து கல்வி நிறுவனங்களும் உள்ளன.
13. பாபா அணு ஆராய்ச்சி, தாராபூர் அணுசக்தி மின் நிலையங்கள் இங்கு அமைந்துள்ளன.
14. இந்தியாவின் ரயில் தொடர் பணி மும்பை-தானே-வுக்கு இடையில் 16.4.1853ல் துவங்கியது.
Q9. மகாராஷ்டிராவின் முதல் முதலமைச்சர் யார்?
பால் கங்காதர் திலக் - 1947 - 1952. குஜராத் பிரிவுக்குப் பின் யஷ்வந்த் ராவ் சவுகான் - 1960 - 1962.
Q10. பைத்தானி சில்க் புடவைகளுக்கு புகழ்பெற்ற மகாராஷ்டிர நகரம் எது?
அவுரங்காபாத்.
Q11. அஜந்தா எல்லோரா குகைக்கோவில்கள் எந்த மாவட்டத்தில் உள்ளது?
அவுரங்காபாத்.
Q12. தாமிரம் மற்றும் பித்தளை பாத்திரங்களுக்கு புகழ் பெற்ற மாவட்டம் எது?
அஹமத் நகர்.
Q13. தோல் செருப்பு தயாரிப்பில் புகழ்பெற்ற மாவட்டம் எது?
கோலாப்பூர் (கோலாப்பூரி செருப்புகள்).
Q14. 30.9.1993ல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டம் எது?
லத்தூர்.
Q15. மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தின் முக்கியத்துவம் என்ன?
1932-1837 களில் கட்டப்பட்ட புகழ்பெற்ற சீக்கிய மத ஆலயம்.
Q16. ஆரஞ்சு பழங்களுக்கும், அம்பேத்கரின் "தீக்ஷபூமி"க்கும் புகழ் பெற்ற நகரம் எது?
நாக்பூர்.
Q17. பாதுகாப்பு அச்சகம் (Security Press) மற்றும் திராட்சை வளர்ப்புக்கும் புகழ்பெற்ற ஊர்/மாவட்டம்…
நாசிக்.
Q18. மகாராஷ்டிர மாநிலத்தில்  கோதாவரி நதி எங்குஉருவாகிறது?
த்ரையம்பகேஷ்வர் மலைப்பகுதிகளில்.
Q19. தேசீய ராணுவப்பயிற்சி பள்ளி, DRDO, திரைப்பட பயிற்சி பள்ளி போன்ற பல முக்கிய நிர்வாகங்கள் அமைந்துள்ள மராத்திய நகரம் எது?
பூனே.
Q20. அல்ஃபோன்ஸோ மாம்பழத்திற்கு புகழ்பெற்ற மராத்திய மாவட்டம் எது?
ரத்தின கிரி.
Q21. மராத்திய மன்னர்களின் தலை நகரம், மகாபலேஷ்வர் கோடை வாசஸ்தலம், ராணுவப்பள்ளி - இவை எந்த மராத்திய மாவட்டத்துடன் சம்பந்தப்பட்டது?
சத்தாரா.
Q22. படுக்கை விரிப்பு, போர்வைகளுக்கு பெயர் போன மராத்திய மாவட்டம் எது?
சோலாப்பூர்.
Q23. "ஏரிகள் நகரம்" எனப்படும் மராத்திய நகரம்...
தானே.
Q24. ஆதார் அட்டை முதன் முதலில் வழங்கப்பட்ட கிராமம், மாவட்டம் எது?
தெம்பில் கிராமம், நந்தூர்பார் மாவட்டம் - பெற்றவர் ரஞ்சனா சோனாவானே - 29.09.2010.
Q25. சப்போட்டா விளைச்சலுக்கு புகழ்பெற்ற மராத்திய மாவட்டம் எது?
பால்கர்.
Q26. மராத்திய மாநிலத்தின் பிரபலங்கள் யாவர்?
"1. வால்சந்த் ஹீராசந்த் தோஷி : நவீன கப்பல் கட்டுமான தளம், கார், விமானம் தயாரிப்பு ஆகியவற்றிற்கு காரணமாயிருந்தவர். சோலாப்பூரில் பிறந்த இவர், ப்ரீமியர் ஆட்டோமொபைல்ஸ், விசாகப்பட்டினம் கப்பல் தளம் ஆகியவை உருவாக்கியவர்.
2. சேஷ்ராவ் வாங்கெடே : வழக்கறிஞர் - வாங்கெடே ஸ்டேடியம் உருவாக காரணமாயிருந்தவர்.
3. அபாசாகேப் கார்வாரே : கார்வாரே குழும நிறுவனர்.
4. ரதன் டாடா : டாடா குழும தலைவர்.
5. திருபாய், அனில், முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ் குழுமம்.
6. எஸ்.எல். கிர்லோஸ்கர் - கிர்லோஸ்கர் நிறுவன குழுமம்.
7. பால், ராஜ் தாக்கரே, மனோகர் ஜோஷி, சரத்பவார், சுரேஷ் கல்மாடி, சுஷில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஷ்முக், நாராயண் ரானே, தேவேந்திரஃபட்னாவிஸ், மேலும் பல அரசியல்வாதிகள்.
8. கபூர் குடும்பம், சுனில்தத் குடும்பம், பச்சன் குடும்பம், சாருக்கான், தர்மேந்திரா குடும்பம், ரித்திக் ரோஷன், ஜான் ஆபிரஹாம், மாதுரி தீக் ஷித், ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி, மங்கேஷ்கர் குடும்பம் என பல பல சினிமா துறை பிரபலங்கள்.
9. அஞ்சலி பகவத் - துப்பாக்கி சுடுதல் வீராங்கனை.
10. பாக்ய ஸ்ரீ திப்சே - சதுரங்க வீராங்கனை.
11. சச்சின் டெண்டுல்கர், அஜித் வடேகர், அஜித் அகர்கர், அன்ஷுமன் கேக்வாட், சந்திரகாந்த் பண்டிட், சந்து போர்டே, திலீப் வெங்க்சர்க்கார், கிரண் மோரே, ரவிசாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சந்தீப் பட்டீல், சஞ்சய் மஞ்ச்ரேகர், விஜய் ஹசாரே, வினோத் காம்ப்ளி, விஜய் மெர்ச்சண்ட் மற்றும் பல பல கிரிக்கெட் வீர ர்கள்."