மணிப்பூர்
Q1. மணிப்பூர்
தொடக்கம் : 21.01.1972.
தலை நகர் : இம்ஃபால்.
பரப்பளவு : 22,327 ச.கி.மீ. (23 வது நிலை)
ஜனத்தொகை : 25,70,390 (22 வது)
மொழி : மித்திலோன், மணிப்புரி, இந்தி, ஆங்கிலம்.
கல்வியறிவு : 79.21%
மாவட்டங்கள் : 9.
முக்கிய நகரங்கள் : இம்ஃபால்.
மாநில எல்லைகள் : நாகாலாந்து, மிசோரம், அஸ்ஸாம் மற்றும் மியான்மர்.
மக்களவை தொகுதிகள் : 2
மாநிலங்களவை தொகுதிகள் : 1
சட்டமன்ற தொகுதிகள் : 60
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : மலை ஆறுகள்.
மாநில மலர் : சிரோய் லில்லி.
மாநில மரம் : இந்தியன் மஹோகனி
மாநில பறவை :
மாநில மிருகம் : சங்கை (மான்).
மாநில ஆளுநர் : நஜ்மா ஹெப்துல்லா
மாநில முதன் மந்திரி : என்.பிரேன் சிங்
Q2. வரலாற்று சுருக்கம்
மிகப் பழமையான ராஜ வம்ச ஆட்சிப்பகுதி. ஆங்கிலேயர்களின் ஆதரவுடன் தனி ராஜ வம்ச ஆட்சியாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின்போது இந்த பகுதியில் ஆங்கிலேயர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் போர் அதிகமாக நடந்தது. ஜப்பானியர்கள் தோல்வி அடைந்தனர்.
இதை தொடர்ந்து நம் நாடு சுதந்திரத்தையும் பெற்றது. அப்போது மணிப்பூரில் மஹாராஜா புதாசந்திரா அரசரை தலைமையாகக் கொண்ட சுதந்திரமான தனி ஜன நாயக அரசு அமைக்கப்பட்டது. 1949ல் அரசவை கலைக்கப்பட்டு, மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, வட கிழக்கு எல்லைப்புற தனிப்பகுதியாக மத்திய
அரசாங்கத்தால் நிர்வாகம் செய்யப்பட்டு, 1956ல் யூனியன் பிரதேச அந்தஸ்து அளிக்கப்பட்டு, 21.1.1972ல் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.
Q3. மணிப்பூரின் முதல் முதலமைச்சர் யார்?
முகமது அலிமுதீன் - 23.3.1972 - 27.3.1973.
Q4. மணிப்பூர் தலை நகர் இம்ஃபால் பற்றிய சில தகவல்கள்...
1. அழகான மலைப் பிரதேசம், 2. சுற்றுலா தலம், 3. உலகின் ஒரே, பெண்களால் மட்டுமே நடத்தப்படும் சந்தை, 4. உயர்கல்வி நிலையங்கள்.
Q5. மணிப்பூர் மாநிலத்தின் மக்களவை தொகுதிகள் யாவை?
1. மணிப்பூர் உள் பகுதி,
2. மணிப்பூர் வெளிப்பகுதி.
Q6. மணிப்பூரின் ஒரே மாநகராட்சி எது?
இம்ஃபால்.
Q7. மணிப்பூர் மாநில மாவட்டங்கள் யாவை?
1. பிஷ்ணுபூர், 2. சூராசாந்த்பூர், 3. சாண்டேல், 4. இம்ஃபால் கிழக்கு, 5. சேனாதிபதி, 6. தாமெங்லாங், 7. தௌபால், 8. உக்ரூல், 9. இம்ஃபால் மேற்கு.
Q8. மணிப்பூரின் புகழ்பெற்ற பாரம்பரிய நடனம் எது?
மணிப்புரி.
Q9. மணிப்பூரின் கிராமிய நடன்ங்கள் யாவை?
ரஸ்லீலா, பங்சோலோம், லைஹாரவோபா.
Q10. மணிப்பூரின் தற்காப்புக் கலையின் பெயர் என்ன?
சரித் சரக், தங் தா.
Q11. மணிப்பூரால் உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு எது?
போலோ. இந்த விளையாட்டினை ஆங்கிலேயர்கள் அறிந்து, மேம்படுத்தி உலகத்துக்கு அறிமுகப்படுத்தினர். உலகின் மிக பழமையான போலோ விளையாட்டு மைதானம் இங்குள்ளது.
Q12. மணிப்பூரின் ரம்மியமான சூழ் நிலையை விவரித்த பிரபலங்கள் யார்?
"""இந்தியாவின் சுவிட்சர்லாந்து"" - இர்வின் பிரபு; ""இந்தியாவின் ஆபரணம்"" - ஜவஹர்லால் நேரு."
Q13. மணிப்பூரில் மட்டுமே கிடைக்கக்கூடிய லில்லி மலர் எது?
ஷிரோய் லில்லி - ஷிரோய் மலைப்பகுதியில் கிடைக்கும்.
Q14. மணிப்பூருக்குள் நுழைய எவ்விதமான தடை உள்ளது?
இந்த பகுதி ஒரு ""பாதுகாக்கப்பட்ட பகுதி""யாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளி நாட்டவர்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும்.
Q15. இம்ஃபாலில் நடைபெறும் பெண்கள் சந்தை பற்றி...
"இமா கெய்த்தெல் (IMA KEITHEL)" என்றழைக்கப்படும் இந்த கடைகள் இப்பகுதி பெண்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. கடைகளின் உரிமையாளர்களும் பெண்களே.
Q16. மணிப்பூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ரோஜாப்பூ எது?
"ரோசா மேக்ரோகார்பா" - சர் ஜார்ஜ் வாட் என்பவரால் 1888ல் கண்டுபிடிக்கப்பட்டது.
Q17. மணிப்பூர் மக்களின் புது வருடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
"செய்ரவோபா (CHEIRAOBA)" மார்ச் - ஏப்ரலுக்கிடையில்.