Khub.info Learn TNPSC exam and online pratice

மேகாலயா

Q1. மேகாலயா
தொடக்கம் : 21.01.1972.
தலை நகர் : ஷில்லாங்.
பரப்பளவு : 22,429 ச.கி.மீ. (22 வது நிலை)
ஜனத்தொகை : 29,64,007 (23 வது)
மொழி : காசி, காரோ, ஆங்கிலம்.
கல்வியறிவு : 75.84%
மாவட்டங்கள் : 11.
முக்கிய நகரங்கள் : ஷில்லாங்.
மாநில எல்லைகள் : அஸ்ஸாம், வங்காள தேசம்.
மக்களவை தொகுதிகள் : 2
மாநிலங்களவை தொகுதிகள் : 1
சட்டமன்ற தொகுதிகள் : 60
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : மலையாறுகள்
மாநில மலர் : லேடிஸ் ஸ்லிப்பர்.
மாநில மரம் : வெள்ளை தேக்கு.
மாநில பறவை : மலை மைனா.
மாநில மிருகம் : சிறுத்தை (Clouded Leopard).
மாநில ஆளுநர் : தத்கத்தா ராய் 
மாநில முதன் மந்திரி : கான்ராட் சங்மா


 

Q2. வரலாற்று சுருக்கம் :
ஆங்கிலேயர்கள் இந்த பகுதியை கைப்பற்றுவதற்கு முன் பல குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்த பகுதி. ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய உடன் கிழக்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் எனும் மாநில பகுதியாக ஆட்சி செய்யப்பட்டது. வங்காள பிரிவுக்கு பின் இந்த பகுதி அஸ்ஸாம் மாநிலத்தின் இரு மாவட்டமாக இருந்த்து. சுதந்திரத்திற்கு பின் அஸ்ஸாமுடன் இணைந்து இயங்கி வந்த இந்த பகுதி 21.1.1972 அன்று பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
Q3. மேகாலயா என்பதன் பொருள் என்ன?
மேகங்களின் வாழ்விடம்.
Q4. தலை நகர் ஷில்லாங்கை பற்றிய சில தகவல்கள் :

1. ஆங்கிலேயர்களின் கோடை வாசஸ்தலமாகவும், ஒருங்கிணைந்த அஸ்ஸாம் மா நில தலை நகராகவும் விளங்கியது.
2. கிழக்கு ஸ்காட்லாந்து என அழைக்கப்படுகிறது.
3. கிறித்துவ ஆலயங்கள் ஆங்கிலேயர்களின் தாக்கம் தெளிவாக அமைந்துள்ளது.
4. அழகான காட்சிகளுக்கிடையில் அதிகமான நீர்வீழ்ச்சிகள் கண்கவர் காட்சிகள்.
5. அதிகமான மழை பெய்யும் சிரபுஞ்சி இ ந் நகரின் அருகில் உள்ளது.
6. ஆசியாவின் பெரிய மற்றும் பழமையான கோல்ஃப் விளையாட்டு மைதானம் இங்குள்ளது.
7. கிழக்கு விமானப்படை தளம், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், மற்றும் சில ராணுவ அமைப்புகள், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.
8. புகழ்பெற்ற சுற்றுலா தலம்.
Q5. மேகாலயாவின் முதல் முதலமைச்சர் யார்?
வில்லியம்ஸன் ஏ. சங்மா - 1970 - 1978.
Q6. மேகாலயாவின் மக்களவை தொகுதிகள் யாவை?
ஷில்லாங், தூரா.
Q7. மேகாலயாவின் ஜனத்தொகை பற்றி...
85 சதவிகித மக்கள் மலை வாழ் மக்கள் (ST) மற்றும் கிறித்துவ மதம் சார்ந்தவர்கள். காசி, காரோ, ஜைந்தியா, திமாசா, குக்கி, லக்கார், மிகிர் ஆகிய மலை இன மக்கள் வாழ்கின்றனர்.
Q8. மேகாலயாவின் மாவட்டங்கள் யாவை?
1. கிழக்கு காரோ மலைப்பகுதி, 2. கிழக்கு காசி மலைப்பகுதி, 3. மேற்கு ஜைந்தியா மலைப்பகுதி, 4. ரிபோய், 5. தெற்கு காரோ மலைப்பகுதி, 6. மேற்கு காரோ மலைப்பகுதி, 7. மேற்கு காசி மலைப்பகுதி. 8. வடக்கு ஜைந்தியா 9. வடக்கு காரோ 10. தென்மேற்கு காரோ 11. தென்மேற்கு காசி.
Q9. மேகாலயாவின் வேளாண் விளைச்சலில் முக்கியமானது எது?
நெல்