Khub.info Learn TNPSC exam and online pratice

சூரிய குடும்பமும் கிரகங்களும் -- SOLAR SYSTEM,SUN AND PLANETS

Q1. சூரிய குடும்பம் என்பது என்ன?
சூரியன் மற்றும் அதைச் சுற்றிவரும் எட்டு கிரகங்கள் சேர்ந்து இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த சூரிய குடும்ப அமைப்பு சுமார் 4600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

Q2. சூரிய குடும்பத்தின் அமைப்பு என்ன?
"சூரியன், அதைச் சுற்றிவரும் எட்டு கிரகங்கள், எண்ணிக்கையில்லா குறுங்கோள்களிலிருந்து வெளி வந்து ஈர்ப்பு சக்தியால் வானில் நிலை கொண்டு மிதந்து கொண்டிருக்கும் பாறைகளும் உலோக் சிதறல்களும். "
Q3. "சூரியனை மையமாகக்கொண்டு ஒரு நீள்வட்ட நிலையில் சூரிய குடும்ப மாதிரி வடிவத்தை முன் வைத்த வானியல் நிபுணர் யார்? "
அரிஸ்டார்க்கஸ் -- கிரேக்கம்.
Q4. சூரிய குடும்பம் பரவியுள்ளதின் விட்டம் எவ்வளவு ?
சுமார் 1170 கோடி கி. மீட்டர்கள்.
Q5. சூரிய குடும்பம் பால்வெளியை எந்த வேகத்தில் சுற்றிவருகிறது.
ஒரு வினாடிக்கு 285 Kms ..
Q6. சூரிய குடும்பம் ஒரு சுழற்சிக்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் என்ன?
பத்து லட்சம் ஒளி ஆண்டின் 224 சதவிகித நேரம் எடுத்துக்கொள்கிறது.
Q7. பால் வெளி மையத்தை சுற்றி சூரிய குடும்ப சுழற்சி என்ன வடிவத்தில் இருக்கும்?
வட்டம்/நீள் வட்டம்.
Q8. ஆழ் விண்வெளி (ஈர்ப்பிலா) Deep Space -- என்பது என்ன?
சூரிய குடும்ப எல்லையைத் தாண்டிய வான் வெளி
Q9. மண்டல வருடம் -- Gallactic Year என்பது என்ன?
"பால் வெளி மண்டலத்தை சூரிய குடும்பம் ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரம். இது சுமார் 225-250 மில்லியன் பூமி ஆண்டுகள் என கருதப்படுகிறது. ( terrestrial (Earth)years ). "
Q10. பூமி ஆண்டு Earth Year என்பது என்ன?
பூமி சூரியனைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் -- 365.25 நாட்கள்
Q11. ஒளி வருடம் Light Year என்பது என்ன?
ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கக்கூடிய தூரம். ( வானியல் ரீதியாக இது "நேரம்" அல்ல)