Khub.info Learn TNPSC exam and online pratice

சூரியன் -- SUN

Q1. சூரியன் என்பது என்ன?
ஒரு நட்சத்திரம்.

Q2. சூரியனின் உள்ளடக்கம் என்ன?
71% ஹைட்ரஜன்Hydrogen; 26.5% ஹீலியம் Helium; மற்றும் 2.5% இதர வாயுக்கள்.
Q3. சூரியனின் வெளியில் உள்ள வெப்ப நிலை என்ன?
6000 டிகிரி செல்சியஸ் (சுமார் 5800 டிகிரி கெல்வின்)
Q4. சூரியனின் உள்ளே உள்ள வெப்ப நிலை என்ன?
சுமார் 1,50,00,000 டிகிரி செல்சியஸ்
Q5. பூமியிலிருந்து சூரியன் எவ்வளவு தூரத்தில் உள்ளது?
சராசரியாக சுமார் 14,95,98,600 கி.மீ
Q6. சூரியனின் தோராயமான வயது என்ன?
5 பில்லியன் வருடங்கள்
Q7. சூரியன் ஒரு சுழற்சிக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
25 நாட்கள் 9மணி 7 நிமிடங்கள்.
Q8. சூரியனின் கதிர் பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
49.9 வினாடிகள்
Q9. சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
8 நிமிடங்கள் மற்றும் 16.6 வினாடிகள்
Q10. சூரியனின் ஒளிரும், பிரகாசிக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒளி மண்டலம் -- Photosphere.
Q11. சூரியனின் ஒளி மண்டலத்தின் மேலே உள்ள சிகப்பு வண்ணப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிற மண்டலம், சூரிய வண்ணக்கோளம் -- Chromosphere.
Q12. சூரியனின் நிற மண்டலம் Chromosphere கண்களுக்கு எப்போது புலப்படும்?
முழு சூரிய கிரகணத்தின் போது.
Q13. ஒளி வட்டம் -- Corona - என்பது என்ன?
"சூரியனின் நிறமண்டலத்தை சுற்றியுள்ள ஒளி வட்டம். இது சூரியனின் முழு கிரகணத்தின் போது மட்டும் கண்ணுக்கு புலப்படும். "
Q14. சூரியனில் அதிகமாக உள்ளடங்கிய பொருள் என்ன?
ஹைட்ரஜன் -- Hydrogen 71%
Q15. சூரிய ஓளியின் அடக்க வண்ணம் என்ன?
வெள்ளை -- இது உள்ளடக்கிய ஏழு வண்ணங்களான VIBGYOR (Violet, Indigo, Blue, Green, Yellow, Orange and Red)
Q16. அண்ட ஆண்டு -- Cosmic Year என்பது என்ன?
"சூரியன், மண்டல மையத்தை, வினாடிக்கு 285 கி.மீ வேகத்தில், சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் சுமார் 224 மில்லியன் ஆண்டுகள். இதையே அண்ட ஆண்டு என்பர். "
Q17. சூரியனின் உள் மத்தியில் எவ்விதமான நடவடிக்கை ஏற்படுகிறது?
"சூரியனுக்குள் ஒரு பிரம்மாண்டமான உலை உள்ளது. இங்கு ஹைட்ரஜன், ஒரு விநாடிக்கு 600 மில்லியன் டன் ஹீலியமாக மாற்றப்படுகிறது. "
Q18. சூரியனின் கதிர்வீச்சு என்பது என்ன?
"சூரியனின் மையத்தில் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறுதல் படும்போது வெளியேறும் ஆற்றல் சக்தி கதிர்வீச்சு எனப்படுகிறது. இது வெளியேறும் போது எக்ஸ் கதிர்களாக வெளியேறி சுற்றியுள்ள இதர பொருள்களையும் வெப்பமடைய செய்கிறது. "
Q19. அண்ட கதிர்கள் -- Cosmic rays என்பது என்ன ?
"ஒளியின் வேகத்தில் பயணிக்கும் அணுக்கதிர் சிதறல்கள். இவை ஹைட்ரஜனின் கருக்கள் -- ப்ரோட்டான்கள் என அழைக்கப்படுகின்றன. "
Q20. முதன்மை அண்ட கதிர்கள் -- Primary Cosmic rays என்பது என்ன?
"வானின் வெளி மண்டலத்திலிருந்து நேரடியாக வெளிவரும் கதிர்கள். இவை வாழும் ஜீவராசிகளில் உள்ள உயிரணுக்களை--cells அழித்து/சிதைத்து விடும் சக்தியுடையவை. பூமியின் வளி மண்டலம் இந்த கதிர்கள் பூமியை அடையாதவாறு ஒரு தடுப்பாக செயல்படுகிறது. "
Q21. சூரியனில் காணப்படும் கரும் புள்ளிகள் “Sun Spots” என்பது என்ன?
"சுற்றியுள்ள வாயுக்களை விட குளிர்ந்த வாயு படலங்கள். இவை சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடிக்கும். பதிவு செய்யப்பட்ட சூரிய கரும்புள்ளி 8 வாரங்கள் வரை நீடித்துள்ளது. "
Q22. சூரியனின் சுடரொளி வீச்சு - “Sun Flare” என்பது என்ன?
"சூரியனில் கரும்புள்ளி (sunspot) யை சுற்றியுள்ள காந்த திரவம் சிதைவடையும் போது ஏற்படும் வெடிப்பி/கொந்தளிப்பினான் வெளிவரும் ஆற்றல் (சக்தி) சூரியனின் வளி மண்டலத்தில் அடைவதை இவ்வாறு அழைக்கின்றனர். இந்த முறையில் ஏற்படும் வெடிப்பு explosion -- எற்படுத்தும் சக்தி, சில ஹைட்ரஜன் வெடிகுண்டுகளை விட அதிகமானது. "
Q23. "நடு இரவு சூரியன்" “Mid Night Sun” என்பது என்ன?
"கோடைகால நடுப்பகுதியில், துருவப்பகுதிகளில், சூரியன் பொதுவாக அடிவானத்தின் ( horizon) மேலேயே 24 நான்கு மணி நேரமும் நிலைத்து நிற்கும். இதனால் சூரியன் நடு இரவில் மட்டுமே கண்ணுக்கு புலப்படும். இந்த அரிய புவியியல் நிகழ்ச்சி நார்வே நாட்டில் ஏற்படுகிறது."