Khub.info Learn TNPSC exam and online pratice

கிரகங்கள் -- PLANETS

Q1. கிரகங்கள் என்பது என்ன?
சூரியனை சுற்றி வரும் கோள்கள், அதே சமயம் தன்னைத் தானே தனது அச்சில் சுற்றிக் கொண்டிருப்பவை.

Q2. எத்தனை கிரகங்கள் உள்ளன? அவற்றை சூரியனிலிருந்து வரிசைப்படுத்தவும்?
எட்டு. 1. புதன் -- Mercury; 2. வெள்ளி -- Venus; 3. பூமி -- Earth; 4. செவ்வாய் -- Mars; 5. வியாழன் -- Jupiter; 6. சனி -- Saturn; 7. Uranus மற்றும் 8. Neptune
Q3. ஆகஸ்ட் 2006க்கு முன்பாக சூரிய குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் இருப்பதாகத் தான் அறிந்திருக்கிறோம். ஆனால் இப்போது 8 கிரகங்கள் தான் எனப்படுகிறது. பின்னணி என்ன?
ஆகஸ்ட் 2006ல், சர்வதேச வானியில் அமைப்பு ப்ளூட்டோ கிரகத்தை குள்ள கிரகமாக ( dward planet ) அறிவித்து சூரிய குடும்ப கிரக அந்தஸ்தை திரும்ப பெற்றது.
Q4. "உள் கிரகங்கள்" “Terrestrial Planets” என்பன யாவை ?
சூரியனை சுற்றி வரும் கிரகங்களில், உள் வட்டத்தில் சுழலுபவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன. அவை மெர்க்குரி, வீனஸ், பூமி, மார்ஸ்.
Q5. "ராட்சத கிரகங்கள்" “Giant Planets” என்பவை யாவை? ?
சூரியனின் வெளி வட்டத்தில் சுற்றி வரும் -- ஜூபிடர், சாட்டர்ன், உரேனஸ், நெப்ட்யூன் கிரகங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. (2006க்கு முன்பு ப்ளூட்டோவும் இதில் அடங்கும்)
Q6. சூரியனிலிருந்து, சுழலும் முதல் கிரகம் ( சூரியனுக்கு அருகில் உள்ள கிரகம்) எது?
மெர்க்குரி -- இது சூரியனிலிருந்து சுமார் 57909175 கி.மீ தூரத்தில் உள்ளது.
Q7. மெர்க்குரி கிரகத்தில் நிலவும் தட்பவெட்ப நிலை என்ன?
-183 ° C முதல் 427 ° C வரை. சூரியனுக்கு அருகில் இருந்த போதிலும் இது இரண்டாவது அதிக வெப்பம் கொண்ட கிரகம்.
Q8. சூரியனை ஒரு முறை சுற்றி வர மெர்க்குரி எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
88 நாட்கள் (87.969 நாட்கள்)
Q9. மெர்க்குரி கிரகம் .......
சூரிய குடும்பத்தின் மிக வேகமான கிரகம்.
Q10. சூரிய குடும்பத்தில் மிகவும் மெதுவான கிரகம் எது?
மெர்க்குரி -- (விட்டம் 4880 Kms.)
Q11. மெர்க்குரி தன்னைத்தானே தனது அச்சில் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
58.65 days (58.5462 days)
Q12. மெர்க்குரி கிரகத்துக்கு ஏதேனும் கோள் satellite உள்ளதா?
இல்லை.
Q13. சூரியனிலிருந்து இரண்டாவதாக உள்ள கோளம் எது?
சுக்ரன் -- வீனஸ் -- VENUS – சூரியனிலிருந்து சுமார் 108298930 கி.மீ தூரத்தில் உள்ளது. இதன் விட்டம் 12103.6 கி.மீ.
Q14. சூரியன் மற்றும் நிலவுக்குப் பிறகு வானில் ஒளிமிக்க விண் பொருள் எது?
சுக்ரன் -- வீனஸ் -- Venus.
Q15. கிரகம் சுக்ரன்-Venus வேறு எந்த பெயரில் அழைக்கப்படுகிறது.
காலை மற்றும் மாலை நட்சத்திரம். -- Morning and Evening Star.
Q16. பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் எது?
சுக்ரன்-வீனஸ்- Venus. பூமியின் விட்டத்தை விட சுமார் 500 கி.மீ குறைவானது.
Q17. சுக்ரன்-வீனஸ் கிரகம் தனது அச்சில் எவ்வாறு சுற்றுகிறது?
இடஞ்சுழி -- Anti-clock wise.
Q18. சுக்ரன் - வீனஸ் கிரகம் .......
மிகவும் வெப்பமான கிரகம். இந்த கிரகத்தின் உள் வெப்ப நிலை சுமார் 460° செல்சியஸ்.
Q19. கிரகம் சுக்ரன் - வீனஸ், சூரியனை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
224.7 நாட்கள்
Q20. கிரகம் சுக்ரன் - வீனஸ் எந்த திசைகளில் சுழலுகிறது?
கிழக்கிலிருந்து மேற்காக.
Q21. கிரகம் சுக்ரன் - வீனஸ் க்கு யாருடைய பெயர் இடப்பட்டுள்ளது?
கிரேக்க அழகுக்கான கடவுள் பெயர்.
Q22. கிரகம் சுக்ரன் - வினஸ் ன் உள்ளடக்கம் என்ன?
96.5% கார்பன் டை ஆக்ஸைடு (கரியமில வாயு) மற்றும் 3.5% நைட்ரஜன்.
Q23. சூரிய குடும்பத்தில், கிரகம் பூமியின் நிலை என்ன?
சூரியனிலிருந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. (மேலும் தகவல்கள் ""பூமியும் அதன் அமைப்பும்"" பகுதியில் விவரமாக காணலாம்)
Q24. நிறை (mass) யில், கிரகம் பூமியின் நிலை என்ன?
சூரிய குடும்பத்தில் 5வது பெரிய கிரகம்.
Q25. சூரியனிலிருந்து நான்காவதாக உள்ள கிரகம் எது?
செவ்வாய் -- Mars – சூரியனிலிருந்து சுமார் 227940000 கிமீ தூரம்.
Q26. செவ்வாய் கிரகம் Mars வேறு எவ்வாறு அறியப்படுகிறது?
சிவப்பு கிரகம் -- Red Planet.
Q27. செவ்வாய் கிரகம் சிகப்பு வண்ணத்தில் இருக்கக் காரணம் என்ன?
உயிரகமேற்றம்/விஷத்தன்மை -- Oxidation.
Q28. செவ்வாய் கிரகத்தின் கோள்கள் யாவை?
இரண்டு --
(1) ஃபோபோஸ் Phobos (Fear)
(2) டெய்மர் Deimor (Terror).
Q29. செவ்வாய் கிரகத்தின் எந்த அமைப்பினால், துருவத்தில், கோடை மற்றும் பனிக்காலம் ஏற்படுகிறது?
இதன் அச்சில் axis உள்ள சாய்வின் காரணத்தினால, துருவப்பகுதிகள் சூரிய வெளிச்சத்துக்கு வெளிப் படுத்தப்படுவதால், இரு துருவங்களிலும் கோடையும் பனிக்காலமும் மாறி மாறி வருகிறது.
Q30. செவ்வாய் கிரகத்தில் பகல் பொழுது எவ்வளவு?
24.7 மணி. ஏறக்குறைய பூமிக்கு சமமாக.
Q31. சூரியனிலிருந்து செவ்வாய் கிரகத்தின் சராசரி தூரம் என்ன?
சுமார் 227940000 கி.மீ.
Q32. செவ்வாய் கிரகத்தின் விட்டம் என்ன?
6794 கி.மீ
Q33. செவ்வாய் கிரகம் தனது அச்சில் ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் என்ன?
1.025957 நாட்கள்.
Q34. செவ்வாய் கிரகம், சூரியனை ஒருமுறைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் என்ன?
686.98 நாட்கள்.
Q35. சூரியனிலிருந்து ஐந்தாவது கிரகமாக இருப்பது எது?
குரு -- ஜூபிடர் -- Jupiter – சூரியனிலிருந்து சுமார் 778412010 கி.மீ தூரத்தில் உள்ளது. கிரகங்களின் வரிசையில் மத்தியில் உள்ளது.
Q36. பரப்பளவில் குரு -- ஜூபிடர் கிரகத்தின் நிலை என்ன?
சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் பரப்பளவில் மிகப் பெரியது.
Q37. குரு -- ஜூபிடர் கிரகம், மற்ற கிரகங்களுடன் ஒப்பிடுகையில், எவ்வளவு பெரியது?
எல்லா கிரகங்களின் பரப்பளவுகளையும் சேர்த்தும், இது சுமார் ஒன்றரை மடங்கு பெரியது.
Q38. குரு -- ஜூபிடர் கிரகம், வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மிகப்பெரிய கிரகம் -- Giant Planet.
Q39. குரு-ஜூபிடர் கிரகத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான அம்சம் என்ன?
பெரிய சிவப்பு மையம் (புள்ளி/இடம்) -- The Great Red Spot.
Q40. குரு-ஜூபிடர் கிரகத்துக்கு எத்தனை கோள்கள் உள்ளன?
பதினாறு. 16.
Q41. குரு-ஜூபிடர் கிரகத்தின் மிக முக்கிய கோள்கள் யாவை?
கனிமேட், யூரோப்பா, காலிஸ்டோ. Ganimede, Europa, and Callisto.
Q42. குரு-ஜூபிடர் கிரகம், தனது அச்சில் ஒரு முறை சுற்றி வர எவ்வளவு காலம் ஆகிறது?
9 மணி 50 நிமிடங்கள்.
Q43. குரு-ஜூபிடர் கிரகம், சூரியனை ஒரு முறைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் என்ன?
11 வருடங்கள், 314 நாட்கள்.
Q44. குரு-ஜூபிடர் கிரகத்தைச் சுற்றி எத்தனை வளையங்கள் உள்ளன?
ஒன்று.
Q45. குரு-ஜூபிடர் ஐ சுற்றி ஆய்வு செய்த முதல் செயற்கைக்கோள் எது?
பயனியர் 10 -- அமெரிக்கா -- 3.12.1973. Pioneer 10 – USA – 3.12.1973.
Q46. குரு-ஜூபிடர் கிரகத்தின் நான்கு பெரிய கோள்களைக் கண்டுபிடித்தவர் யார்?
கலீலியோ கலீலி -- Gallileo Gallilei. 16-17 நூற்றாண்டுகளில் வாழ்ந்த இத்தாலிய வானியல் நிபுணர்.
Q47. சனி- Saturn கிரகம், சூரியனிலிருந்து எந்த நிலையில் உள்ளது?
ஆறாவது இடத்தில், சூரியனிலிருந்து சுமார் 1426725400 கி.மீ தூரத்தில் உள்ளது.
Q48. சனி- Saturn கிரகத்தின் சிறப்பு அம்சங்கள் யாவை?
இந்த கிரகத்தைச் சுற்றி, தனித்துவமாகவும், புலப்படும்படியாகவும் வளையங்கள் உள்ளன.
Q49. சனி- Saturn கிரகத்திற்கு எத்தனை கோள்கள் உள்ளன?
இருபத்தி இரண்டு.
Q50. சனி- Saturn கிரகத்தின் முக்கியமான கோள்கள் யாவை?
டைட்டன், ஜேனஸ், ஹெலினா --Titan, Janus, Helena.
Q51. சனி- Saturn கிரகத்தின் சந்திரனின் பெயர் என்ன?
என்சிலாடஸ் -- ENCELADUS -- இதன் சம தளத்தில் நிறைய ஹைட்ரோகார்பன் ஏரிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Q52. சனி- Saturn கிரகத்தின் மிகப்பெரிய கோள் எது?
டைட்டன் -- தனக்கென்று வளி மண்டலத்தைக் கொண்டது.
Q53. சனி- Saturn கிரகத்தின் விட்டம் எவ்வளவு?
120536 கி.மீ
Q54. சனி- Saturn கிரகம் தன்னைத் தானே தனது அச்சில் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் என்ன?
10 மணி மற்றும் 34 நிமிடங்கள்.
Q55. சனி - Saturn கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
29 வருடங்கள், 168 நாட்கள்.
Q56. "காசினி பிரிவு" “Cassini Division” என்பது என்ன?
சனி கிரகத்தைச் சுற்றியுள்ள வளையத்தின் இடையில் உள்ள இடைவெளி. இது சுமார் சுற்றளவில் சுமார் 5 லட்சம் மைல்களும், ஒரு அடி தடிமனும் கொண்டது.
Q57. சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்களின் இடையில் உள்ள இடைவெளிகளுக்கு வைக்கப் பட்டுள்ள பெயர் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன?
வீலர், ஹ்யூஜென்ஸ், காஸினி, மேக்ஸ்வெல் -- இவை எல்லாமே புகழ் பெற்ற வானியில் விஞ்ஞானிகளில் பெயர்கள்.
Q58. யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து எந்த நிலையில் உள்ளது?
ஏழாவது -- சுமார் 2870972200 கி.மீ தூரத்தில் உள்ளது.
Q59. யுரேனஸ் கிரகத்தை, கண்டுபிடித்தவர் யார்? கண்டுபிடிப்பில் உள்ள முக்கியத்துவம் என்ன?
1781 – இங்கிலாந்து நாட்டின் வில்லியம் ஹெர்ஷெல் William Herschell என்பவர், முதன் முதலாக தொலை நோக்கு கருவியின் telescope உதவியால் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Q60. யுரேனஸ் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
84 புவி ஆண்டுகள் (84 வருடங்கள், 4 நாட்கள்)
Q61. யுரேனஸ் 1781ல் கண்டுபிடிக்கப்பட்டு இது வரை சூரியனை எத்தனை முறை சுற்றியுள்ளது?
இரண்டு ( மூன்றாவது சுற்று 2033ல் முடியும்).
Q62. யுரேனஸ் கிரகத்துக்கு எத்தனை கோள்கள் உள்ளன?
பனிரெண்டு. இவற்றுக்கெல்லாம், வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் அல்லது அலெக்ஸாண்டர் போப் எழுதிய “The Rape of Lock” என்ற கவிதையில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் வைக்கப் பட்டுள்ளன.
Q63. யுரேனஸ் கிரகத்தின் சில முக்கியமான கோள்களின் பெயர்களைக் கூறுக?
மிராண்டா, ஏரியல், அம்ப்ரெல், டைடானியா, ஒபெரான், டெஸ்டெபோனா, பக், ஜூலியட், ஆரிட்.( Miranda, Ariel, Umbrel, Titania, Oberon, Desdemona, Puck, Juliet, Arid)
Q64. யுரேனஸ் கிரகம், தனது அச்சில், தன்னைத்தானே சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் என்ன?
17 மணி 17 நிமிடங்கள்.
Q65. சூரியனிலிருந்து 8 வது கிரகமாக இருக்கும் கிரகம் எது?
நெப்ட்யூன் -- Neptune.
Q66. நெப்ட்யூன் கிரகத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
J.G. காலி Galle -- பெர்லின் -- ஜெர்மனி -- 1846. of Berlin, Germany in 1846.
Q67. நெப்ட்யூன் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதில் உள்ள சிறப்பு அம்சம் என்ன?
இந்த கிரகம் கணித கணக்கீடுகள் மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
Q68. ஒரு தொலைநோக்குக் கருவி மூலம் பார்க்கும் போது, நெப்ட்யூன் கிரகம் எவ்வாறு தெரியும்?
பச்சை நிறம் கொண்ட ஒரு நட்சத்திரம் போல காணப்படும்.
Q69. நெப்ட்யூன் கிரகத்துக்கு எத்தனை கோள்கள் உள்ளன?
எட்டு.
Q70. நெப்ட்யூன் கிரகத்தின் முக்கியமான கோள்கள் யாவை?
ட்ரிடான் மற்றும் நெரீட்.. Triton and Nereid.
Q71. நெப்ட்யூன் கிரகத்திற்கு எதனுடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது?
ரோமானிய காலத்து, கடலின் கடவுள் God of Sea.
Q72. நெப்ட்யூன் கிரக அமைப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் யாவை?
ஒரு பெரும் கரும் புள்ளி/இடம். பூமிக்கு இணையான மெத்தீன் வாயு கொண்ட ஒரு மிகப்பெரிய மேக அமைப்பைக் காணப்படும்.
Q73. நெப்ட்யூன் கிரகத்தின் விட்டம் என்ன?
49522 கி.மீ.
Q74. நெப்ட்யூன் கிரகம் தனது அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம் என்ன?
16 மணி 7 நிமிடங்கள்.
Q75. நெப்ட்யூன் கிரகம் சூரியனை ஒரு முறைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
164 வருடங்கள், 298 நாட்கள். கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இது வரை ஒரு முறை சுற்றியுள்ளது. 2011 ல் ஒரு சுழற்சி முடித்துள்ளது.
Q76. நெப்ட்யூன் கிரகத்துக்கு உள்ள கோள்கள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
ஆகஸ்ட் 1989ல், அமெரிக்காவின் செயற்கைக்கோள் ""வாயேஜர் 1 & 2"" சுற்றி வரும் போது இந்த ஆறு கோள்களைக் கண்டுபிடித்ததின் மூலம், நெப்ட்யூனுக்கு மொத்தம் 8 கோள்கள் ஆகும்.
Q77. ப்ளூட்டோ கிரகத்தைக் கண்டு பிடித்தவர் யார்?
C.W. டாம்பா Tombaugh -- அமெரிக்கா -- 1930 . இது சூரியனிலிருந்து சுமார் 591352000 கி.மீ தூரத்திலுள்ளது.
Q78. ப்ளூட்டோ கிரகத்தைக் கண்டு பிடித்தவர் டாம்பாஹ். ஆனால் ப்ளூட்டோ என பெயர் வைத்தவர் வேறு ஒருவர். அவர் யார்?
இங்கிலாந்தின் வெனிஷியா பர்னி என்ற இளம் வயது பள்ளி மாணவி.
Q79. ப்ளூட்டோ கிரகம் தனது அச்சில், தன்னைத் தானே சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் என்ன?
247.7 வருடங்கள் (247 years and 256 days)
Q80. ப்ளூட்டோ கிரகத்துக்கு எத்தனை சந்திரன் உள்ளது?
ஒன்று – CHARON.
Q81. ப்ளூட்டோ சில வருடங்கள் முன்பு வரை, சூரிய குடும்பத்தே சேர்ந்த ஒரு கிரகமாக இருந்தது. பிறகு எப்போது இந்த நிலையிலிருந்து மாறுபட்டது/நீக்கப்பட்டது?
ஆகஸ்ட் 24, 2006 முதல், இந்த கிரகத்தை ஒரு மிகச்சிறிய கிரகமாக (dwarf planet), சர்வதேச வானியல் ஆய்வு சங்கம் International Astronomical Union அறிவித்தது.
Q82. ப்ளூட்டோ கிரகம் எப்போது நெப்ட்யூன் பாதையின் குறுக்கே சென்றது? அது மீண்டும் எப்போது நிகழும்?
ஜனவரி 23, 1979. இந்த நிகழ்வு இந்த தேதியிலிருந்து 222 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நிகழும்.
Q83. ப்ளூட்டோ கிரகம், சர்வதேச வானியல் ஆய்வு சங்கத்தால், சூரிய குடும்ப கிரக அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அதற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் என்ன?
குள்ள கிரகம் எண் -- 134340.   இதுவே இப்போது குறுங்கோள்களில் மிகப் பெரிய கோள்.