Khub.info Learn TNPSC exam and online pratice

குறுங்கோள், விண்கற்கள், கோள்கள் -- ASTEROIDS, METEORITES, SATELLITES:

Q1. குறுங்கோள்கள் -- Asteroids என்பது என்ன?
சிறு கோள்கள் அமைப்பிலிருந்து வெளி வந்த மிகச் சிறிய பாறை மற்றும் உலோகத் துகள்கள் வானத்தில் சுற்றிக் கொண்டிருப்பவை.

Q2. குறுங்கோள்கள் -- Asteroids வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Planetoids -- சிறு கோள்கள்.
Q3. குறுங்கோள்கள் -- Asteroids விண்ணில் எங்கு சுழன்று கொண்டிருக்கின்றன?
சூரியனைச் சுற்றி, செவ்வாய் Mars மற்றும் குரு Jupiter கிரகங்களுக்கிடையில் சுழல்கின்றன.
Q4. சுழன்று கொண்டிருக்கும் குறுங்கோள்களை இணைந்து ஒரு பெரிய கோள் ஆகாமல் எது தடுத்து கொண்டிருக்கிறது?
அருகின் உள்ள குரு-ஜூபிடர் கிரகத்தின் ஈர்ப்பு விசை காரணத்தினால் அவை இணையாமல் தனித்தனியாக சுழன்று கொண்டிருக்கின்றன.
Q5. குறுங்கோள்கள், சூரியனை ஒரு முறைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் எவ்வளவு?
3 லிருந்து 10 வருடங்கள்.
Q6. குறுங்கோள்களில் மிகப் பெரியது எது?
சீரீஸ் உடுக்கோள் -- CERES – இதன் விட்டம் சுமார் 1025 கி.மீ.. (இந்த குறுங்கோள்களிலேயே சிறியது சுமார் 4.5 கி.மீ விட்டம் கொண்டது).
Q7. குறுங்கோள்களில் சாதாரணமாக கண்ணுக்குப் புலப்படுவது எது?
வெஸ்டா -- VESTA – 1807ல் கண்டுபிடிக்கப்பட்டது.
Q8. விண்ணில் சுமார் எத்தனை குறுங்கோள்கள் சுழன்றுகொண்டிருக்கின்றன?
50000
Q9. விண்கற்கள் Meteorite/Meteoroidஎன்பது என்ன?
விண்ணில் புலப்படும் சிறு விண்பொருள்கள், திடீரென வெகு வேகத்தில், ஒரு ஒளியுடன் பாய்வதை நாம் பார்த்திருப்போம். இவை, ஈர்ப்பு விசையிலிருந்து விலகி, பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, சுமார் 11 முதல் 72 கி.மீ வேகத்தில் நுழையும். இவை, துகள்களாகவும், தூசியாகவும் பூமியில் விழும் போது பூமியில் பெரிய பள்ளங்களை உருவாக்கும். இவை விழும் நட்சத்திரங்கள் Falling Stars எனவும் அழைக்கப்படுகின்றது.
Q10. உலகில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல் எது, அதன் உள்ளடக்கம் என்ன?
1920ல், நமீபியாவின் ஹோபா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட விண்கல் சுமார் 70 டன் எடை கொண்டதாக இருந்தது. இதில் இரும்பும் நிக்கலும் உள்ளடங்கியிருந்தது.
Q11. உலகில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய விண்கல் எது?
கீர்ன்லாந்து நாட்டின் டெண்ட் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் -- சுமார் 57.3 டன் எடை கொண்டதாக இருந்தது.
Q12. ஒரு விண்கல் தரையில் விழும்போது ஏற்படுவது என்ன?
பெரும் பள்ளங்களை உருவாக்குகின்றன. அவை ஆங்கிலத்தில் Crators என அழைக்கப்படுகின்றன.
Q13. கோள் என்பது என்ன? ( Satellite == செயற்கைக்கோள்)
ஒரு கிரகத்தைச் சுற்றி வரும் ஒரு விண்பொருள்.
Q14. இந்திய பூமியில் விழுந்த மிகப்பெரிய விண்கல் விழுந்து ஏற்பட்ட பள்ளம் எங்குள்ளது?
புல்தானா மாவட்டம், மகாராஷ்டிரா.