Khub.info Learn TNPSC exam and online pratice

சந்திரன் MOON

Q1. சந்திரன் என்பது என்ன?
விண்ணில் நிலைத்திருக்கும் ஒரு விண்பொருள். இது பூமியின் இயற்கையான கோள். இது சுமார் 4600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவானதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Q2. சந்திரன் எந்த கிரகத்தைச் சுற்றி சுழன்று வருகிறது?
பூமியைச் சுற்றி சுழல்வது மட்டுமின்றி, தனது அச்சில் தன்னைத் தானே சுழன்றும் வருகிறது.
Q3. சந்திரனின் விட்டம் எவ்வளவு?
3475 கி.மீ -- பூமியின் அளவில் சுமார் கால் பங்கு கொண்டது.
Q4. பூமியிலிருந்து சந்திரன் எவ்வளவு தூரத்தில் உள்ளது?
1) மேற்பரப்பிலிருந்து மேற்பரப்பு வரை -- 376284 கி.மீ.
2) மையத்திலிருந்து மையம் வரை -- 384400 கி.மீ.
Q5. பூமியை ஒரு முறைச் சுற்றி வர, சந்திரன் எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் என்ன?
27 நாட்கள் 7 மணி 43 நிமிடங்கள் 11.5 வினாடிகள்.
Q6. சந்திரன் தனது அச்சில் தன்னைத் தானே சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் என்ன?
28 நாட்கள்.
Q7. முழு நிலவு == பௌர்ணமி -- Full Moon என்பது என்ன?
பூமி தனது சுழற்சியில், எப்போது, சந்திரனுக்கும் சூரியனுக்குமிடையில் வருகிறதோ, அப்போது முழு நிலவு = பௌர்ணமி = Full Moon எனப்படுகிறது.
Q8. புது நிலவு = அமாவாசை = New Moon என்பது என்ன?
சந்திரன் தனது சுழற்சியில், எப்போது பூமிக்கும் சூரியனுக்குமிடையில் வருகிறதோ, அப்போது புது நிலவு == அமாவாசை = New Moon எனப்படுகிறது.
Q9. நீல நிலவு Blue Moon என்பது என்ன?
ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் ஏற்படும் பட்சத்தில், இரண்டாவது முழுநிலவு இந்த பெயரில் அழைக்கப்படுகிறது.
Q10. சமீப காலத்தில் முழு நிலவு ஏற்படாத மாதம் எது?
பிப்ரவரி 1999. இது 2018 பிப்ரவரியில் ஏற்பட உள்ளது.
Q11. நிலவில் "அமைதிக்கடல்" “Sea of Tranquility” என்ற பகுதி என்ன?
நிலவின் மேற்பரப்பில் ஒரு இடம். இந்த இடத்தில் தான் முதல் முதலாக அமெரிக்க விண்கலம் அப்போலோ 11 24.7.1969 அன்று தரை இறங்கியது. இறங்கியவுடன் விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அந்த இடத்தை இந்த பெயரில் அழைத்தார்.
Q12. "நிலவு நாள்" " Lunar Day " என்பது என்ன?
சந்திரனின் சுழற்சிக்கு இணையாக, பூமி ஒரு சுழற்சிக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது சுமார் 24 மணி 50 நிமிடங்களாகும் -- காரணம், பூமி சுழன்று கொண்டிருக்கும் போது, சந்திரன், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் புவியீர்ப்பு மையத்தை சுற்றி வருகிறது.
Q13. "நிலவு மாதம்" " Lunar Month" என்பது என்ன?
சந்திரன் பூமியைச் சுற்றி ஒரு சுழற்சி செய்வதற்கு -- அதாவது இரண்டு புது நிலவுகளுக்கிடையில் -- எடுத்துக்கொள்ளும் நேரம் -- சுமார் 29.5 நாட்கள்.
Q14. நிலவின் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
1.3 வினாடிகள்.
Q15. நிலவு சூரியனை எத்திசையில் சுற்றுகிறது?
மேற்கிலிருந்து கிழக்காக.
Q16. நிலவின் சுழற்சியின் வேகம் என்ன?
3680 கி.மீ ஒரு வினாடிக்கு.
Q17. நிலவைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் எவ்வாறு ஏற்படுகிறது?
நிலவைச் சுற்றி, ஒரு ஒளி அல்லது வெளிர் வண்ண வட்டம் இருப்பது - காரணம், நிலவின் மேற் பரப்பில் இருக்கும் பனி படிகங்களிலிருந்து ஒளி பிரதிபலிப்பினால் ஏற்படும் இந்த வட்டம்.
Q18. “Umbras” என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது என்ன?
நிலவின் மீது விழும் பூமியின் நிழல்.
Q19. நிலவில் நன்கு தெரியும் பள்ளம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டைகோ -- Tycho.
Q20. பூமியின் மேற்பரப்பிலிருந்து, நிலவின் எவ்வளவு பகுதி கண்ணுக்கு புலப்படும்?
59%.
Q21. நிலவு, பூமியிலிருந்து அதிகமான தூரத்திலிருக்கும் போது, அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அபோஜி -- Apogee == இரண்டு கோள்களுக்கிடையில் உள்ள மிக நீண்ட தூரம்.
Q22. சூரிய குடும்பத்தின் ஒரு துணை விண்பொருளான நிலவு தான் முதன் முதலில் .....
மனிதன் காலடி எடுத்து வைத்த முதல் விண்பொருள்.
Q23. நிலவில் மனிதன் காலடி பதித்த நாள் எது?
24.7.1969 -- APOLLO XI விண்கலம் -- அமெரிக்கா.
Q24. நிலவில் காலடி பதித்த முதல் மற்றும் இரண்டாம் மனிதர் யார்?
1) நீல் ஆர்ம்ஸ்ட்ராங் -- அமெரிக்கா -- தனது இடது காலை முதலில் நிலவில் பதித்தார்.
2) எட்வின் ஆல்ட்ரின் -- அமெரிக்கா.
Q25. எந்த அமெரிக்க குடியரசுத்தலைவரின் கையெழுத்துப் பதிக்கப்பட்ட பலகை நிலவில் வைக்கப் பட்டுள்ளது?
ராபர்ட் நிக்ஸன் -- இந்த பலகையில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கே காலின்ஸ் ஆகியோரின் கையெழுத்துகளும் உள்ளன.
Q26. நிலவில் சாப்பிடப்பட்ட முதல் பழம் எது?
Peach-- பீச் -- குழிப்பேரி.
Q27. நிலவில் விளையாடப்பட்ட முதல் விளையாட்டு
கோல்ஃப் -- Golf.
Q28. அறுவடைகால நிலவுக்குப் பிறகு வரும் முழு நிலவு ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வேட்டைக்காரன் நிலவு -- The Hunter’s Moon.
Q29. நிலவின் மேற்பரப்பில், எந்த மனிதனின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது?
யூஜின் ஷூமேக்கர் Eugene Shoemaker -- ""ஷூமேக்கர் லெவி"" ‘Shoemaker Levy’ என்ற வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர். இவருடைய அஸ்தியை 1999ல் LUNAR PROSPECTOR என்ற விண்கலம் நிலவுக்கு எடுத்துச் சென்றது.