Khub.info Learn TNPSC exam and online pratice

வளி மண்டலம் -- ATMOSPHERE

Q1. வளி மண்டலம் என்பது என்ன?
பூமியிலிருந்து சுமார் 480 கி.மீ உயரம் வரை உள்ள, வாயுக்களாலும், நீர் ஆவிகளாலும் நிறைந்த பகுதி.

Q2. பூமியின் வளி மண்டலத்தில் அதிகமாக உள்ள வாயு எது?
நைட்ரஜன் -- Nitrogen 78.09%.
Q3. பூமியில் வாழும் ஜீவராசிகளுக்கு வளி மண்டலம் எவ்வாறு முக்கியமாகிறது?
பூமியின் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்துகிறது. புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து ஜீவ ராசிகளைக் காப்பாற்றுகிறது. இது ஒரு அரண் போல் செயல் படுகிறது.
Q4. வளி மண்டலத்தின் தடிமன் என்ன?
பூமியிலிருந்து 960 கி.மீ தூரம் உயரம் வரை.
Q5. வளி மண்டலத்தின் உள்ளடக்கம் என்ன?
1. நைட்ரஜன் Nitrogen 78.09%
2. ஆக்ஸிஜன் Oxygen 20.95%
3. அர்கான் Argon 0.93%
4. மற்றவை Others 0.03%.
5. மற்றவை கார்பன் டை ஆக்ஸைட், ஹைட்ரஜன், நியான், ஹீலியம், மெத்தீன், க்ஸெனான், க்ரிப்டான்.
Q6. பூமியின் மேற்பரப்பிலிருந்து 50 கி.மீக்கு மேலுள்ள காற்றின் உள்ளடக்கம் என்ன?
அணு ஆக்ஸிஜன், ஓசோன், ஹீலியம், ஹைட்ரஜன்.
Q7. "வளிமண்டல அழுத்தம்" “Atmospheric Pressure” என்பது என்ன?
ஒரு குறிப்பிட்ட மையத்தில் உள்ள மொத்த காற்றின் எடை.
Q8. ஒரு லிட்டர் காற்றின் எடை எவ்வளவு ?
1.3 கிராம். Grams.
Q9. காற்றிலுள்ள நீராவி யை பொதுவாக எவ்வாறு அழைப்பார்கள்?
ஈரப்பதம் -- Humidity.
Q10. தரை மட்டத்தில் நிலவும் காற்றின் அளவு என்ன?
சுமார் 1033.6 கிராம்/சதுர செ.மீ.
Q11. வளிமண்டலம் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
ஸ்ஃபியர்கள் : SPHERES:
(1) Troposphere -- அடி வளிமண்டலம்
(2) Stratosphere -- அடுக்கு வளிமண்டலம்
(3) Mesosphere -- மத்திய மண்டலம்
(4) Ionosphere -- அயனி மண்டலம்
(5) Thermosphere -- வளி மண்டல வெப்ப அடுக்கு
(6) Exosphere -- புறவெளி மண்டலம்
(7) Magnetosphere -- காந்த வெளி மண்டலம்.
இடைவெளிப் பகுதிகள் -- PAUSES:
(1) Tropopause -- வெப்ப மண்டலக் கடப்பு வெளி.
(2) Mesopause -- மீசோபாஸ்; மற்றும்
(3) Magnetopause. -- மேக்னெட்டோபாஸ்.
Q12. ‘Troposphere’ ட்ரோப்போஸ்ஃபியர் என்பது என்ன, அது எவ்வளவு தூரம் உள்ளது?
பூமியின் மேற்பரப்புக்கு அருகாமையில் இருக்கும் வளி மண்டலம். இது பூமியின் கடல் மட்டத்தில் இருந்து 15 கி.மீ உயரம் வரை உள்ள பகுதி.
Q13. ‘Troposphere’ ட்ரோப்போஸ்ஃபியர் பகுதியின் உள்ளடக்கம் என்ன?
நீராவி, ஈரம், மற்றும் தூசுத் துகள்கள். Water Vapour, Moisture and Dust particles.
Q14. ‘Troposphere’ ட்ரோப்போஸ்ஃபியர் ல் உயரம் கூடும் போது வெப்ப நிலை எவ்வாறிருக்கும்?
உயரம் கூடும் போது, வெப்பநிலை குறையும்.
Q15. Stratosphere -- அடுக்கு வளிமண்டலம் என்பது எவ்வளவு தூரம் உள்ளது?
Troposphere -- அடி வளிமண்டலத்திற்கு மேலுள்ள பகுதி -- பூமியின் கடல் மட்டத்திலிருந்து 15 கி.மீ க்கு மேல் 50 கி.மீ க்குள் உள்ள பகுதி.
Q16. Stratosphere -- அடுக்கு வளிமண்டலம் வெப்பநிலை எவ்வாறிருக்கும்?
சமச்சீர் -- Uniform.
Q17. Stratosphere -- அடுக்கு வளிமண்டலம் உள்ளடக்கம் என்ன?
நீர் ஆவி, ஈரம், தூசுத் துகள்கள்.
Q18. Tropopause வெப்பமண்டல கடப்பு வெளி என்பது என்ன?
Troposphere மற்றும் Stratosphere ஆகிய இரண்டையும் பிரிக்கும் ஒரு அடுக்கு.
Q19. Tropopause வெப்பமண்டல கடப்பு வெளிக்கு மேல் உள்ள வளி மண்டலப் பகுதி எது?
மீசோஸ்ஃபியர் -- Mesosphere -- மத்திய மண்டலம்.
Q20. என்பது என்ன?
பூமியின் கடல் மட்டத்திலிருந்து 50 கி.மீக்கு மேலும் 85 கி.மீ க்குள்ளும் இருக்கும் பகுதி.
Q21. மீஸோஸ்ஃபியர் - மத்திய மண்டலம் தட்ப வெப்ப நிலை எவ்வாறு இருக்கும்?
மிகவும் குளிர். Very cold.
Q22. மீஸோஸ்ஃபியர் - மத்திய மண்டலம் உள்ளடக்கம் என்ன?
மிகவும் வறண்டு காணப்படும். கோடைக் காலத்தில் சிறிது நீர் ஆவிகள் புலப்படும்.
Q23. Ionosphere -- அயனி மண்டலம் என்பது என்ன?
பூமியின் கடல் மட்டத்திலிருந்து 80 கி.மீக்கு மேலும், 400 கி.மீக்குள்ளும் உள்ள வளிமண்டல பகுதி.
Q24. ஓசோன் அடுக்கி Ozone layer ன் பயன் என்ன?
விண்ணிலிருந்து வெளி வரும் புற ஊதா கதிர்களை தன்னுள் வாங்கிக்கொண்டு, மனித குலத்தை கதிர் வீச்சு தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.
Q25. அயனிமண்டலத்தின் உள்ளடக்கம் என்ன?
மின்னூட்டம் பெற்ற காற்று. Ionised air – electrically charged air.
Q26. ஓசோன் சிதைவு (குறைவு) ஏற்படக் காரணமாயிருக்கும் வாயு எது?
க்ளோரோஃப்ளூரோ ஹைட்ரோகார்பன் -- Chloro Fluoro Hydrocarbons –CFC.
Q27. அயனி மண்டலம் எவ்வாறு பூமிக்கு எவ்வாறு உதவுகிறது?
1. விண்கற்கள் பூமி மீது விழுவதிலிருந்து காக்கிறது. காரணம், விண்கற்கள் இந்த பகுதியில் எரிந்து சாம்பலாகிவிடுகின்றன.
2. பூமி மீது கதிர் வீச்சு தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.
Q28. மீஸோபாஸ் என்பது என்ன?
மீஸோஸ்ஃபியர் மற்றும் அயோனோஸ்ஃபியர் வளிமண்டலங்களுக்கு இடையில் நிலவும் ஒரு பகுதி.
Q29. தெர்மோஸ்ஃபியர் -- Thermosphere என்பது என்ன?
அயனி மண்டலத்தின் நடுப்பகுதி.
Q30. புற வெளி மண்டலம்--Exosphere என்பது எங்குள்ளது?
அயனி மண்டலத்திற்கு மேல் உள்ள வளிமண்டல பகுதி. வளிமண்டலத்தின் வெளிப்பகுதி. இங்கு பூமியின் ஈர்ப்பு விசை மிக குறைவு.
Q31. காந்த வெளி மண்டலம் -- Magnetosphere என்பது என்ன?
பூமியின் காந்த பெல்ட் magnetic belt கடல் மட்டத்திலிருந்து சுமார் 64000 கி.மீ உயரம் வரை நிலவுகிறது.
Q32. மேக்னெடோபாஸ் -- Magnetopause என்பது என்ன?
பூமிக்கும் விண்வெளிக்குமிடையில் உள்ள கடைசி எல்லைப் பகுதி வளி மண்டலம்.
Q33. பூமிக்கு மேலிருக்கும் வளிமண்டல அடுக்குகளை, பூமியிலிருந்து அவை நிலைத்திருக்கும் வரிசையை எடுத்துக் கூறுக.
(1) Troposphere -- அடி வளிமண்டலம்
(2) Tropopause -- வெப்ப மண்டலக் கடப்பு வெளி.
(3) Stratosphere -- அடுக்கு வளிமண்டலம்
(4) Mesosphere -- மத்திய மண்டலம்
(5) Mesopause -- மீசோபாஸ்;
(6) Ionosphere -- அயனி மண்டலம்
(7) Thermosphere -- வளி மண்டல வெப்ப அடுக்கு
(8) Exosphere -- புறவெளி மண்டலம் - அயனி மண்டலத்தின் மேல் பகுதி.
(9) Magnetosphere -- காந்த வெளி மண்டலம்.
(10) Magnetopause. -- மேக்னெட்டோபாஸ். இதற்குப் பிறகு விண்வெளி ஆகிறது.
Q34. ஓசோன் அடுக்கு (படலம்) -- Ozone Layer -- என்பது என்ன?
Stratosphere -- அடுக்கு வளிமண்டலம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. காரணம், பூமியின் கடல் மட்டத்திலிருந்து 15 கி.மீ க்கு மேல் மற்றும் 50 கி.மீ க்குள் இருக்கும் இந்த பகுதியில் தான் ஓசோன் வாயு நிரம்பியுள்ளது.
Q35. க்ளோரோஃப்ளூரோ ஹைட்ரோகார்பன் -- Chloro Fluoro Hydrocarbons –CFC வாயு வெளிவரக் காரணமாக இருப்பவை யாவை?
1. குளிரூட்டிகள் -- Air Conditioners
2. குளிர்சாதனப் பெட்டிகள் -- Refrigerators
3. தூசுப் படலம் -- ஏரோசால் -- Aerosols
4. கரைப்பான்கள் -- Solvents
5. சில பையகப்படுத்தும் பொருட்கள் தயாரிப்பு -- Production of certain packaging materials
6. நைட்ரஸ் ஆக்ஸைடு உர வகைகள் -- Nitrous Oxide Fertilisers
7. அதி வேக விமானங்கள் வெளியிடும் புகை -- Aircraft emissions.
Q36. ஏரோசால் -- Aerosol என்பது என்ன?
காற்றிலோ அல்லது வெளியிடப்படும் எந்த வாயுவோ, அதனுள் அடங்கியிருக்கும் தூசு துகள்கள் மற்றும் கரையாதிருக்கும் திரவ நீர்த்துளிகள்.
Q37. ஓசோன் சிதைவு ஏற்படுவதால் ஏற்படக்கூடிய உபாதைகள் என்ன?
தோல் புற்று நோய், தீவிர வெப்பச் சூட்டுக் கொப்பளங்கள், தாவரங்கள் பாதிப்பு.
Q38. பசுமைக் குடில் விளைவு -- Green House Effect என்பது என்ன?
ஒரு கிரகம், வளிமண்டல குறைபாடுகளால் வெப்பமடைதல். இந்த குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணி -- காற்றில் அதிகமான கார்பன் டை ஆக்ஸைடு கலத்தல்.
Q39. பூமியின் கடல் மட்டத்திலிருந்து எத்தனை தூரத்துக்கு மேல் உள்ள பகுதி விண்வெளி என சர்வதேச வான்வெளி மையம் - Federation Aeronautique Internationale தீர்மானித்துள்ளது?
100 கி.மீ -- இது ஒரு கற்பனைக் கோடு -- இதற்கு "கர்மான் கோடு -- Karman Line" எனப் பெயர். இதைத் தீர்மானித்தவர் தியோடர் வான் கர்மான் என்ற ஹங்கேரி/அமெரிக்க வானியல் விஞ்ஞானி. இதற்குக் காரணம், இந்த உயரத்துக்கு மேல் வளிமண்டலத்தின் தடிமன் மிகவும் மெல்லியதாக இருப்பதால், வானூர்தி பயணம் மேற்கொள்வது கடினம் என அறியப்பட்டுள்ளது.
Q40. வளிமண்டலத்துடன் சம்பந்தப்பட்ட TSPM என்ற ஆங்கிலத் தொடர் எதை விளக்குகிறது?
Total Suspended Particulate Matter -- மொத்த நிறுத்தி நுண் துகள். காற்றில் உள்ள மாசுத்தன்மையை கண்டு பிடிக்கும் ஒரு வழி. ஒரு இடத்தின் காற்றில் உள்ள தூசு துகள்கள் கண்டறியப்பட்டு, காற்றின் மாசுத் தன்மையை வெளியிடுகின்றனர்.
Q41. காற்று மாசுப் படுவதைத் தடுக்க இந்தியாவில் இயக்கப்பட்டுள்ள சட்டம் என்ன?
காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981.

வால் நட்சத்திரம் -- COMET

Q42. வால் நட்சத்திரம் Comet என்பது என்ன?
இந்த வால் நட்சத்திரத்தின் தலைப்பகுதி ( Coma) எனப்படுகிறது. இது வெப்பம் அதிகமான வாயு மற்றும் தூசு நிறைந்த பகுதியாகவும், அதிலிருந்து ஒரு வால் போன்ற அமைப்பும் இருக்கும்.
Q43. விண்வெளியில் சுமார் எத்தனை வால் நட்சத்திரங்கள் உள்ளன?
சுமார் ஒரு லட்சம்.
Q44. ஹெய்லி வால்நட்சத்திரத்தைக் கண்டுப் பிடித்தவர் யார்?
எட்மண்ட் ஹேலி -- இங்கிலாந்து.
Q45. ஹெய்லி வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்ணில் தெரியும்?
75/76 years.
Q46. ஹெய்லி வால் நட்சத்திரம் கடைசியாக எப்போது விண்ணில் தெரிந்தது?
1986
Q47. ஹெய்லி வால் நட்சத்திரம் மீண்டும் எப்போது வானில் தெரியும் என கணக்கிடப்பட்டுள்ளது?
2062 (ஜூலை 2061 க்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் 2062க்குள் தெரியும்)
Q48. எந்த வால் நட்சத்திரம், எப்போது, பூமியுடன் மோதக்கூடிய வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது?
ஸ்மித் டட்டிள் வால் நட்சத்திரம் -- Comet Smith Tuttle – ஆகஸ்ட் 17, 2116 .
Q49. ஸ்மித் டட்டிள் வால் நட்சத்திரம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது, அதன் உள்ளடக்கம் என்ன? அதனால் எந்த வித பாதிப்பு எதிர்பார்க்கப்படுகிறது?
இது முதலில் 1862ல் கண்ணுக்குப் புலப்பட்டு, மீண்டும் செப்டம்பர் 1992ல் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இதில் பனிக்கட்டியும் பாறைகளும் நிறைந்ததாக இருக்கும். எதிர்பார்க்கும்படி, இந்த மோதல் ஏற்பட்டால், அதன் தாக்கம், ஹிரோஷிமா நகரில் இரண்டாம் போரின் போது போடப்பட்ட அணுகுண்டைப் போல, சுமார் 1.6 மில்லியன் மடங்கு அதிகமான சக்தியுடன் மோதும் என கணக்கிடப் பட்டுள்ளது -- சுமார் 20 மில்லியன் மெகா டன் சக்தி.
Q50. ஷூ மேக்கர் லெவி என்ற வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
கரோலின் மற்றும் இக்வின் ஷூ மேக்கர் (அமெரிக்கா), மற்றும் டேவிட் லெவி (கேனடா) என்பவர்கள் 1993ல் கண்டுபிடித்தனர்.
Q51. ஷூ மேக்கர் லெவி வால் நட்சத்திரம் எவ்வளவு பெரியது?
10 கி.மீ நீளமும், சுமார் 500 மில்லியன் டன் எடையும் கொண்டதாக உள்ளது.
Q52. ஜூலை 1994ல், ஷூ மேக்கர் லெவி வால் நட்சத்திரம், எந்த கிரகத்துக்கு மிக அருகில் வந்தது?
ஜூபிடர் -- 16 - 21 ஜூலை 1994. 21 துண்டுகளாக உடைந்து, ஜூபிடர் கிரகத்துடன் இணைந்து விட்டது.
Q53. 2011ல் எந்த வால் நட்சத்திரம் புலப்பட்டது?
க்ராம்மெலின் -- Crommelin. மீண்டும் 2039ல் புலப்படும்.
Q54. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரம் எது?
ISON -- 21.11.2012 -- by Vitali Nevsky and Artyom Novochonok.
Q55. 2356ல் புலப்படும் என எதிர்பார்க்கப்படும் மிகப் பெரிய வால் நட்சத்திரம் எது?
Great Comet – இந்த வால் நட்சத்திரத்தின் வால் சுமார் 330 மில்லியன் கி.மீ நீளமுடையது.

கிரகணம் -- ECLIPSE

Q56. கிரகணம் -- Eclipse என்பது என்ன?
சூரியன் மற்றும் நிலவின் ஒளி வெளிப்படாமல், ஒன்றுக்கு ஒன்றால் தடைப்படும் காலம் கிரகணம் காணப்படுகிறது.
Q57. வழக்கமாக நடைபெறும் கிரகணங்கள் எவை?
சூரியன் மற்றும் சந்திர கிரகணங்கள். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு, அல்லது பூமி இவை இரண்டுக்குமிடையில் வந்து ஒளி தடைப்பட்டு வெளிப்படாமல் இருப்பதே கிரகணம் எனப்படுகிறது.
Q58. சந்திர கிரகணம் என்பது என்ன, அது எப்போது ஏற்படுகிறது?
பூமி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது ஏற்படுவது சந்திர கிரகணம். இது குறிப்பிட்ட ஒரு முழு நிலவு நாளிம் மட்டுமே ஏற்படும்.
Q59. ஏன் சந்திர கிரகணம், ஒவ்வொரு முழு நிலவு நாளிலும் ஏற்படுவதில்லை?
ஏனென்றால், பூமி மற்றும் சூரியன் நிலையில், எப்போதுமே நிலவு இருப்பதில்லை.
Q60. சூரிய கிரகணம் என்பது என்ன?
சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்போது ஏற்படுவது சூரிய கிரகணம்.
Q61. சூரிய கிரகணம் என்று எவ்வாறு ஏற்படுகிறது?
புது நிலவு நாள் (அமாவாசை) அன்று மட்டுமே ஏற்படும். இது பகுதி அல்லது முழு கிரகணமாக இருக்கலாம்.
Q62. 20ம் நூற்றாண்டின் நீண்ட சூரிய கிரகணம் என்று ஏற்பட்டது?
7 நிமிடங்கள், 8 விநாடிகள் -- 20.6.1955
Q63. சூரிய கிரகணம் ஏன் எல்லா புது நிலவு நாளிலும் ஏற்படுவதில்லை?
சூரியன் எப்போதும் சந்திரன் மற்றும் பூமியின் நிலையில் இருப்பதில்லை.
Q64. கிரகணங்கள் வருடத்தில் பொதுவாக எத்தனை முறை ஏற்படும்?
பொதுவாக இரு முறை.
Q65. சூரிய கிரகணம் ஒரே வருடத்தில் அதிகமான முறை எந்த வருடம் ஏற்பட்டது?
1935ல் ஐந்து முறை.
Q66. வலைய கிரகணம் -- Annular Eclipse என்பது என்ன?
சூரியனும் சந்திரனும் சம நிலையில் இருந்து, அவ்வமயம், நிலவின் அளவு சூரியனை விட சிறியதாக இருக்கும் பட்சத்தில் ஏற்படும் கிரகணம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q67. ஒரே வருடத்தில் கிரகணம் மூன்று முறை ஏற்படுவது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய ஒன்று. இருந்தும், அவை ஏற்பட்டுள்ளன. அவ்வாறு ஏற்படும் போது, சில அசம்பாவித நிகழ்ச்சிகளும் ஏற்பட்டுள்ளது. அவை?
1. 3031 BC -- புராண காலத்து துவாரகா நகரம் அழிவடைந்தது.
2. 1914 -- முதல் உலகப் போர்
3. 1939 -- இரண்டாம் உலகப் போர்
4. 2009 -- ஜூலை 22 - ஆகஸ்ட் 6 கால கட்டத்தில் 3 சந்திர கிரகணங்கள் ஏற்பட்டுள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வு.
Q68. 2010 ல் ஏற்பட்ட ஒரு வலைய சூரிய கிரகணம் ஓர் அரிய நிகழ்வு. அதைப்பற்றி ......
இந்த மில்லெனியம் (1000 ஆண்டுகள்) ஆண்டில் ஏற்பட்ட ஒரு அரிய நிகழ்வு. இது ஜனவரி 15, 2010 அன்று நிகழ்ந்தது. இது ஒரு சூரிய கிரகணம். தென் மாவட்டங்களில் மட்டுமே தெரிந்த இந்த கிரகணம் சுமார் 11 நிமிடம் 7.8 வினாடிகள் நீண்டது. இதே போன்ற அடுத்த நிகழ்வு 3043ல் தான் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Q69. கிரகணங்கள் என்ன வகைகள் உள்ளன?
1) முழு கிரகணம் -- TOTAL ECLIPSE: சூரியன், சந்திரனால் முழுமையாக மறைக்கப்பட்டால் ஏற்படுவது.
2) வலைய கிரகணம் -- ANNULAR ECLIPSE: சந்திரனும் சூரியனும் சம நிலையில் இருந்து, சந்திரனின் அளவு சூரியனை விட சிறியதாக இருந்து, ஏற்படும் கிரகணம்.
3) ஹைப்ரிட் கிரகணம் -- HYBRID ECLIPSE: முழு மற்றும் வலைய கிரகணம் ஒரே சமயத்தில் ஏற்பட்டு, உலகின் ஒரு பகுதியில் முழு கிரகணமாகவும், மற்றொரு பகுதியில் வலைய கிரகணமாகவும் தெரிவது. இது மிகவும் அரிதான நிகழ்வு.
4) பகுதி கிரகணம் -- PARTIAL ECLIPSE: இந்த கிரகணம், சூரியனும் சந்திரனும் சம நிலையில் இல்லாமல், சூரியனின் ஒரு பகுதி மட்டும் சந்திரனால் மறைக்கப்படும் போது ஏற்படுவது. இந்த் நிகழ்வு உலகின் பெரும் பகுதிகளில் காணக் கிடைப்பது. இந்த நிகழ்வு சில நேரங்களில், பூமி மீது விழும் நிழல் முழுமையாக இல்லாமல், பகுதியாக இருக்கும் பட்சத்தில், இந்த நிகழ்வு ஏற்படுகிறது.
Q70. கி.பி. 5000 ஆண்டுக்குள் நிகழக்கூடிய (இது வரையில்) மிக நீண்ட சூரிய கிரகணம் எப்போது ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது?
ஜூலை 16, 2186 -- 7 நிமிடங்கள் 29 வினாடிகள்.