Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மூன்று தொடர்ச்சியான இயல் எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 2030 எனில் நடு எண்ணைக் காண்க.
Q2. 0.09, 0.27 மற்றும் 3 ன் மீ.பொ.ம. காண்க.
Q3. இணைகரத்தின் பரப்பளவு 300 ச.செ.மீ, அடிப்பக்கம் 15 செ.மீ. எனில் அதன் உயரம்?
Q4. 11 பென்சில்கள் மற்றும் 3 அழிப்பான்களின் மொத்த விலை ரூ.50. மேலும் 8 பென்சில்கள் மற்றும் 3 அழிப்பான்களின் மொத்த விலை ரூ.38. எனில் ஒரு பென்சிலின் விலை என்ன?
Q5. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் பெஞ்சுக்கு 5 பேர் வீதம் அமர வைத்தால் 2 பெஞ்சுகள் மீதமாகும். 4 பேர் ஒரு பெஞ்சுக்கு என்று அமர வைத்தால் 10 மாணவர்களுக்கு அமர இடமில்லாமல் போகும் எனில் அந்த அறையில் உள்ள மாணவர், பெஞ்சின் எண்ணிக்கை முறையே…
Q6. 319, 323, 339, 375, 439, ……… இத்தொடரின் அடுத்த எண் யாது?
Q7. இரு எண்களின் வித்தியாசம், பெரிய எண்ணில் 20%, சிறிய எண் 20 எனில் பெரிய எண் எது?
Q8. ஒரு மூன்று இலக்க எண்ணை மறுபடியும் பக்கத்தில் எழுதி ஒரு ஆறு இலக்க எண் உருவாக்கப்படுகிறது. உதாரணம் 341341. இந்த அமைப்பில் உருவாக்கப்படும் எண்கள் எப்பொழுதும் எந்த எண்ணால் வகுபடும்?
Q9. ஒரு திண்ம நேர் வட்ட உருளையின் புறப்பரப்பு 880 ச.செ.மீ மற்றும் அதன் ஆரம் 10 செ.மீ. எனில் அவ்வுருளையின் வளைபரப்பைக் காண்க.
Q10. 20 மாணவர்கள் இரண்டு தாள்கள் A மற்றும் B -ன் தேர்வு வெளியீடு விவரமானது, 8 மாணவர்கள் தாள் A -ல் தேர்ச்சி பெற்றனர். 7 மாணவர்கள் தாள் B -ல் தேர்ச்சி பெற்றனர். 8 மாணவர்கள் இரண்டிலும் தோல்வி பெற்றனர். இதிலிருந்து ஒரு மாணவன் தேர்வு செய்யப்பட்டால், அவன் இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க நிகழ்தகவு யாது?
Q11. ஒருவர் வீட்டில் இருந்து ரயில் நிலையத்திற்கு 3 கி.மீ/மணி என்ற வேகத்திலும், ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு 2 கி.மீ/மணி என்ற வேகத்திலும் நடந்தால் மொத்தம் 5 மணி நேரம் ஆகிறது எனில் அதன் தூரம் என்ன?
Q12. (111111)2 என்ற பைனரி எண்ணுக்கு சமமான தசம எண் என்ன?
Q13. A மற்றும் B ஒரு குறிப்பிட்ட தூரத்தை 3 : 4 என்ற வேகத்தில் செல்கின்றனர். மேலும் A அந்த இடத்தை சென்றடைய 20 நிமிடம் தாமதமாகிறது. எனில் A எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?
Q14. 1 லிருந்து 31 வரை உள்ள ஒற்றைப்படை எண்களின் கூட்டுத்தொகை என்ன?
Q15. B என்ற கோளத்தின் ஆரம் A - ன் ஆரத்தில் பங்கு எனில் A -ன் கன அளவுக்கும் B -ன் கன அளவுக்கும் உள்ள விகிதம் என்ன?
Q16. 7, 11, 8, 12, 9, 13, 10, ….?
Q17. கொடுக்கப்பட்டுள்ள எண்களில் முப்படி உள்ள எண் எது?
Q18. இரண்டு எண்களின் விகிதம் 3 : 5, ஒவ்வொரு எண்ணையும் 10 அதிகரித்தால் அவற்றின் விகிதம் 5 : 7 எனில், அந்த எண்கள் எவை?
Q19. X = {10, 2, 14, 5, 8, 16} என்ற புள்ளி விவரத்தின் இடைநிலை மதிப்பு என்ன?
Q20. ஒரு தாய் மற்றும் மகளின் வயதுகளின் கூடுதல் 60. 5 வருடங்களுக்கு முன்பு தாயின் வயது மகளின் வயதைக் காட்டிலும் 6 மடங்கு அதிகம். எனில் தற்பொழுது தாய் மற்றும் மகளின் வயது முறையே…
Q21. L மற்றும் S என்பவை முறையே ஒரு புள்ளி விவரத்தின் மிக அதிக மற்றும் மிகக்குறைந்த மதிப்புகள் என்றால் வீச்சு அளவையை அளவிடும் வாய்ப்பாடு என்ன?
Q22. (10110)12 என்ற எண்ணுக்கு இணையான தசம் எண் யாது?
Q23. ரூ. 1360 - A, B மற்றும் C-க்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. Aக்கு B வாங்கியதில் 2/3 பங்கும், B க்கு C வாங்கியதில் 1/4 பங்கும் கிடைத்தது. எனில் B -ன் பங்கு என்ன?
Q24. பெட்ரோலின் விலை 30% உயர்ந்தால், பயன்படுத்துபவர், பெட்ரோல் செலவு, மாறாமலிருக்க தன் உபயோகத்தை எவ்வளவு குறைக்க வேண்டும்?
Q25. 100 பேனாக்களையும் 910 பென்சில்களையும் அதிகபட்சம் எத்தனை மாணவர்கள் இருந்தால் சமமாகப் பிரித்துக் கொடுக்கலாம்?
Q26. ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் தற்போது வயது விகிதம் 4:3. இந்த விகிதம் எதிர்காலத்தில் 9:7 ஆக மாறும். திருமணத்தின் போது இவர்களுடைய வயது விகிதம் 5:3 ஆக இருந்தது. எனில், அவர்களுக்கு திருமணம் ஆகி எத்தனை ஆண்டுகள் ஆனது?
Q27. கண்ணன் ஒரு பழைய மொபெட்டை ரூ. 80 ஆயிரத்துக்கு வாங்கினான். ரூ. 5 ஆயிரத்துக்கு பாகங்களை மாற்றினான். விளம்பரம், போக்குவரத்திற்கு ரூ. 1000 செலவழித்தான். அவன் 25 சதவிகித லாபத்தில் அந்த வண்டியை விற்றால் அவன் எவ்வளவு தொகைக்கு விற்றிருப்பான்?
Q28. சதீஷ் ஒரு வேலையை 80 நாட்களில் செய்து முடிப்பான். அவன் 10 நாள் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு சென்றுவிட்டான். ரமேஷ் மீதமுள்ள அந்த வேலையை 42 நாட்களில் செய்து முடித்துவிட்டான். எனில் இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் அந்த வேலையை செய்து முடிக்கலாம்?
Q29. ஒரு திருடனை காவலர் பார்க்கும்போது 100 மீட்டர் தொலைவில் இருந்தான். காவலர் விரட்டத் துவங்கியதும் திருடன் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் ஓட ஆரம்பித்தான். காவலர் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் துரத்தினார். காவலர் பிடிக்கும் முன் திருடன் எவ்வளவு தூரம் ஓடியிருப்பான்?
Q30. மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யும் ஒரு ரயில் 250 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 26 வினாடிகளில் கடக்கிறது. எனில், ரயிலின் நீளம் என்ன?
Q31. ஒரு கோளமும் கனசதுரமும் சமமான வெளிப்பரப்பைக் கொண்டுள்ளன. இரண்டிற்கும் இடையேயான கொள்ளளவு என்ன விகிதத்தில் இருக்கும்?
Q32. ஒரு வட்ட வடிவக் கூம்பின் உயரமும் ஆரமும் இரு மடங்கானால் அதன் கொள்ளளவு எத்தனை மடங்காகும்?
Q33. ஒரு மீட்டர் பக்கமுள்ள பெரிய கனசதுரப் பெட்டிக்குள் எத்தனை 10 செ.மீ. பக்கமுள்ள சிறிய கனசதுர டப்பாக்களை வைக்கலாம்?
Q34. ஒரு துண்டு துவைத்தவுடன் அதன் நீளத்தில் 20 சதவிகிதமும் அகலத்தில் 10 சதவிகிதமும் இழக்கிறது எனில் அந்த துண்டு இழந்த பரப்பளவு?
Q35. சுந்தர் ரூ. 27,000 த்தை கூட்டு வட்டிக்கு சிலரிடன் கொடுக்கிறார். A க்கு ஆண்டிற்கு 8%க்கும், B க்கு ஆண்டிற்கு 9%க்கும், கொடுத்தால் 2 ஆண்டுகள் கழித்து மொத்தமாக ரூ. 4818.30 வட்டி வருகிறது. எனில், A யிடம் கொடுத்த பணம் எவ்வளவு?
Q36. மணி என்பவர் வங்கியிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 12% தனிவட்டிக்கு கடன் வாங்கினார். 3 ஆண்டுகள் கழித்து ரூ. 5,400 வட்டியை கட்டினால் அவன் கடனாக வாங்கிய தொகை எவ்வளவு?
Q37. ஒரு மோட்டார் படகு, நிலையான நீரில் மணிக்கு 15 கி.மீ. செல்லும் நீரின் திசையில் மணிக்கு 30கி.மீ. வேகத்தில் சென்று 4 மணி நேரம் 30 நிமிடங்களில் எதிர்த்திசையில் பயணித்து வந்து சேருகிறது. எதிர் திசையில் படகின் வேகம் என்ன? (கி.மீ / மணி)
Q38. 16 பெரியவர்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார்கள். 24 சிறுவர்கள் அதே வேலையை 18 நாட்களில் முடிப்பார்கள். 12 பெரியவர்களும் 8 சிறுவர்களும் சேர்ந்து ஒரு வேலையை ஆரம்பித்து, 8 நாட்கள் கழித்து மேலும் 3 சிறுவர்கள் வந்து சேர்ந்தார்கள். அன்றிலிருந்து மீதமுள்ள வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
Q39. எந்த பின்னங்கள் ஏறுவரிசையில் உள்ளன?
Q40. 178 x 34 = 6052 எனில், 6052 + 178 = ?
Q41. பின்வரும் தொடரில் தவறாக இடம்பெற்றிருக்கும் எண் எது? 22, 33, 66, 99, 121, 279, 594
Q42. ரூபாய் 2,000 அசலானது 10% கூட்டு வட்டி விகிதத்தில் ரூபாய் 2,420 ஆகும் காலம் எவ்வளவு?
Q43. 45 என்பது 60ல் எத்தனை சதவீதம்?
Q44. ஒரு பொருள் ரூ. 240க்கு விற்கப்படுகிறது. வாங்கும் விலையில் 5ல் ஒரு பகுதி இலாபம் என்றால், அந்தப் பொருளின் வாங்கிய விலையானது எவ்வளவு?
Q45. ஐந்து ஆண்கள் சேர்ந்து ஒரு குழியைத் தோண்டுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி நேரம் என்றால், அதே வேலையை 12 மனிதர்கள் சேர்ந்து எத்தனை மணி நேரத்தில் செய்வார்கள்?
Q46. AB = 2 : 3, CB = 3 : 4 எனில் A : C என்பது எவ்வளவு?
Q47. ஒரு கோளத்தின் ஆரம் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் மேல்தளப்பரப்பு அதிகரிக்கும் விழுக்காடு எவ்வளவு?
Q48. ஜீவா என்பவர் 30 கிலோ அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ. 18.50க்கும், 20 கிலோ அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ. 23.50க்கும் வாங்கி வந்து, கலவையை 45% லாபம் அவருக்கு கிடைக்க வேண்டும் எனில் அவர் கிலோ எவ்வளவு ரூபாய்க்கு விற்க வேண்டும்?
Q49. ஒரு வியாபாரி தன்னிடமுள்ள 100 கிலோ சர்க்கரையில் ஒரு பகுதியை 7% லாபத்திற்கும் மீதியை 17% லாபத்திற்கும் விற்று மொத்தத்தில் 10% லாபம் அடைந்தால் 7% லாபத்தில் விற்ற சர்க்கரையின் அளவு எவ்வளவு?
Q50. கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தொடர்வரிசைகளில் பொருந்தாத எண்ணைக் கண்டுபிடிக்கவும்.