Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 2(3x+1) = 4(4-2) எனில் x -ன் மதிப்பு யாது?
Q2. ஒரு பொருளின் விற்ற விலை ரூ. 240, தள்ளுபடி ரூ. 28 எனில் குறித்த விலை என்ன?
Q3. வாங்கிய கடன், இதன் மீது வட்டி, மேலும் சில குறிப்பிட்ட கட்டணங்கள் சேர்ந்த மொத்த தொகையை செலுத்த வேண்டிய காலத்தை மாதங்களாக்கி, சமமாகப் பிரித்து ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
Q4. 0.243+0.14+1/23 இன் கூடுதல் என்ன?
Q5. 9,12,28,30 ஆல் தனித்தனியே வகுத்தால் ஒவ்வொரு முறையும் 3 மீதமாகும் மிகச்சிறிய எண்ணைக் காண்க?
Q6. சேகரின் ¼ பாகப்பணமும், அதனின் 1/6 பாகப்பணமும் சமம். இருவரின் பணமும் சேர்ந்து மொத்தம் 600 என்றால் அவர்களின் பணத்திற்கிடையே உள்ள வித்தியாசம் எவ்வளவு?
Q7. எந்த ஒரு தனிவட்டி வீதத்தில் ஒரு தொகை 30 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்?
Q8. 17.5 மீ உயரமுள்ள ஒரு கொடிக்கம்பம் 40.25 மீ நிழலை ஏற்படுத்துகிறது. அதே சூழலில் 28.75 மீ நீள நிழலை ஏற்படுத்தும் ஒரு கட்டிடத்தின் உயரம் எவ்வளவு?
Q9. இரு உருளைகளின் ஆரங்களின் விகிதம் 2:5 இவற்றின் உயரங்களின் விகிதம் 5:2 என்றால் இவற்றின் கன அளவுகளின் விகிதம் என்ன?
Q10. ஒரு கோளத்தின் பரப்பளவு 32 4π செமீ². அதன் கன அளவு எவ்வளவு?
Q11. 3/2 % 3/2 x 2 + 3/2 = ?
Q12. 22 x 22 - 2 x 12 + 12 x 12 = ?
Q13. ரவி வைத்திருந்தது ரூ. 120. அவன் அம்மா அவனுக்கு ரூ. 150 ம், அப்பா அம்மாவை விட ரூ. 120ம் அதிகம் கொடுத்தனர். ரவி ரூ. 23 வீதம் 4 நோட்டுகளை கொடுத்தான். இப்போது ரவியிடம் மீதமுள்ள தொகை எவ்வளவு?
Q14. ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருந்தனர். அதில் 2/5 பங்கு பெண்கள் எனில் ஆண்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q15. காஞ்சனா 10 லி 500 மி.லி. பழரசத்தினை 10 நண்பர்களுக்கு சமமாகப் பகிர்ந்து கொடுத்தார். எனில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அளவு யாது?
Q16. கொடுக்கப்பட்டுள்ள பின்னங்களில் மிகப்பெரியது எது?
Q17. ஒரு வட்டத்திற்குள் அதன் ஆரத்தை பக்கமாகக் கொண்டு எவ்வகைப் பலகோணம் வரைய முடியும்?
Q18. பரப்பளவு 800 செ.மீ², குத்துயரம் 20 செ.மீ கொண்ட இணைகரத்தின் அடிப்பக்கம் எவ்வளவு?
Q19. ஒரு குறுக்கு வெடி இரு கோடுகளை வெட்டும்போது ஏற்படும் கோணங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q20. ஒரு சதுரத்தின் பக்கம் 25% அதிகரித்தால் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
Q21. 88 கி.மீ. பயணத்தில் ஒரு சக்கரம் 1000 முறை சுற்றுகிறது எனில் சக்கரத்தின் ஆரம் எவ்வளவு?
Q22. ஒரு வண்டிச் சக்கரத்தின் விட்டம் 1.4 மீ சக்கரம் 5 வினாடிகளுக்கு 10 சுற்றுகள் வீதம் சுற்றினால் வாகனத்தின் வேகம் மணிக்கு எவ்வளவு?
Q23. ஒருவரின் சம்பளம் முதலில் 40% குறைக்கப்பட்டு பின்னர் 50% உயர்த்தப்பட்டால் அவருக்கு ஏற்படும் இழப்பு எத்தனை சதவீதம்?
Q24. ரூ. 50000 அசலுக்கு ஆண்டு கூட்டுவட்டி 16% என்றால் 2 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டி எவ்வளவு?
Q25. மணிக்கு 48கி.மீ. வேகத்தில் செல்லும் கார் 10 மணி நேரத்தில் இலக்கை அடைகிறது. இலக்கை 8 மணி நேரத்தில் அடைய எத்தனை கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும்?
Q26. 7 : x = 175 : 225 எனில் x -ன் மதிப்பு யாது?
Q27. 165 + 215 ஐ வகுக்கக்கூடிய எண் எது?
Q28. (34)1/5 க்குச் சமமானது எது?
Q29. 3 + √2/3-√2 = a+b√2 எனில் a ன் மதிப்பு என்ன?
Q30. a + b + c = 0 எனில் a³ + b³ + c³ ன் மதிப்பு என்ன?
Q31. 249² - 248² ன் மதிப்பு என்ன?
Q32. ஏறு அல்லது இறங்கு வரிசையில் அமைக்கப்பட்ட 2n உறுப்புகளின் இடைநிலை என்ன?
Q33. இரு கோண மதிப்புகள் (30° - ɑ) மற்றும் (125° - 2α) இரண்டும் ஒன்று மற்றொன்றின் மிகைநிரப்புக் கோணம் எனில் α -ன் மதிப்பு என்ன?
Q34. ஒரு வகுப்பிலுள்ள 54 மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ. 50 கொடுத்து பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்க திட்டமிடுகின்றனர். இவர்களில் 9 மாணவர்கள் ரூ. 60 வழங்க இயலாத நிலையில் அவர்கள் தங்களது திட்டத்தை நிறைவேற்ற கூடுதலாக பங்களிப்பு செய்ய வேண்டிய தொகை எவ்வளவு?
Q35. 16 எண்களின் கூட்டுசராசரி 18. இவற்றுள் 33 என்ற எண் நீக்கப்படுகிறது. எனில் மீதமுள்ள 15 எண்களின் கூட்டுசராசரி எவ்வளவு?
Q36. ஒரு கூம்பு ஒன்றின் ஆரமும், உயரமும் 20% அதிகரிக்கப்படும்போது, கூம்பின் கனஅளவு அதிகரிக்கப்படும் அளவு எவ்வளவு?
Q37. ஒரு சதுரம் மற்றும் சமபக்க முக்கோணம் சம அளவு சுற்றளவினைக் கொண்டுள்ளன. சதுரத்தின் மூலைவிட்டம் 12√2 செ.மீ. எனில் முக்கோணத்தின் பரப்பு, செ.மீ² -ல் எவ்வளவு?
Q38. 6x² - x - 5 ன் காரணிகளுள் ஒன்று எது?
Q39. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது மையப்போக்கு அளவு அல்ல?
Q40. முதல் 20 இயல்எண்களிலிருந்து ஒரு முழு எண் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த எண் பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
Q41. இருபது விவரங்களின் சராசரி 15:8. இவ்விவரங்களுடன் புதிய மதிப்பினை சேர்க்கும்போது சராசரி 0.4 அதிகரிக்கிறது. எனில் சேர்க்கப்பட்ட புதிய மதிப்பு எவ்வளவு?
Q42. ஒரு கோளத்தின் ஆரம் 10% அதிகரிக்கும்போது கோளத்தின் புறப்பரப்பு அதிகரிக்கும் சதவீதம் எவ்வளவு?
Q43. சரியான கூற்று எது? 1. 9261 ன் கனமூலம் 21 2. ஒரு எண்ணின் இறுதியில் மூன்று பூச்சியங்கள் இருக்கும்.
Q44. ஒரு விகிதமுறு பின்னத்தில் தொகுதியானது பகுதியினை விட 3 அதிகமாக உள்ளது. பகுதியினை 7 அதிகரித்தும் தொகுதியில் 2 குறைக்கப்படும்போது பின்னத்தின் மதிப்பு 2 என மாறுகிறது. எனில் பின்னத்தின் மதிப்பு என்ன?
Q45. 6 செ.மீ. பக்க அளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் உச்சிகளை வெட்டுவதன் மூலம் ஒரு ஒழுங்கு அறுகோணம் கிடைக்கிறது. எனில் ஒழுங்கு அறுங்கோணத்தின் பரப்பு மற்றும் சுற்றளவு எவ்வளவு?
Q46. ஒரு சரிவகத்தின் இரு இணைபக்கங்களின் நீளம் 7 செ.மீ மற்றும் 5 செ.மீ. இணைபக்கங்களுக்கு இடைப்பட்ட செங்குத்து தொலைவு 4 செ.மீ. எனில் சரிவகத்தின் பரப்பு என்ன?
Q47. ஒரு இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்களின் நீளம் 5 செ.மீ, 8 செ.மீ மற்றும் பக்கங்களின் வழியே செல்லும் மூலைவிட்டத்தின் நீளம் 10 செ.மீ. எனில் இணைகரத்தின் பரப்பு என்ன?
Q48. ஒரு வட்டத்திலிருந்து மிகப்பெரிய சதுரம் வெட்டி எடுக்கப்படுவதினால் வட்டத்தில் ஏற்படும் பரப்பு இழப்பின் சதவீதம் எவ்வளவு?
Q49. ஒரு வகுப்பிலுள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 166 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது. தகவல்களை சரிபார்க்கும்போது ஒரு மதிப்பு 150க்கு பதிலாக 160 செ.மீ. என்று குறிப்பிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனில் சரியான சராசரி உயரம் எவ்வளவு?
Q50. ஒரு சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் 7.5 செ.மீ, 12 செ.மீ எனில் அதன் பரப்பு எவ்வளவு?