Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒரு கட்டிடத்தில் 10 உருளைவடிவிலான தூண்கள் உள்ளது. ஒரு தூணின் ஆரம் 28 செ.மீ. மற்றும் உயரம் 4 மீ எனில் தூண்களுக்கு வண்ணம் பூச சதுரமீட்டருக்கு ரூ. 8 ஆகும் எனில் செலவாகும் தொகை எவ்வளவு?
Q2. ஒரு வட்ட வடிவிலான வயலின் சுற்றளவு 44 மீ. ஒரு பசு வட்டத்தின் மையத்தில் நீளமான கயிற்றினால் கட்டப்பட்டுள்ளது. பசுவானது வயல் பரப்பு முழுவதையும் மேய வேண்டுமென்றால் தேவைப்படும் கயிற்றின் சிறும நீளம் என்ன?
Q3. வட்டவடிவிலான தாமிரக்கம்பியின் ஆரம் 35 செ.மீ. இது ஒரு சதுரவடிவில் வளைக்கப்படுகிறது எனில் சதுரத்தின் பக்கம் எவ்வளவு?
Q4. தவறான கூற்று எது?
Q5. சரியான கூற்று எது? 1. இணைகரத்திற்கு நேர்கோட்டு சமச்சீர் தன்மை இல்லை. 2. ஒரு ஐங்கோணத்திற்கு 5 சமச்சீர் கோடுகள் உள்ளன. 3. ஒரு வட்டத்திற்கு எண்ணற்ற சமச்சீர் கோடுகள் உள்ளன.
Q6. ஒரு கோணத்தின் நிரப்பியானது அதன் மிகை நிரப்பியின் ஆறில் ஒரு பங்கு எனில், அக்கோண மதிப்பு என்ன?
Q7. ஒருவரின் வருமானத்தில் 5% இரண்டாமவரின் வருமானத்தின் 15%க்கு சமம். இரண்டாமவரின் வருமானத்தின் 10% மூன்றாமவரின் 30%க்கு சமம். மூன்றாமவரின் வருமானம் ரூ. 2000 எனில், முதல், இரண்டாம், மூன்றாமவர்களின் வருமானங்களின் மொத்த கூடுதல் என்ன?
Q8. ஒரு இயந்திரத்தின் விலை இரு கடைகளிலும் ரூ. 700. முதல் கடையில் 30% மற்றும் 6% தொடர் தள்ளுபடியும், இரண்டாவது கடையில் 20%, 16% தொடர் தள்ளுபடியும் தரப்படுகின்றன. எனில் இரண்டு கடைகளிலும் தரப்படும் தள்ளுபடிகளின் வேறுபாடு என்ன?
Q9. தனிவட்டி வீதத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை இரண்டாண்டுகளில் ரூ. 5184 எனவும், மூன்றாண்டுகளில் ரூ. 5832 எனவும் மாறுகிறது. எனில் முதலீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு?
Q10. சந்திரன் ஒரு வானொலிப் பெட்டியினை அதன் விலையில் ¾ பங்கில் வாங்கி 30% இலாபத்திற்கு விற்கிறான் எனில் இலாப சதவீதம் என்ன?
Q11. ஒரு மாணவர் ஒரு தேர்வில் 20% மதிப்பெண்களை பெற்று 30 மதிப்பெண்கள் குறைவான காரணத்தினால் தோல்வியடைகிறார். மற்றொரு மாணவர் 32% மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி மதிப்பெண்ணை விட 42 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சியடைகிறார் எனில் தேர்ச்சிக்கு தேவையான மதிப்பெண் சதவீதம் என்ன?
Q12. r1 மற்றும் r2 ஆரம் கொண்ட இரு வட்டங்களின் மையங்களுக்கு இடைப்பட்ட தொலைவு d எனில் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எது சரியானது?
Q13. 25 மாணவர்களில் 72% பேர் கணிதத்தில் திறமையானவர்கள். எனில் கணிதத்தில் திறமையற்றோர் எத்தனை பேர்?
Q14. விற்பனை வரியுடன் ஒரு குளிர்சாதன பெட்டியின் மொத்த விலை ரூ. 14,500. குளிர்சாதனபெட்டியின் விலை மட்டும் ரூ. 13,050 எனில் விற்பனை வரி விகிதம் எவ்வளவு?
Q15. ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கமானது மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என்பது …
Q16. ஒரு பொருளை ரூ. 480க்கு விற்கும்போது 20% லாபம் கிடைக்கிறது. எனில் அதே பொருளை ரூ. 580க்கு விற்றால் கிடைக்கும் லாப சதவீதம் எவ்வளவு?
Q17. ஒரு குறிப்பிட்ட தனி வட்டிவீதத்தில், ரூ. 800க்கு 3 ஆண்டு முடிவில் ரூ.920 கிடைக்கிறது. எனில் தனிவட்டி வீதத்தை 3% அதிகரித்தால் எவ்வளவு ரூபாய் கிடைக்கும்?
Q18. ஒரு பின்னத்தில் தொகுதியிலும், பகுதியில் எண் 1 ஐக் கூட்டும்போது அதன் மதிப்பு 2/3. இதேபோல் தொகுதியிலும், பகுதியிலும் 1ஐக் கழிக்கும்போது அதன் மதிப்பு 1/2 எனில், அந்த பின்ன எண் யாது?
Q19. 9, 18, 36 ன் மீ.பெ.வ. காண்க.
Q20. (-1)-5 (-2)6 = ?
Q21. கணித மேதை இராமானுஜத்தின் எந்த கோட்பாடு அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது?
Q22. 100ஐ எந்த எண்ணால் பெருக்க அவை முழு கன எண்ணாகும்?
Q23. 704ஐ எந்த சிறிய எண்ணால் வகுக்க, அவை முழு கன எண்ணாகும்?
Q24. ஒரு எண்ணை 4ஆல் வகுத்து அதனுடன் 6 ஐக் கூட்டக் கிடைப்பது 10. எனில், அந்த எண்ணைக் காண்க.
Q25. ஒரு செவ்வக வடிவ நிலம் 20 மீ நீளம் மற்றும் 14 மீ அகலம் கொண்டது. அதைச் சுற்றி வெளிப்புறத்தில் அமைந்துள்ள சீரான அகலமுள்ள பாதையின் பரப்பு 111 ச.மீ. எனில், பாதையின் அகலம் என்ன?
Q26. ஒரு செவ்வகத்தின் சுற்றளவு 60 செ.மீ., அதன் அகலம் 12 செ.மீ., எனில் செவ்வகத்தின் பரப்பளவு என்ன?
Q27. கொடுக்கப்பட்டுள்ள எண்களின் பெரிய எண்ணுக்கும், சிறிய எண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காண்க. 5/8, 21/35, 9/16, 9/7
Q28. 3600 என்ற எண்ணுடன், எந்த எண்ணை வைத்து வகுத்தால், அது ஒரு கனமூலமாக மாறும்?
Q29. திருச்சி நகரின் மக்கள்தொகை ஆண்டுக்கு 15% உயர்கிறது என வைத்துக்கொள்வோம். எனில் 1995ல் 8000 பேராக உள்ள நகரின் மக்கள்தொகை, 1997ல் எவ்வளவாக உயரும்?
Q30. a : b = 5 : 7 மற்றும் b : c = 6 : 11 எனில் a : b : c ஆகியவற்றின் விகிதம் என்ன?
Q31. ஒரு மளிகை வியாபாரியின் 5 மாத விற்பனை ரூ. 6435, ரூ. 6927, ரூ. 6855, ரூ. 7230 மற்றும் ரூ. 6562. 6 மாத முடிவில் அவரது சராசரி விற்பனை ரூ. 6500 எனில், அவர் 6வது மாதம் எவ்வலவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்?
Q32. 3 ஆண்டுகளுக்கு முன் கணவர், மனைவி, குழந்தை ஆகிய மூவரின் சராசரி வயது 27. அதேபோல, 5 ஆண்டுகளுக்கு முன் மனைவி மற்றும் குழந்தையின் சராசரி வயது 20. எனில், கணவரின் தற்போதைய வயது என்ன?
Q33. ஒரு ரயில்வண்டி 60 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 20 வினாடிகளிலும், பிளாட்பாரத்தில் நிற்கும் ஒரு மனிதனை 12 வினாடிகளிலும் கடக்கிறது எனில், அதன் வேகம் என்ன?
Q34. கணித மேதைகளின் சக்ரவர்த்தி - என அழைக்கப்படுபவர் யார்?
Q35. தவறான கூற்று எது? 1. இணையற்ற இரு நேர்கோடுகள் ஒரு புள்ளியில் வெட்டிக்கொள்ளும். 2. இரு நேர்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் செங்கோணம் எனில் அவை செங்குத்துக்கோடுகள். 3. கதிர் என்பது ஒரு தொடக்கப் புள்ளியைக் கொண்ட கோடு. 4. வெட்டிக்கொள்ளாத இரு நேர்கோடுகள், கதிர் எனப்படும்.
Q36. 70 பேர் கொண்ட வகுப்பில் 60% மாணவர்கள் எனில், மாணவிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q37. நட்ட சதவீதம் என்பது ….
Q38. ஒரு சரிவகத்தின் பரப்பு 100 ச.செ.மீ, இரு இணைபக்கங்களின் நீளம் 15 செ.மீ மற்றும் 10 செ.மீ. எனில் இணைபக்கங்களுக்கு இடைப்பட்ட தொலைவு எவ்வளவு?
Q39. ஒரு எண்ணின் நான்கு மடங்கில், மூன்றில் ஒரு பாகம் என்பது எது?
Q40. தவறான கூற்று எது? 1. ஒரு முக்கோணத்தின் எந்த இரு பக்க அளவுகளின் கூடுதலும் மூன்றாவது பக்க அளவை விட அதிகம். 2. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூட்டு மதிப்பு 180°. 3. ஒரு முக்கோணத்தின் கோணங்கள் வெவ்வேறானவை எனில், பக்க அளவுகளும் வெவ்வேறானவை. 4. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் சமம் எனில், மூன்று பக்க அளவுகளும் சமம்.
Q41. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் லீப் ஆண்டு எது? 1. 1400 2. 1993 3. 2800 4. 2008
Q42. 40° ன் மிகைநிரப்புக் கோணம் எது?
Q43. முழுக்கள் என குறிக்கப்படுவது எது?
Q44. சரியான கூற்று எது? 1. ஒற்றைப்படை எண்ணிக்கையில் பூச்சியங்களைக் கொண்டு முடியும் எண்கள் முழுவர்க்கமல்ல. 2. ஒற்றை எண்களின் வர்க்கங்கள் ஒற்றை எண்களே.
Q45. 4³ + 5³ + 6³ -ஐ மீதியின்றி வகுக்கும் எண் எது?
Q46. இரண்டு எண்களின் வித்தியாசம் 66. அவற்றின் விகிதம் 2 : 5 எனில் அவ்வெண்கள் எவை?
Q47. கலா மற்றும் மாலா வின் தற்போதைய வயதுகளின் தகவு 4 : 5. இன்றிலிருந்து 8 ஆண்டுகளுக்கு பின் அவர்களின் வயதுகளின் விகிதம் 5 : 6 எனில் கலா வின் தற்போதைய வயது என்ன?
Q48. இயற்கணித கோவை √3 ன் படி…
Q49. 12, 15, 11, 13, 18, 11, 13, 12, 13 என்ற விவரங்களின் இடைநிலை மற்றும் முகட்டு மதிப்பின் கூடுதல் என்ன?
Q50. கொடுக்கப்படுள்ளவற்றில் தவறானது எது?