Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 9 செ.மீ. ஆரமுள்ள கோளக்குண்டு ஒன்று உருக்கப்பட்டு 2 மி.மீ. விட்டம் கொண்ட கம்பியாக நீட்டப்படுகிறது. எனில் நீட்டப்பட்ட கம்பியின் நீளம் (மீட்டரில்) எவ்வளவு?
Q2. கூம்பு ஒன்றின் உயரமும் விட்டமும் 100% அதிகரிக்கப்படுகிறது எனில் உருவாகும் பெரிய கூம்பின் கனஅளவு தொடக்க கூம்பின் கனஅளவில் எத்தனை மடங்கு?
Q3. ஒரு நாற்கர வடிவ வயலின் பரப்பு 486 சதுரமீட்டர். வயலின் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 36மீ மற்றும் குத்துயரங்களின் தகவு 4:5 என்ற தகவில் உள்ளன. எனில் குத்துயரங்களின் நீளங்கள் முறையே…
Q4. 18 செ.மீ. ஆரமுள்ள திண்மக் கோளமானது உருக்கப்பட்டு மூன்று சிறிய வெவ்வேரு அளவுள்ள கோளங்களாக வார்க்கப்படுகின்றது. முதல் இரண்டு கோளங்களின் ஆரங்கள் முறையே 2 செ.மீ. 12 செ.மீ எனில் மூன்றாவது கோளத்தின் ஆரம் எவ்வளவு?
Q5. சரியானக் கூற்றினைத் தேர்க :
Q6. சரியானக் கூற்றினைத் தேர்க :
Q7. x/3, x, x/4, மற்றும் x/5 விவரங்களின் இடைநிலை 8 எனில் x ன் மதிப்பு என்ன?
Q8. 42, 45, 47, 49, 52, 65 விவரங்களின் மையப்போக்கு அளவைகளின் (இடைநிலை, முகடு, சராசரி) சராசரி என்ன?
Q9. உட்புறமாக தொடுகின்ற இரு வட்டங்களின் பரப்புகளின் கூடுதல் 116 செ.மீ² மற்றும் அவைகளின் மையங்களுக்கு இடைப்பட்ட தொலைவு 6 செ.மீ எனில் அவ்வட்டங்களின் ஆரங்கள் எவ்வளவு?
Q10. D, E, F என்பன முக்கோணம் A B C -ன் பக்கங்கள் BC, AC மற்றும் AB மையப்புள்ளிகள் என்க. EF = 3 செ.மீ, FD = 4 செ.மீ மற்றும் AB - 10 செ.மீ. எனில், DE, BC, CA - ன் மதிப்புகள் முறையே …
Q11. ஒரு தேர்வு எழுதிய 100 மாணவர்களின் மதிப்பெண்கள் தரப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து (1) 40% குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் (2) 60% விட அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கேட்கப்படுகிறது எனில் நீங்கள் தயார் செய்ய வேண்டியது என்ன?
Q12. ஒரு குறிப்பிட்ட விவரங்களின் கூட்டுசராசரி 34. விவரங்கள் ஒவ்வொன்றுடனும் ஒரு மாறாத எண் கூட்டப்படும்போது விவரங்களின் கூட்டுசராசரி 43 என மாறுகிறது. எனில் சேர்க்கப்பட்ட மாறாத எண் எது?
Q13. ஹெர்பட்டின் கற்பித்தல் முறையில் இறுதி படி எது?
Q14. எகிப்தியர்கள் 10000 ஐ குறிக்க பயன்படுத்திய குறியீடு எது?
Q15. பொருத்துக : அ. ஆரியபட்டர் 1. லீலாவதி ஆ. மகாவீரர் 2. இந்தியாவின் கணிதகழக வெளியீடு இ. பாஸ்கரர் 3. ஆரியபாத்தியா ஈ. இராமானுஜம் 4. சாரசங்கிரிகா
Q16. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களில் இருவர் 100 மதிப்பெண்கள் பெறுகின்றனர். மேலும் மூவர் சுழி மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்களின் சராசரி மதிப்பெண் 40 எனில் வகுப்பு மாணவர்களின் சராசரி மதிப்பெண் என்ன?
Q17. கண்டறி முறையை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
Q18. ஹெர்பட்டின் செயல்முறை நிலைக்கு ஒப்பான கணித கற்பித்தல் முறை எது?
Q19. 24 மீ நீளமுள்ள ஒரு நாடாவை 3:2:7 என்ற விகிதத்தில் மூன்று துண்டுகளாக வெட்டினால், கிடைக்கும் ஒவ்வொரு துண்டின் நீளம் முறையே …
Q20. ஒரு கடையிலிருந்து மாலா சில பென்சில்களையும், அழிப்பான்காளையும், வரைபடத்தாள்களையும் வாங்கினாள். பென்சில்களின் எண்ணிக்கைக்கும், அழிப்பான்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதமும், அழிப்பான்களின் எண்ணிக்கைக்கும், வரைபடத்தாள்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதமும் சமம். மாலா 10 பென்சில்களையும், 40 வரைபடத்தாள்களையும் வைத்திருந்தாள் எனில் அழிப்பான்களின் எண்ணிக்கை என்ன?
Q21. பின்வருவனவற்றில் எது விகித சமத்தை ஏற்படுத்தும்?
Q22. ஒரு மகிழுந்து 4 மணி நேரத்தில் 350 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. எனில் அதே வேகத்தில் 6½ மணி நேரத்தில் கடக்கும் தொலைவு எவ்வளவு?
Q23. 300 பேர் கலந்து கொள்ளும் ஒரு திருமண விருந்திற்கு 60 கி.கி. காய்கறிகள் தேவைப்படுகின்றன. திருமணத்திற்கு 500 பேர் கலந்துகொண்டால் தேவைப்படும் காய்கறிகளின் அளவு என்ன?
Q24. சக்ஸஸ் பயிற்சி நிறுவனத்தால் தரப்படும் பயிற்சி புத்தகத்தில் பக்கத்திற்கு 30 வரிகள் உள்ளபோது 70 பக்கங்களைக் கொண்டுள்ளது. பக்கத்திற்கு 20 வரிகள் மட்டுமே தரப்பட்டிருந்தால் பயிற்சி புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்?
Q25. பின்வருவனவற்றில் எது நேர்மாறல்?
Q26. 14 அச்சுக்கோர்ப்பவர்கள் 70 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை 5 மணி நேரத்தில் அச்சுக்கோர்ப்பார்கள். எனில் 100 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை 9 மணி நேரத்தில் அச்சுக்கோர்க்க தேவைப்படும் அச்சுக்கோர்ப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q27. 35 மாணவர்கள் கொண்ட வகுப்பில், ஒரு குறிப்பிட்ட நாளில் 7 மாணவர்கள் வகுப்பிற்கு வரவில்லை எனில் வகுப்பிற்கு வந்திருந்த மாணவர்களின் சதவீதம் என்ன?
Q28. பின்வருவனவற்றில் சரியானது எது?
Q29. ஒரு பழ வியாபாரி 8 பெட்டிகள் ஆப்பிள்களை ஒவ்வொன்றும் ரூ. 150க்கு வாங்கினால், அவற்றுள் ஒரு பெட்டியில் உள்ள ஆப்பிள்கள் கெட்டு விட்டதினால் மீதமுள்ள பெட்டிகளை ஒவ்வொன்றும் ரூ. 195க்கு விற்கிறார் எனில் அவருடைய இலாப (ஆ) நட்ட சதவீதம் என்ன?
Q30. 16 நோட்டுப்புத்தகங்களின் அடக்கவிலை 12 நோட்டுப்புத்தகங்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப சதவீதம் என்ன?
Q31. கோபால் ரூ. 38,000 மதிப்பில் ஒரு கணினியையும், ரூ. 8,000 மதிப்பிலான அச்சு இயந்திரத்தையும் வாங்குகிறார். விற்பனை வரி சதவீதம் 7 எனில் சேகர் செலுத்திய மொத்த தொகை என்ன?
Q32. ரூ. 3,500 குறிக்கப்பட்ட ஒரு குளிரூட்டியினை ஒருவர் ரூ. 2,800 க்கு வாங்குகிறார். எனில் அவருக்குக் கிடைத்த தள்ளுபடியின் சதவீதம் என்ன?
Q33. ஆண்டிற்கு 8% வட்டிவீதத்தில், 1 ஆண்டு 6 மாத முடிவில் ரூ. 7500க்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு?
Q34. ஒரு குறிப்பிட்ட தொகையானது, ஆண்டிற்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகத் தேவைப்படும் ஆண்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q35. ஒரு குறிப்பிட்ட அசல் தொகையானது ஆண்டிற்கு 10% வட்டி வீதத்தில் 2½ ஆண்டுகளில் ரூ. 1250 என்றாகிறது எனில் செலுத்தப்பட்ட அசலின் மதிப்பு என்ன?
Q36. ரூ. 2400க்கு ஆண்டிற்கு 5% வட்டி வீதத்தில் இரண்டாண்டுகளில் தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
Q37. 0% நிதி உதவித்திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு 2% சேவைக்கட்டணத்துடன் 4 அமத சம தவணைகளை முன்னர் செலுத்தும் வகையில் ரூ. 19,200 மதிப்புடைய எல்.சி.டி. தொலைக்காட்சியினை வாங்குபவர் செலுத்தவேண்டிய சம மாத தவணை மற்றும் முன்பணம் முறையே…
Q38. சாந்தி ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ரூ.200 ஐ அஞ்சலக தொடர்வைப்புத் திட்டத்தில் ஆண்டிற்கு 6% வட்டிவீதத்தில் 5 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தால் அவளுக்குக் கிடைக்கும் முதிர்வுத்தொகை எவ்வளவு?
Q39. வேலையில்லாத் திண்டாட்டத்தினால் ஒரு கிராமத்திலுள்ள மக்கள் அண்மையிலுள்ள நகரத்திற்கு இடம்பெயர்ந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அக்கிராமத்தின் மக்கள்தொகை 6000 மற்றும் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஆண்டிற்கு 5% எனில் தற்போதைய மக்கள்தொகை என்ன?
Q40. 80 மீ நீளத்தின் 45% எவ்வளவு?
Q41. ஏறுவரிசையில் அமைக்கப்பட்ட 12, 11, 18, 13, x+2+4, 41, 35, 32, 45 விவரங்களின் இடைநிலை 24 எனில் x-ன் மதிப்பு யாது?
Q42. ஒரு நிகழ்வெண் செவ்வக வரைபடத்தில் உள்ள செவ்வகங்களின் மேல் மட்டங்களின் மையப்புள்ளிகளை நேர்கோட்டினால் இணைக்கக் கிடைக்கும் வரைபடம் எது?
Q43. ஒரு நிகழ்வெண் செவ்வக வரைபடத்தில் உள்ள செவ்வகங்களின் பரப்புகள் எதற்கு நேர்தகவில் அமையும்?
Q44. ஒரு சாய்சதுரத்தின் பக்கத்தின் நீளம் 5மீ அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 8 மீ எனில் அதன் மற்றொரு மூலைவிட்டத்தின் நீளம் என்ன?
Q45. x/y=3/5 எனில் (5x+2y)/(5x-2y) என்பது எதற்குச் சமம்?
Q46. 2400 ச.மீ நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 3600 ச.மீ. நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை?
Q47. அரைவட்ட வடிவிலான பூங்காவின் வேலியாகப் பயன்படுத்தப்பட்ட சங்கிலியின் நீளம் 72 மீ எனில் பூங்காவின் பரப்பளவு என்ன?
Q48. கொடுக்கப்பட்டுள்ள எண்களில் வீச்சு என்ன? 25, 26, 78, 43, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35
Q49. 4 மதிப்புகள் சராசரி 20 ஆகும். ஒரு எண் 4 மதிப்புகளிலும் கூட்டப்பட்ட பின் சராசரி 22 எனில், கூட்டப்பட்ட எண் என்ன?
Q50. x + 1 / x = 2 எனில், x³ + 1 / x³ -ன் மதிப்பு என்ன?