Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒரு கூம்பின் கனஅளவு 20 க.செ.மீ. எனில், அதே ஆரம், உயரத்தை உடைய உருளையின் கன அளவு எவ்வளவு?
Q2. இரண்டு கோளங்களின் வளைபரப்புகளின் விகிதம் 9:25 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம் என்ன?
Q3. ஒரு உருளையின் ஆரம் மற்றும் உயரத்தின் விகிதம் 5:7 மேலும் அதன் கன அளவு 4400 க.செ.மீ. எனில் அவ்வுருளையின் ஆரம் எவ்வளவு?
Q4. X குறியை கூட்டல் என்றும், % குறியை கழித்தல் என்றும், + குறியை பெருக்கல் என்றும், ― குறியை வகுத்தல் என்றும் மாற்றினால், பின்வரும் வினாவின் மதிப்பு என்ன? 20 X 8 % 8―4 + 2 = ?
Q5. நாளை மறு நாள் ஞாயிற்றுக் கிழமை எனில் நேற்றுக்கு முந்தைய நாளைய நாளின் கிழமை என்ன?
Q6. உன் புத்தக அடுக்கில் இரண்டு ஓரங்களுக்கு இடையே நீ மிக விரும்பும் புதிர் விடை காணும் 5 நூல்கள் உள்ளன. நீ இப்புதிர் புத்தகங்கள் 5 எண்ணையும் எப்படியெல்லாம் மாற்றியமைக்க முடியுமோ அப்படி அமைக்க ஒரு நிமிட்த்தில் ஒரு புத்தகத்தை மாற்றியமைப்பது என மாற்றுகிறாய். அப்படியானால் இவற்றை இயன்ற வகையெல்லாம் மாற்றியமைக்க நீ அடுக்கும் காலம் எவ்வளவு?
Q7. A, B மற்றும் C என்பவர்கள் ஒரு வேலையை முடிக்க முறையே 24, 6, 12 நாட்கள் எடுத்துக் கொள்வர் எனில் அதே வேலையை அவர்கள் அனைவரும் இணைந்து செய்து முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும்?
Q8. ஒரு சாய்சதுரத்தின் பக்கத்தின் நீளம் 5 மீ, அதன் மூலை விட்ட்த்தின் நீளம் 8 மீ எனில் அதன் மற்றொரு மூலை விட்ட்த்தின் நீளம் யாது?
Q9. 2400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பார். 3600 ச.மீ. நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை?
Q10. அரைவட்ட வடிவிலான பூங்காவின் வேலியாகப் பயன்படுத்தப்பட்ட சங்கிலியின் நீளம் 72 மீ, எனில் பூங்காவின் பரப்பளவு யாது?
Q11. கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களின் வீச்சு என்ன? 25, 67, 78, 43, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35
Q12. 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
Q13. 4 மதிப்புகளின் சராசரி 20 ஆகும். ஒரு எண் 4 மதிப்புகளிலும் கூட்டப்பட்ட பின் சராசரி 22 எனில் கூட்டப்பட்ட எண் என்ன?
Q14. x + 1/x = 2 எனில் x³ + 1/x³ ன் மதிப்பு என்ன?
Q15. 4/9, 2/5, 6/8, 2/5 - ன் மீ.பொ.வ. என்ன?
Q16. 4% ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ. 1632 கூட்டு வட்டி தரும் என்றால் அசலைக் கணக்கிடவும்.
Q17. 5 ரூபாய் 80 பைசாக்களில் 20 பைசாக்கள் என்பது எத்தனை சதவீதம்?
Q18. ரூ. 782 மூன்று பாகங்களாக 1/2 : 2/3 : 3/4 விகித்த்தில் பிரிக்கப்பட்டால் முதல் பாகத்தின் மதிப்பு என்ன?
Q19. உறுதியான நிகழ்ச்சி மற்றும் இயலா நிகழ்ச்சியின் நிகழ்தகவு என்ன?
Q20. இரு சதுரங்களின் பரப்பளவு 9:1 என்ற விகித்த்தில் இருப்பின், அவற்றின் சுற்றளவுகள் எந்த விகித த்தில் இருக்கும்?
Q21. 2, 6, 12, 20, 30...... என்ற வரிசையில் 7ம் உறுப்பு எது?
Q22. 1/3, 5/6, 2/9, 4/27 ஆகியவற்றின் மீச்சிறு பொதுமடங்கு எது?
Q23. ஒரு பசுவின் அடக்கவிலை ரூ. 6,000. அதன் மீது 30% லாபம் பெற வேண்டுமெனில், அதன் விற்பனை விலை என்ன?
Q24. (12)₁₀ என்பதன் இரண்டடிமான மதிப்பு .......................... ஆகும்.
Q25. முதல் 5 பகா எண்களின் கூட்டு சராசரி என்ன?
Q26. 7, 5, 13, x மற்றும் a ஆகியவற்றின் சராசரி 10 எனில் x இன் மதிப்பு காண்க.
Q27. 28%, 2.8%, 2/9%, 0.25 - இவற்றில் எது பெரியது?
Q28. (3x+2y):(3x -2y) = 5:2 எனில் x : y காண்க:
Q29. 8 - 5x4 = 44 மற்றும் 15 -3x3 = 48 எனில் 16 - 4x5 = ?
Q30. ஒரு வீட்டின் விலையானது ரூ. 15 இலட்சத்திலிருந்து ரூ. 12 இலட்சமாக குறைகிறது. எனில் அதன் குறைந்த சதவீத த்தைக் காண்க?
Q31. இராஜேஷ் என்பவர் ரூ. 80க்கு ஒரு பேனாவை வாங்கினார். அதை தன் நண்பரிடம் 5% இலாபம் வைத்து விற்க நினைக்கிறார் எனில், அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
Q32. ஒரு கடைக்கார ர் ரூ. 540க்கு ஒரு கைக்கடிகாரத்தை விற்கும்போது 5% இலாபம் அடைகிறார். எனில் அக்கைக்கடிகாரத்தின் அடக்கவிலையைக் காண்க.
Q33. இராஜா என்பவர் ஒரு டிவி -ஐ ரூ. 15200க்கு வாங்கி 20% நட்டத்தில் விற்கிறார் எனில் அவரின் விற்ற விலையைக் காண்க.
Q34. ஒரு ஸ்கூட்டியை ரூ. 13600 விற்கும் பொழுது 15% நட்டம் ஏற்படுகிறது எனில் அதன் அடக்க விலையைக் காண்க.
Q35. ஒரு பொருளின் அடக்க விலை ரூ. 7282 மற்றும் அதன் இலாபம் ரூ. 208 எனில் விற்ற விலையைக் காண்க.
Q36. ஒரு பொருளின் அடக்க விலை ரூ. 320 மற்றும் விற்ற விலை ரூ. 384 எனில் இலாபம் மற்றும் இலாப சதவீதத்தைக் காண்க.
Q37. ரூ. 700 மதிப்புள்ள மிதிவண்டியானது ரூ. 50 செலவு செய்து மேம்படுத்தப்படுகிறது. எனில் இலாபம் 5% கிடைக்க என்ன விலைக்கு விற்க வேண்டும்?
Q38. நட்டமானது விற்பனை விலையில் ⅓ பங்கு எனில் நட்ட சதவீத த்தைக் காண்க?
Q39. ரூ. 1320 க்கு ஒரு டேபிளை விற்கும் போது 10% இலாபம் கிடைக்கிறது எனில் அந்த டேபிளின் அடக்க விலையைக் காண்க.
Q40. ரூ. 1080 க்கு ஒரு மின்விசிறியை விற்கும் போது 10% நட்டம் ஏற்படுகிறது எனில் அந்த மின்விசிறியின் அடக்க விலையைக் காண்க.
Q41. ஒரு நாற்காலியை ரூ. 1560 க்குவிற்கும் போது 20% இலாபம் கிடைக்கிறது எனில் அதன் அடக்க விலையைக் காண்க.
Q42. விற்ற விலையானது அடக்க விலையில் ⅔ பங்கு எனில் கிடைக்கும் இலாப (அ) நட்ட % ஐக் காண்க.
Q43. விற்ற விலையானது அடக்க விலையில் 4/3 பங்கு எனில் கிடைக்கும் இலாப (அ) நட்ட % ஐக் காண்க.
Q44. ஒரு கூட்டுத்தொடரின் 97வது உறுப்பின் 97 மடங்கும், 103 வது உறுப்பின் 103 மடங்கும் சம ம் எனில் 200வது உறுப்பைக் காண்க.
Q45. -3, -3, -3,... என்ற தொடர் வரிசையானது...
Q46. a²bc, b²ca, c²ab இன் மீ.பொ. பெ. காண்க.
Q47. ஒரு நகரத்திலுள்ள 25 தெருக்களில் மரக்கன்றுகளை நட ஒரு தொண்டு நிறுவனம் பின்வருமாறு முடிவெடுத்துள்ளது. முதல் தெருவில் ஒரு மரக்கன்றும், இரண்டாம் தெருவில் இரண்டு மரக்கன்றும், மூன்றாம் தெருவில் நான் கு மரக்கன்றும், நான் காவது தெருவில் எட்டு மரக்கன்றும் இவ்வாறாக தொடர்ந்து நடப்படுகின்றன. எனில் அவ்வேலையை செய்து முடிக்க எத்தனை மரக்கன்றுகள் தேவைப்படும்?
Q48. 8 ஆண்கள் மற்றும் 12 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பார்கள். அதே வேலையை 6 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் 14 நட்களில் செய்து முடிப்பார்கள். எனில் 1 ஆண் மட்டும் தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
Q49. ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கமானது அதன் குத்துயரத்தை விட 4 செ.மீ. அதிகம். மேலும் அதன் பரப்பு 48 செ.மீ. எனில் அதன் குத்துயரத்தைக் காண்க.
Q50. ஒரு வருட த்திற்கு முன்பு தந்தையின் வயதானது தனது மகனின் வயதைப் போல 8 மடங்கு ஆகும். தற்பொழுது தந்தையின் வயதானது மகனின் வயதின் வர்க்கத்திற்கு சம ம் எனில் தற்பொழுது அவர்களது வயதுகளின் கூடுதலைக் காண்க.