Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மட்டும் இன்புறூவும் இன்சொ லவர்க்கு - இதில் உள்ள அளபெடைச் சொல்லைக் கண்டறிக.
Q2. பொருத்துக :
A) அமர்ந்து 1. துன்பம்.
B) அணி 2. மறுபிறப்பு
C) சிறுமை 3. விரும்பி
D) மறுமை 4. அழகு
Q3. காயும் ஒரு நாள் கனியாகும் நம் கனவும் ஒரு நாள் நனவாகும் என்று புத்துயிர் ஊட்டியவர் யார்?
Q4. சரியான வாக்கியத்தைக் கண்டறிக :
1. கியூரி அம்மையார் இங்கிலாந்து நாட்டில் 1887ல் பிறந்தார்.
2. பியூரி கியூரியும், மேரி கியூரியும் முதன்முதலில் கண்டுபிடித்த தனிம்ம் - ரேடியம்
3. மேரி கியூரி இரண்டாவது முறையாக நோபல் பரிசு பெற்ற ஆண்டு - 1911
4. செயற்கை கதிவீச்சுப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் - ஜோலியட் கியூரி , ஐரின்.
Q5. மழையே மழையே வா வா நல்ல வானப் புனலே வா வா இதில் உள்ள இலக்கணக் குறிப்பைத் தேர்க.
Q6. ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - இதில் உள்ள வேர்ச்சொல்லைத் தேர்க.
Q7. பொருத்துக :
A) டால்ஸ்டாய் 1. ஆங்கில நாடக ஆசிரியர்
B) பிளாட்டோ 2. ரஷ்ய நாட்டு எழுத்தாளர்
C) ஷேக்ஸ்பியர் 3. வடமொழி நாடக ஆசிரியர்
D) காளிதாசர் 4. கிரேக்கச் சிந்தனையாளர்.
Q8. கணிமேதாவியரின் காலம் எனப்படுவது ………………
Q9. பின்வரும் சொற்தொடர்களை கவனித்து தவறானதைக் கண்டறிக.
1. செய்யும் தொழிலே தெய்வம் - திரு.வி.க.
2. மக்கள் கவிஞர் - பாரதிதாசன்.
3. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் - செங்கப்படுத்தான் காடு.
4. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் - காந்தியக் கவிஞர்.
5. பூமிப் பந்து என்ன விலை உன் புகழைத் தந்து வாங்கும் விலை - பாரதிதாசன்.
Q10. தாராசுரம் கோயிலின் கூம்பிய விமானத்தோற்றமும், இரதம் போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளன - என்று கூறியவர் யார்?
Q11. பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியில்தான் பண்ணினானே குணக்கடலே அருட்கடலே - இதில் கோடிட்ட சொல்லுக்குப் பொருந்துவது எவை எனக் கண்டறிக.
Q12. அம்மானை என்ற விளையாட்டை …………………..விளையாடுவார்கள்.
Q13. பொருத்துக.
A) டெலிபோன் 1. வானொலி
B) ரேடியோ 2. தொலைக்காட்சி
C) டி.வி. 3. குவளை
D) தம்பளர் 4. தொலைபேசி
Q14. கூற்றுகளை ஆராய்க : கூற்று (A) : ஆதலால் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி.
காரணம் (R) : பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களில் சீர்திருத்த கருத்துக்களை பரப்பியவர் உடுமலை நாராயண கவி.
Q15. சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி -- இந்நூல்களை எழுதியவர் யார்?
Q16. இராமாயணத்தில் "சுந்தர காண்டம்" எத்தனையாவது காண்டம்?
Q17. ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடுக்க்க் காண்பது யோகியர் உள்ளம் - இப்பாடலடிகள் இடம்பெறும் நூலைக் காண்க.
Q18. என்பி லதனை வெயில் போலக் காயுமே அன்பி லதனை அறம் - என்னும் குறட்பா உணர்த்துவது...
Q19. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
பட்டியல் 1 பட்டியல் 2
A) சேய் 1. கொடை
B) செய் 2. தூரம்
C) வண்மை 3. வயல்
D) ஞாலம் 4. உலகம்
Q20. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலகமாகக் கொண்டு விளங்கும் நூல் எது?
Q21. நாய்க்கால் சிறுவிரல் போல் ந்ன் கணியராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம் - என்னும் வரிகளுக்குத் தொடர்பு உள்ளவர் யார்?
Q22. கடம் என்னும் சொல் குறிப்பது...
Q23. சலதி என்பதன் பொருள் ………………. .
Q24. பின்வரும் தொடர்களை ஆராய்ந்து தவறானதைத் தேர்க.
1. பறவைகளை ஐந்து வகையாக பிரிக்கலாம்.
2. கஞ்சிராங்குளம் பறவைகள் சரணாலயம் - தஞ்சாவூர்.
3. நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராக்சின் எனும் வலி நீக்க மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
4. இந்திய அரசு 1982 வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் உள்ளது.
Q25. பொருத்துக.
A) Instict - 1. பாசறை
B) Green Rooms - 2. இயற்கை வனப்பு
C) Aesthetic - 3. இயற்கை அறிவு
D) Classical language - 4. உயிர் நூல்
E) Biology - 5. உயர் தனிச் செம்மொழி
Q26. கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழை செம்மொழியாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றிய ஆண்டு...
Q27. சங்கு என்பது ………….. குற்றியலுகரம்.
Q28. இறைவன் அருளைப் பெறுவதற்காகவும், இறைவனின் திருவருளால் பாடப்பட்டதாகவும் கருதப்படும் நூல் எது?
Q29. மதுரையில் நான் காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்கள் யார்?
1. பாசுகர சேதுபதி - பாண்டித்துறை
2. பரிதிமாற் கலைஞர் - வ.வே.சு. ஐயர்.
3. இராமலிங்கனார்.
Q30. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனித்து பொருத்தமான விடையைத் தேர்க.
1. தலைமுறைகள் பல கழித்தோம் குறை களைந்தோமில்லை என்று கூறியவர் - பாரதிதாசன்.
2. எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் எல்லாரும் நாணிடவும் வேண்டும் - பாரதியார்.
3. காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் - பாரதிதாசன்.
Q31. நாவிற் பொருந்திய பூங்கொடி, பொய்யாக்குலக்கொடி இக்கூற்றுகள் எந்த நதியைப் பற்றியது?
Q32. அட்டவணை 1ஐ, அட்டவணை 2உடன் பொருத்தி விடை காண்க.
பட்டியல் 1 பட்டியல் 2
A) செலவொழியாவழி 1. உரிச்சொற்றொடர்
B) வழிக்கரை 2. ஆறாம் வேற்றுமைத் தொகை
C) பெருமையறிந்து 3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
D) மல்லலம் குருத்து 4. அன்மொழித் தொகை
E) அங்கணர் 5. இரண்டாம் வேற்றுமைத் தொகை.
Q33. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனித்து சரியான விடையைக் கூறுக.
1. அழுது அடியடைந்த அன்பர் - மாணிக்கவாசகர்.
2. மாணிக்கவாசகர் எழுப்பிய கோவில் உள்ள இடம் - மதுரை.
3. சூலை என்னும் கொடிய நோயால் ஆட்கொள்ளப் பெற்றவர் - மாணிக்கவாசகர்.
4. திருவாசகத்தில் 658 பாடல்கள் உள்ளன.
Q34. பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே என்றவர் யார்?
Q35. பொருத்துக :
A) இடுகுறிப் பொதுப் பெயர் 1. மரங்கொத்தி
B) இடுகுறி சிறப்புப்பெயர் 2. பறவை
C) காரணப் பொதுப் பெயர் 3. காடு
D) காரணச் சிறப்புப் பெயர் 4. பனை
Q36. காமராசருக்கு மத்திய அரசு வழங்கிய உயரிய விருது என்ன?
Q37. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
Q38. பொருத்துக :
A) காஞ்சி 1. சுங்குடிப் புடவைகள்
B) திருப்பூர் 2. கண்டாங்கிச் சேலைகள்
C) மதுரை 3. போர்வைகள்
D) உறையூர் 4. பின்னலாடைகள்
E) சென்னிமலை 5. பட்டாடைகள்
Q39. குளிரில் வாடிய மயிலுக்குப் போர்வை போர்த்திய வள்ளல்...
Q40. உயிர் குறில், உயிர்மெய்குறில் -- ஒலிக்கும் மாத்திரையின் அளவு என்ன?
Q41. களவழி நாற்பது - இதை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது எது?
Q42. கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தெரிவு செய்க :
Q43. தமிழகத்தின் "வேர்ட்ஸ்வொர்த்" (Wordsworth) என புகழப்படும் கவிஞர் யார்?
Q44. துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் சுவை சொட்டும் சந்த நயம் தோய்ந்திருக்கும் என்று கூறியவர்...
Q45. புதுக்கவிதை வளர்ச்சியில் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கு யாருடையது?
Q46. கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்உடையர் கல்லா தவர் - இக்குறட்பாவில் வந்துள்ள நயங்களைக் கண்டறிக.
Q47. கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திடலாம் பெற்ற பேறு - இதில் வந்துள்ளது...
Q48. சரியான பிரித்தறிதலை கண்டறிக.
Q49. பொருத்துக :
A) குறிஞ்சி - 1. ஊடலும் ஊடல் நிமித்தமும்
B) முல்லை - 2. இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
C) மருதம் - 3. பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
D) நெய்தல் - 4. புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
E) பாலை - 5. இருத்தலும் இருத்தல் நிமித்தலும்
Q50. பொருளுரை என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவது எது?